என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு மீண்டும் துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. EQC 400 மாடலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQC 400 எலெக்ட்ரிக் கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 99.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     மெர்சிடிஸ் பென்ஸ் EQC

    புதிய பென்ஸ் EQC 400 மாடல் சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. முதற்கட்டமாக 50 EQC யூனிட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. இவை அனைத்தும் கடந்த ஆண்டு இறுதியிலேயே விற்றுத் தீர்ந்தன. தற்போது இரண்டாம் கட்ட EQC யூனிட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்து இருக்கிறது.

    இம்முறை எத்தனை யூனிட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய EQC மாடல் பென்ஸ் GLC மாடல் உருவாகும் அதே பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. அதன்படி புது மாடலிலும் GLC மாடல்களில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 65 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கிறது. இவை டியாகோ, டிகோர், நெக்சான் மற்றும் ஹேரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

     டாடா  கார்

    அல்ட்ரோஸ், சபாரி போன்ற மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை. தற்போதைய அறிவிப்பின் படி பயனர்கள் எக்சேன்ஜ் சலுகை, கார்ப்பரேட் திட்டம் வடிவில் பெறலாம். டியாகோ மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் நுகர்வோர் சலுகை, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.

    டிகோர் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் நுகர்வோர் சலுகையும், ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. நெக்சான் மாடல் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள சலுகையுன் கிடைக்கிறது. எனினும், இது டீசல் வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 
    பெனலி நிறுவனத்தின் 2021 TRK502X மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலை விட குறைந்த விலையில் அறிமுகமாகி இருக்கிறது.


    பெனலி நிறுவனம் 2021 TRK502X பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் துவக்க விலை ரூ. 5.19 லட்சம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் மெட்டாலிக் டார்க் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இது முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 31 ஆயிரம் குறைவு ஆகும். 

    புதிய பெனலி TRK502X மாடல் பியூர் வைட் மற்றும் பெனலி ரெட் நிறங்களிலும் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 5.29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை தான் என்றும், விரைவில் விலை உயர்வு அறிவிக்கப்பட இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     2021 பெனலி TRK502X

    2021 பெனலி TRK502X மாடலில் 499சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 46.8 பிஹெச்பி பவர், 46 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புது மாடலில் பேக்லிட் ஸ்விட்ச்-கியர், அலுமினியம் பிரேம் நக்கிள் கார்டுகள், புது ஹேன்டில்பார் க்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடல் பெரிய விண்ட்ஸ்கிரீன், முன்புறம் 320எம்எம் புளோட்டிங் டிஸ்க், 2 பிஸ்டன் கேலிப்பர், பின்புறம் 260எம்எம் 1 பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. 2021 பெனலி TRK502X மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் ஆகும். 
    இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஜீப் ராங்லர் மாடல் பிரீமியம் விலையில் அறிமுதம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஜீப் நிறுவனம் தனது புதிய ராங்லர் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 ஜீப் ராங்லர் மாடல் தற்போது சிகேடி முறையில் இந்தியா கொண்டுவரப்பட்டு, இங்குள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

     ஜீப் ராங்லர்

    உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஜீப் ராங்லர் மாடல் துவக்க விலை ரூ. 53.90 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 57.9 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ராங்லர் மாடல்களின் விலையை விட ரூ. 10 லட்சம் குறைவு ஆகும். இந்த மாடல்களின் உற்பத்தி துவங்கிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் 2021 ஆக்டேவியா மாடல் இந்திய வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஸ்கோடா இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை இதுவரை பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யவில்லை. அந்நிறுவனத்தின் பிரபல செடான் மாடலான ஆக்டேவியா புது பொலிவுடன் விரைவில் இந்தியா வரும் என பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தது.

    அந்த வரிசையில், புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் இரண்டு மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்வீஸ் மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தெரிவித்து இருக்கிறார். 

     ஸ்கோடா

    முன்னதாக புதிய ஆக்டேவியா மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. மேலும் புதிய தலைமுறை ஆக்டேவியா மாடல் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இந்த மாடலின் முன்புறம் புது வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது பிஎஸ்4 மாடலைவிட மெல்லியதாக காட்சியளிக்கிறது.

    இத்துடன் முன்புற பம்ப்பர் டிசைன் மாற்றப்பட்டு, புதிய மாடலில் அகலமான ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப் மற்றும் மெல்லிய குரோம் ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லேம்ப்களும் மெல்லிய எல்இடி யூனிட்கள் ஆகும். பின்புறம் கூர்மையான பூட்-லிட் வழங்கப்படுகிறது. இத்துடன் புது அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
    ஆடி நிறுவனம் தனது எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.


    ஆடி நிறுவனம் இந்தியாவில் தனது எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் மார்ச் 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவித்து உள்ளது. புதிய ஆடி கார் சிபியு முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு இதுவரை துவங்கப்படவில்லை. எனினும், வெளியீட்டை தொடர்ந்து இதன் வினியோகம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் சிங்கில்-பிரேம் கிரில், எஸ்5 பேட்ஜிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்., ஹெட்லேம்ப், காண்டிராஸ்ட் நிறத்தில் ORVMகள், பாக் லைட்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் பெரிய அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், குவாட்-டிப் எக்சாஸ்ட் மற்றும் ஸ்லோபிங் ரூப்-லைன் வழங்கப்படுகிறது.

     ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்

    புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 349 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது ஆட்டோ, கம்பர்ட், டைனமிக் மற்றும் இன்டிவிஜூவல் போன்ற டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் விற்பனை துவங்கிய ஒரே ஆண்டில் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.


    2020 ஹூண்டாய் கிரெட்டா மாடல் இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. 2020 கிரெட்டா மாடல் இந்தியாவில் 1.21 லட்சத்திறஅகும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்து உள்ளது.

    புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா மாடல் 2020 பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் இந்த மாடலை சுமார் 1.21 லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கி இருக்கின்றனர். இதில் கிரெட்டா SX மற்றும் SX(O) வேரியண்ட்கள் மட்டும் 51 சதவீதம் விற்பனையாகி இருக்கிறது. 

     ஹூண்டாய் கிரெட்டா

    இந்திய சந்தையில் விற்பனையான மொத்த கிரெட்டா மாடல்களில் 60 சதவீத யூனிட்கள் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டவை ஆகும். அதாவது 72 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் டீசல் வேரியண்ட்கள் ஆகும். பிஎஸ்6 புகை விதிகள் அமலான போதும், டீசல் என்ஜின் ஆதிக்கம் தொடர்வதற்கு இதுவே சான்றாக அமைகிறது. 

    மேலும் இதுவரை விற்பனையான யூனிட்களில் 20 சதவீதம் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டவை ஆகும். இந்த மாடல் பல்வேறு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 5.8 லட்சத்திற்கும் அதிக கிரெட்டா யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
    ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய விற்பனையில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. விற்பனை மட்டுமின்றி நாடு முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் வாடிக்கையாளர்கள் முன்பை விட மும்மடங்கு அதிகளவில் விவரங்களை கேட்டு செல்வதாக ஒகினவா தெரிவித்து உள்ளது. இந்த வளர்ச்சிக்கு இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதே காரணம் என ஒகினவா தெரிவித்தது.

    முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஒகினவா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை 35 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. மேலும் அதிவேக இ ஸ்கூட்டர்கள் பிரிவில் அதிக யூனிட்களை விற்பனை செய்த நிறுவனங்கள் பட்டியலில் ஒகினவா இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது. 

     ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100-ஐ நெருங்கி வரும் நிலையில், இருசக்கர வாகனம் வைத்திருப்போர் எளிய குறைந்த விலை பயண முறைகளுக்கு மாற துவங்கியுள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் போது சுற்றுச்சூழலில் கார்பன் மாசு பெருமளவு குறையும்.  

    தற்போது ஒகினவா நிறுவனம் ஆறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை ரூ. 50 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.14 லட்சம் ஆகும். இவற்றில் குறைந்த வேகத்தில் செல்லும் ஸ்கூட்டர்களான ஒகினவா ஆர்30, லைட் மற்றும் டூயல் போன்ற மாடல்களும் அடங்கும்.

    இதுதவிர ஒகினவா ரிட்ஜ் பிளஸ், பிரைஸ் ப்ரோ மற்றும் ஐபிரைஸ் பிளஸ் என மூன்று அதிவேக மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இத்துடன் வரும் மாதங்களில் குரூயிசர் மேக்சி ஸ்கூட்டர் மற்றும் ஒகி100 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என இரண்டு புது மாடல்களை அறிமுகம் செய்ய ஒகினவா திட்டமிட்டு இருக்கிறது.
    சிட்ரோயன் நிறுவனம் தனது புதிய சி5 ஏர்கிராஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
    சிட்ரோயன் நிறுவனத்தின் சி5 ஏர்கிராஸ் மாடல் இந்தியாவில் ஏப்ரல் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் சி5 ஏர்கிராஸ், சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் மாடல் ஆகும். புதிய மிட்-சைஸ் எஸ்யுவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும்.

    புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல்கள் இந்தியாவில் செயல்படும் பத்து லா மைசன் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய மாடல் ஷோரூம் ஆன் வீல்ஸ் மூலம் பல்வேறு நகரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதும், இந்த எஸ்யுவி மாடலுக்கான வினியோகம் துவங்கும் என தெரிகிறது.

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    சி5 ஏர்கிராஸ் மாடலில் கிராஸ்ஓவர் போன்ற ஸ்டான்ஸ், ட்வின்-ஸ்லாட் முன்புற கிரில், டூயல் பீம் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லேம்ப், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், குரோம் பாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் பைப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இத்துடன் பியல் வைட், குமுலஸ் கிரே, டிஜூசா புளூ மற்றும் பெர்லா நெரா பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.
    பென்ட்லி நிறுவனம் 2021 பென்ட்யகா பெர்பார்மன்ஸ் எஸ்யுவியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    2021 பென்ட்லி பென்ட்யகா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பெர்பார்மன்ஸ் எஸ்யுவி மாடல் துவக்க விலை ரூ. 4.10 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவு டெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத்தில் உள்ள விற்பனை குழுக்கள் மூலம் துவங்கி இருக்கிறது. 

    புதிய பென்ட்யகா மாடல் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு முந்தைய மாடலை போன்றே தோற்றம் கொண்டுள்ளது. முன்புறம் செவ்வக வடிவம் கொண்ட முன்புற கிரில், வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் இருபுறங்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     2021 பென்ட்லி பென்ட்யகா

    பின்புறம் மெல்லிய ஒவல் வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள், பெரிய பூட் கிரீஸ், ட்வின் எக்சாஸ்ட் டெயில் பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன. உள்புறம் 10.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உள்ளன.

    புதிய பென்ட்யகா மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 542 பிஹெச்பி பவர், 770 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும்.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய இ கிளாஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட புது இ கிளாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இ கிளாஸ் மாடல் துவக்க விலை ரூ. 63.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த ஆண்டு மெர்சிடிஸ் வெளியிட திட்டமிட்டு இருக்கும் 15 புது மாடல்களில் ஒன்றாக புதிய இ கிளாஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    தோற்றத்தில் புது மாடலில் மேம்பட்ட முன்புறம், புதிய பம்ப்பர், கிரில் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், புது டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. உள்புறம் புதிய MBUX இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹே மெர்சிடிஸ் வாய்ஸ் கமாண்ட் வசதி, 2 யுஎஸ்பி போர்ட்கள், பின்புற சென்டர் கன்சோல் தொடுதிரை வசதி கொண்டுள்ளது.

     மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் பேஸ்லிப்ட்

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார், 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    பாதுகாப்பிற்கு 7 ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பார்கிங் அசிஸ்ட், பார்கோடிரானிக், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா உள்ளது. புதிய மாடல் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 80.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
    கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது.


    கவாசகி இந்தியா நிறுவனம் பிஎஸ்6 நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 14,99,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

    பிஎஸ்6 மாடலில் 998சிசி, லிக்விட் கூல்டு இன்-லைன், 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய நின்ஜா ZX-10R லைம் கிரீன் மற்றும் பிளாட் எபோனி டைப் 2 என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

     கவாசகி நின்ஜா ZX-10R

    மெக்கானிக்கல் மாற்றங்கள் மட்டுமின்றி புது மாடல் முந்தைய வெர்ஷனை விட கூர்மையான தோற்றம் கொண்டுள்ளது. ஸ்டைலிங்கை பொருத்தவரை ஏரோடைனமிக் அப்பர் கவுல், பின்புற டெயில் பகுதியில் புது கவுல் டிசைன், மேம்பட்ட ஹேன்டில்பார், கவாசகி ரிவர்மார்க் வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இது கவாசகி ரைடோலஜி தி ஆப் உடன் இணைந்து செயல்படுகிறது. எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், லான்ச் கண்ரோல், கார்னெரிங் மேனேஜ்மென்ட் பன்ஷன், பவர் மோட்கள், ரைடிங் மோட்கள், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், ஏபிஎஸ், பை-டைரெக்ஷனல் குவிக் ஷாப்டர் உள்ளது.
    ×