என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
சிட்ரோயன் நிறுவனத்தின் புது விற்பனை மையங்கள் ஆறு நகரங்களில் திறக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா முழுக்க விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறக்கும் பணிகளில் சிட்ரோயன் நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது. சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எஸ்யுவி மாடலாக சி5 ஏர்கிராஸ் ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த நிலையில், சிட்ரோயன் நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை ஆமதாபாத் நகரில் திறந்தது. தற்போது, பூனே, ஐதராபாத், கொல்கத்தா, டெல்லி, கொச்சி மற்றும் குருகிராம் என ஆறு புது நகரங்களில் சிட்ரோயன் தனது விற்பனை மையங்களை திறந்துள்ளது.

புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இத்துடன் பியல் வைட், குமுலஸ் கிரே, டிஜூசா புளூ மற்றும் பெர்லா நெரா பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.
அதிரடி என்ஜின் கொண்ட இரண்டு புது சூப்பர் கார் மாடல்களை அறிமுகம் செய்ய லம்போர்கினி திட்டமிட்டு இருக்கிறது.
சூப்பர் கார் மாடல்களை உற்பத்தி செய்து வரும் லம்போர்கினி நிறுவனம் வி12 என்ஜின் கொண்ட இரண்டு புது மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020 ஆண்டு விற்பனையில் அதிக வளர்ச்சி பெற்றதை தொடர்ந்து மேலும் புது மாடல்களை அறிமுகம் செய்ய லம்போர்கினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹரிகேன் சூப்பர் டிரோபியோ ஆம்லோகேடோ மாடலின் வினியோகம் இந்த ஆண்டு துவங்கும் என்றும் இதை தொடர்ந்து வி12 என்ஜின் கொண்ட இரண்டு மாடல்களை லம்போர்கினி அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இரண்டு புது மாடல்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

இரு மாடல்களில் ஒன்று எலெக்ட்ரிக் முறையில் இயங்கும் சூப்பர்கேபாசிட்டர் சிஸ்டம் கொண்டிருக்கும் என லம்போர்கினி நிறுவன தலைவர் ஸ்டீபன் வின்கில்மேன் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இதே போன்ற சிஸ்டம் லம்போர்கினி சியன் எப்கேபி 37 ஹைப்பர்கார் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா தொற்று காலக்கட்டத்திலும் லம்போர்கினி நிறுவனம் உலகம் முழுக்க 7430 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன்மூலம் லம்போர்கினி நிறுவனத்தின் லாபம் ரூ. 13,924 கோடியாக இருந்தது. லம்போர்கினி நிறுவன வரலாற்றில் இத்தகைய லாபம் ஈட்டுவது இதுவே இரண்டாவது முறை ஆகும்.
ஆடி நிறுவனத்தின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் விலை ரூ. 79.06 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.
புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 349 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தில் இந்த காரின் வெளிப்புறம் பிளாக்டு-அவுட் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி, ஸ்லோபிங் ரூப்லைன், பிளாக்டு-அவுட் ORVM-கள், பெரிய அலாய் வீல்கள் உள்ளன.
உள்புறம் கார்பன்-பைபர் மற்றும் அல்கான்ட்ரா இன்சர்ட்கள், விர்ச்சுவல் காக்பிட், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி-சோன் கிளைமேட் கண்ட்ரோல், பிலாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் நிறுவனம் புதிய டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. டிரெடன்ட் 660 என அழைக்கப்படும் புது மாடலுக்கான டீசரை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டு உள்ளது.
டீசர் வீடியோவில், புது மோட்டார்சைக்கிள் வெளியீடு மிக விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் #GuessTheDate ஹேஷ்டேக், புது டிரைடென்ட் 660 எப்போது இந்தியா வரும் என்ற வாசகம் கொண்டுள்ளது. புதிய டிரைடென்ட் 660 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும்.

டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளில் 660 சிசி இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.
இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் டிஎப்டி டிஸ்ப்ளே, ஆப்ஷனல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கும் பழைய வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் 15 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பழைய வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. புதிய கட்டணம் அக்டோபர் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி 15 ஆண்டுகள் பழைய காரை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். 15 ஆண்டுகள் பழைய இருசக்கர வாகனத்திற்கு ரூ. 1000 பதிவு கட்டணம் ஆகும். இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கான கட்டணம் முறையே ரூ. 10 ஆயிரம் மற்றும் ரூ. 40 ஆயிரம் ஆகும்.

பதிவு சான்றிதழை புதுப்பிக்க தாமதம் ஏற்பட்டால், அபராதம் வசூலிக்கப்படும். தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ. 300 அபராதம் செலுத்த வேண்டும். கார்களுக்கான அபராதம் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
15 ஆண்டுகளுக்கும் பழைய வாகனங்களுக்கான புதுப்பித்தல், பதிவு மட்டுமின்றி வாகனங்களின் தகுதி சான்று (FC) பெறுவதற்கான கட்டணம் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 400 முதல் ரூ. 500 ஆக மாற்றப்பட்டு இருக்கிறது. கார்களுக்கான கட்டணம் ரூ. 800 முதல் ரூ. 1000 ஆகும்.
தகுதி சான்றை புதுப்பிப்பதற்கான கட்டணம் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 1000, கார்களுக்கு ரூ. 7500 ஆகும். புதிய கட்டண முறைக்கான அறிவிப்பு, கடந்த வாரம் தன்னார்வ வணிக மற்றும் பொதுத்துறை வாகனங்கள் நவீனமயமாக்கல் திட்டம் மக்களவையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியாகி இருக்கிறது.
டீடெல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மொபெட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்திய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டீடெல், இந்திய சந்தையில் குறைந்த வேகத்தில் செல்லும் புது ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. டீடெல் ஈசி பிளஸ் என அழைக்கப்படும் புது ஸ்கூட்டர் டெலிவரி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
புதிய ஈசி பிளஸ் ஸ்கூட்டரை டீடெல் வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 1,999 ஆகும். இந்த ஸ்கூட்டர் பற்றிய விவரங்களை ரைடு ஆசியா எக்ஸ்போ நிகழ்வில் டீடெல் வெளியிட்டது. குறைந்த வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டரில் 20ஏஹெச் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

டீடெல் ஈசி பிளஸ் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
குறைந்த அளவு பாடி பேனல்களை கொண்டுள்ள ஈசி பிளஸ் ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பில் இருவர் அமரும் வகையில் உள்ளது. மேலும் இதில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது புது எம்பிவி மாடலான ஸ்டாரியா புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் சொகுசு எம்பிவி மாடல் ஸ்டாரியா புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த எம்பிவி மாடல் 2021 அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்டாரியா மாடல் சொகுசு, சவுகரியம், அதிக இடவசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

இந்த மாடலில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடல் 18 இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. பின்புறம் வித்தியாச தோற்றம் கொண்டிருக்கும் ஸ்டாரியா மாடலில் செங்குத்தான டெயில் லேம்ப்கள் உள்ளன.
புதிய ஹூண்டாய் ஸ்டாரியா மாடல் 7,9, மற்றும் 11 இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் உள்புறம் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 64 நிறங்களை கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங் வழங்கப்படுகிறது.
அன்றாடம் கார் பயன்படுத்துவோர் அதற்கு தேவைப்படும் எரிபொருளை சேமிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக சொந்த வாகனங்களில் அலுவலகம் மற்றும் இதர இடங்களுக்கு சென்று வருவோர் எரிபொருளுக்கென தனி வருமானம் ஈட்ட வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இந்த சூழலில் கார் பயன்படுத்துவோர் அதற்கு தேவைப்படும் எரிபொருளை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
எரிபொருளை சிக்கனப்படுத்த கார் என்ஜினை ஸ்டார்ட் செய்த பின்பு, அதிக ஆக்சிலரேட் செய்யாமல் கியரை என்கேஜ் செய்து பின்பு மிதமாக ஆக்சிலரேட் கொடுத்து வாகனத்தை நகர்த்துவதன் மூலம் எரிபொருளை சேமிக்கலாம். என்ஜினின் வேகத்திற்கேற்ப கியர் மாற்றுவதை கடைபிடிப்பதன் மூலம் கியர் ரேஷியோ சரியாக இருக்கும், இதை சரியாக பின்பற்றுவதன் மூலம் மூலம் எரிபொருள் சேமிக்கலாம்.

சிக்னலில் வாகனம் நிற்கும் போது என்ஜினை ஆப் செய்து விட்டு பச்சை விளக்கு எறிய 15 நொடிகள் இருக்கும் போது என்ஜினை ஸ்டார்ட் செய்து பின்பு வாகனத்தை இயக்கலாம். வாகனம் ஓட்டும்போது கிளட்ச் பெடலின் மீது கால் வைத்து ஓட்டுவதைத் தவிர்த்து வந்தால் என்ஜினின் சக்தி வீணாவதை தவிர்க்க முடியும். அதோடு கிளட்சின் தேய்மானமும் குறையும்.
டயரின் காற்றழுத்தத்தை முறையாக பராமரிப்பதன் மூலம் என்ஜினின் சக்தி விரயமாவதை தவிர்க்க முடியும். அதோடு டயரின் ஆயுள் காலத்தையும் அதிகரிக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் என்ஜின் ஆயில் மாற்றுவதையும், பியூவல் சிஸ்டத்தை சுத்தம் செய்வது, மாற்றுவதையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் எரிபொருள் வீணாவதை தவிர்க்க முடியும். என்ஜினின் சப்தமும் அதிகமாகாமல் இருக்கும்.
தேவையான போது மட்டும் ஏ.சி. உபயோகித்து மற்ற நேரங்களில் தவிர்த்து வந்தல் எரிபொருள் சேமிப்பாகும். மைலேஜும் கிடைக்கும். பிரேக் சிஸ்டத்தை முறையாக பராமரிப்பதன் மூலம் `வீல் ஜாம்’ ஆவதை தவிர்க்கலாம். வாகனத்தில் பயணம் செய்யும்போது இருக்கைக்கு ஏற்றவாறு ஆட்கள் பயணம் செய்ய வேண்டும். அதிகபடியான ஆட்கள் பயணம் செய்யும் போது என்ஜின் அதிக பாரம் இழுப்பதால், எரிபொருள் அதிகம் செலவாகும்.
சர்வதேச சந்தையில் 13 புது எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
ஆடம்பர கார் உற்பத்தியாளரான பிஎம்டபிள்யூ தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலான ஐஎக்ஸ்-ஐ சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் எக்ஸ்டிரைவ் 40 மற்றும் எக்ஸ்டிரைவ் 50 என இரு வெர்ஷன்களில் கிடைக்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்து இருக்கிறது.

இதுமட்டுமின்றி சர்வதேச சந்தையில் 2030 ஆண்டுக்குள் 13 முழுமையான எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக பிஎம்டபிள்யூ அறிவித்து உள்ளது. அதன்படி 2023 ஆண்டுக்குள் ஒவ்வொரு முக்கிய பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டு இருக்கிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 20 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ இலக்கு நிர்ணயித்து உள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ ஒட்டுமொத்த விற்பனையில் 50 சதவீதம் எலெக்ட்ரிக் மாடல்களாக மாறும் என கணித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிளை புது புகை விதிகளுக்கு ஏற்ற அப்டேட்களுடன் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2021 எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 1.13 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 19 ஆயிரம் அதிகம் ஆகும்.
தோற்றத்தில் புது மாடல் பார்க்க பிஎஸ்4 வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மாடலில் 200சிசி சிங்கில் சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 18.1 பிஹெச்பி பவர், 16.15 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புதிய பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மாடல் முந்தைய பிஎஸ்4 மாடலை விட 4 கிலோ எடை அதிகமாக இருக்கிறது. இதன் மொத்த எடை 154 கிலோ ஆகும். இந்த மாடலின் என்ஜின் பியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது முந்தைய மாடலை விட அதிக மைலேஜ் வழங்குகிறது. இவை தவிர புது மாடலில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.
இந்த மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல், டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டன்-பை-டன் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குஷக் எஸ்.யு.வி. மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் எஸ்.யு.வி. மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய குஷக் எஸ்.யு.வி. இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் வெளியாகும் முதல் மாடல் ஆகும். இந்த எஸ்.யு.வி. போக்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது இந்திய சந்தைக்கென உருவாகி இருக்கிறது.
புதிய ஸ்கோடா கார் எல்.இ.டி. ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப் யூனிட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், கார்னெரிங் லைட்கள், இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பிற்கு ஸ்கோடா குஷக் மாடலில் ஹில்-ஹோல்டு அசிஸ்ட், 6 ஏர் பேக், ஏபிஎஸ், இபிடி, இபிஎஸ், மல்டி-கொலிஷன் பிரேக், டி.பி.எம்.எஸ்., ரியர் பார்கிங் சென்சார், ரியர்வியூ கேமரா, ISOFIX உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
ஸ்கோடா குஷக் மாடல் போக்ஸ்வேகன் குழுமத்தின் 1.0 டி.எஸ்.ஐ. யூனிட், 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. இவோ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கிறது. 1.0 லிட்டர் யூனிட் 113 பி.ஹெச்.பி. பவர், 175 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இதன் 1.5 லிட்டர் யூனிட் 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் சப்-4 மீட்டர் எஸ்.யு.வி.-யான அர்பன் குரூயிசர் மாடல்கள் திரும்ப பெறப்படுகின்றன.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது சப்-4 மீட்டர் எஸ்.யு.வி.-யான அர்பன் குரூயிசர் மாடலை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது. ஜூலை 28, 2020 முதல் பிப்ரவரி 11, 2021 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 9,498 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.

ஓட்டுனர் இருக்கையுடன் வரும் ஏர்பேக் மாட்யூலில் கோளாறு இருக்கலாம் என்ற காரணத்தால் கார்கள் திரும்ப பெறப்படுவதாக டொயோட்டா இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த பாதிப்பு கொண்ட வாகன உரிமையாளர்களை டொயோட்டா தொடர்பு கொண்டு வாகனத்தை இலவசமாக சரி செய்து வழங்கும்.
அர்பன் குரூயிசர் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் முன்புறம் இரட்டை ஏர் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 103 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.






