என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    கேடிஎம் நிறுவனத்தின் புதிய ஆர்சி200 மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    கேடிஎம் நிறுவனம் தனது ஆர்சி200 மாடலை மேம்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கேடிஎம் ஆர்சி200 மாடல் சிறு மாற்றங்களுடன் அறிமுகமாகும் என தெரிகிறது. அதன்படி புது மாடலில் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் என இருவிதங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

    முன்னதாக புது ஆர்சி200 ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், தற்போது பூனேவில் எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களில் உள்ள புது ஆர்சி200 முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. 

    மாற்றங்களை பொருத்தவரை புது மாடலில் ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல் உள்ளிட்டவை டியூக் 200 மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படுகிறது. இத்துடன் அழகிய தோற்றம் கொண்ட டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படலாம்.

    இத்துடன் புது மாடலில் எல்இடி டெயில் லைட்கள், தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற இன்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல் டிரெலிஸ் சப்-பிரேம் மற்றும் புதிய அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் செட்டப்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம்.

    புதிய மாடலிலும் 199சிசி சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு யூனிட் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 25 பிஹெச்பி பவர், 19 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. பஜாஜ் செட்டாக் மாடல் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் புதிய விலை முறையே ரூ. 1.15 லட்சம் மற்றும் ரூ. 1.20 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது முந்தைய விலையை விட முறையே ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் அதிகம் ஆகும். தற்போது செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் நாட்டின் மற்ற நகரங்களிலும் இதன் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வு தவிர இந்த மாடலில் வேறு மாற்றமும் செய்யப்படவில்லை.

     பஜாஜ் செட்டாக்

    செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, பெரிய சீட் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பஜாஜ் செட்டாக் மாடலில் 4Kw எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார் 16 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 95 கிலோமீட்டர் வரை செல்கிறது. இது ஸ்டான்டர்டு மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் ஆகும்.
    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டார்சைக்கிளை பிரீமியம் விலையில் அறிமுகம் செய்தது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் சிபி500எக்ஸ் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளின் விலை ரூ. 6,87,386 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    புதிய சிபி500எக்ஸ் மாடல் சிபியு முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. இது கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. செமி-பேரிங் டிசைன், உயரமான விண்ட்ஸ்கிரீன், எல்இடி லைட்டிங், நெகடிவ் எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அலாய் வீல்கள் உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

     ஹோண்டா சிபி500எக்ஸ்

    இத்துடன் டூயல்-சேனல் ஏபிஎஸ், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல் மற்றும் ஹோண்டா இக்னிஷன் செக்யூரிட்டி சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய சிபி500எக்ஸ் மாடலில் 471சிசி, 8 வால்வு, லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 பிஹெச்பி பவர், 43.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிபி500எக்ஸ் மாடல் கவாசகி வெர்சிஸ் 650, சுசுகி வி ஸ்டாம் 650 எக்ஸ்டி மற்றும் பெனலி டிஆர்கே 502 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    நிசான் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடலுக்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 95 ஆயிரம் வரையிலான சலுகை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இவை எக்சேன்ஜ் சலுகை, தள்ளுபடி மற்றும் லாயல்டி வடிவில் வழங்கப்படுகின்றன. மேலும் இது மார்ச் 31 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. 

     நிசான் கிக்ஸ்

    சலுகையை பொருத்தவரை ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 20 ஆயிரம் லாயல்டி பலன் வழங்கப்படுகிறது. இந்த பலன்கள் என்ஐசி உள்ள விற்பனையகங்களில் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பகுதி மற்றும் காரின் வேரியண்டிற்கு ஏற்ப சலுகை மதிப்பு வேறுபடும்.

    இந்தியாவில் நிசான் கிக்ஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 105 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் மற்றும் 154 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிளாமர் 100 லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல் விலை ரூ. 73,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பல மாடல்களின் 100 மில்லியன் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. 

    புதிய மில்லியன் எடிஷன் மாடல் டூயல்-டோன் பினிஷ் கொண்டுள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 77,200 ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     ஹீரோ கிளாமர் 100

    டூயல்-டோன் நிறம் தவிர லிமிடெட் எடிஷனில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ-செயில் வசதி, மஸ்குலர் பியூவல் டேன்க் மற்றும் ஸ்ப்லிட்-ஸ்டைல் அலாய் வீல்கள் உள்ளது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 124.7சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 10.7 பிஹெச்பி பவர், 10.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    எலெக்ட்ரிக் சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து டெஸ்லா மற்றும் டாடா பவர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டெஸ்லா இன்க் மற்றும் டாடா பவர் நிறுவனங்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இரு நிறுவனங்கள் இடையே வியாபார கூட்டணி அமைய இருப்பதாக கூறப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கான ஆலையை துவங்க இருக்கிறது. இந்த நிலையில் டாடா பவர் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தையை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தை குறித்து இருநிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

     டாடா மோட்டார்ஸ்

    முன்னதாக ஜனவரி மாத வாக்கில் அமெரிக்க எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா, பெங்களூரு நகரில் டெஸ்லா மோட்டார்ஸ் இந்தியா எனர்ஜி பிரைவேட் லிமிடெட் பெயரில் நிறுவனத்தை பதிவு செய்தது. 

    இரு நிறுவனங்கள் இடையே கூட்டணி அமைவதாக வெளியான தகவல்களுக்கு கடந்த வாரம் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் பதில் அளித்தது. அதில் இரு நிறுவனங்கள் கூட்டணி குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவித்தது.
    ஹோண்டா நிறுவனம் தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிரீமியம் 350சிசி குரூயிசர் மாடலை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. நவம்பர் 25, 2020 முதல் டிசம்பர் 12, 2020 வரையிலான தேதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஹோண்டா ஹைனெஸ் சிபி350 யூனிட்களை ரீகால் செய்கிறது.

    ஹைனெஸ் சிபி350 மாடலின் கியர்பாக்சில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மூலப்பொருள் தொடர் பயன்பாட்டில் கோளாறை ஏற்படுத்தலாம் என ஹோண்டா கண்டறிந்து இருக்கிறது. இதுவரை இதுபோன்ற கோளாறு எந்த மாடலிலும் கண்டறியப்படவில்லை. அந்த வகையில் இது முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என தெரிகிறது.

     ஹோண்டா ஹைனெஸ் சிபி350

    ரீகால் வழிமுறைகள் மார்ச் 23 ஆம் தேதி துவங்குகிறது. ரீகால் செய்ய வேண்டிய யூனிட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை ஹோண்டாவின் பிங்விங் விற்பனையாளர்கள் நேரடியாக அழைப்பு, மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மூலம் நேரடியாக தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பிங்விங் வலைதளம் சென்று தங்களின் வாகன குறியீட்டு எண்ணை பதிவிட்டு வாகனம் இந்த பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை பட்டியலில் இருப்பின் வாடிக்கையாளர்கள் விருப்பம் போல் சர்வீஸ் செய்வதற்கான முன்பதிவை செய்யலாம்.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்பிலென்டர் பிளஸ் மற்றும் பேஷன் ப்ரோ 100 மில்லியன் எடிஷனை அறிமுகம் செய்தது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிலென்டர் பிளஸ் மற்றும் பேஷன் ப்ரோ 100 மில்லியன் எடிஷன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடல் விலையும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய லிமிடெட் எடிஷன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய நச்தையில் 100 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ததை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளது. ஹீரோ ஸ்பிலென்டர் பிளஸ் 100 மில்லியன் எடிஷன் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 67,095 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     ஹீரோ ஸ்பிலென்டர் பிளஸ்

    பேஷன் ப்ரோ 100 மில்லியன் எடிஷன் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 69,200 மற்றும் ரூ. 71,400 ஆகும். 100 மில்லியன் எடிஷன் ரெட் மற்றும்  வைட் நிறங்கள் அடங்கிய டூயல் டோன் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய நிறம் தவிர இரு மாடல்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஸ்பிலென்டர் பிளஸ் மாடலில் 97.2 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 7.9 பிஹெச்பி பவர், 8.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பேஷன் ப்ரோ மாடலில் 113சசி, சிங்கில் சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இது 9 பிஹெச்பி பவர், 9.89 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் 2021 செலரியோ மாடலை இந்த தேதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் செலரியோ ஹேட்ச்பேக் காரின் புது தலைமுறை வேரியண்டை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் நாடு முழுக்க சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த காரின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    இந்த நிலையில், தற்போதைய தகவல்களின் படி புதிய தலைமுறை மாருதி சுசுகி செலரியோ மாடல் மே மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. புதிய செலரியோ மாடல் அளவில் பெரியதாகவும், அதிக இடவசதியுடன் தற்போதைய மாடலை விட பாதுகாப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

     மாருதி சுசுகி செலரியோ

    பல்வேறு மாற்றங்களுடன் வெளியாகும் என்பதால், இதன் விலையும் தற்போதைய வேரியண்டை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். புதிய செலரியோ ஹேட்ச்பேக் மாடல் மாருதி சுசுகியின் ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்மில் மாருதி சுசுகியின் ஸ்விப்ட், வேகன்ஆர் மற்றும் டிசையர் மாடல்கள் உருவாகி இருக்கின்றன.

    புதிய மாடலில் முன்புறம் இரட்டை ஏர் பேக், ஸ்பீடு அலெர்ட்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் எல்இடி லைட்டிங், புதிய அலாய் வீல்கள், மேம்பட்ட டேஷ்போர்டு, ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகியின் புதிய தலைமுறை செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் ஆட்டோ கியர் ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்களை அறிவித்து உள்ளது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்டிரீம் 160ஆர் 100 மில்லியன் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 1,08,750 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ரியர் டிரம் பிரேக் விலை ரூ. 1,03,900 என்றும் டிஸ்க் வேரியண்ட் ரூ. 1,06,950 ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    100 மில்லியன் எடிஷனில் டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டு இருக்கிறது. டூயல் டோன் பினிஷ் ஹெட்லைட் மாஸ்க், பியூவல் டேன்க் மற்றும் பின்புற பேனல்களில் தெளிவாக காட்சியளிக்கிறது. இதன் வெளிப்புற தோற்றம் எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

     ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர்

    புதிய மாடலிலும் 163சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் டூயல் டிஸ்க் பிரேக் கொண்ட ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மாடல் டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்160 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்காசர் மாடல் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஹூண்டாய் நிறுவனம் புத்தம் புதிய அல்தாடர் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது கிரெட்டா எஸ்யுவி-யின் 7 சீட்டர் வேரியண்ட் ஆகும். இந்த மாடல் கிரெட்டா மற்றும் டக்சன் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படுகிறது. புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஸ்பை படங்களில் அல்காசர் மாடல் முற்றிலும் மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த மாடலில் டைமண்ட் கட் அலாய் வீல், டூயல் டிப் எக்சாஸ்ட், ராப்-அரவுண்ட் டெயில் லேம்ப் மற்றும் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லேம்ப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

    முந்தைய ஸ்பை படங்களின்படி ஹூண்டாய் அல்காசர் மாடலில் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு இருக்கைகள் தவிர வேறு எந்த விவரமும் வெளியாகவில்லை. முன்புற டேஷ்போர்டு மற்றும் லே-அவுட் ஹூண்டாய் கிரெட்டாவில் இருந்ததை போன்றே வழங்கப்பட இருப்பது தெரியவந்தது.
    டொயோட்டா நிறுவனம் எக்ஸ் ப்ரோலாக் எலெக்ட்ரிக் கார் டீசரை வெளியிட்டு இருக்கிறது.


    உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய எலெக்ட்ரிக் கார் எக்ஸ் ப்ரோலாக் எனும் பெயர் கொண்டுள்ளது. இந்த கார் மார்ச் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     டொயோட்டா எக்ஸ் ப்ரோலாக்

    தற்போதைய தகவல்களில் புதிய எக்ஸ் ப்ரோலாக் மாடல் e-TNGA பிளாட்பார்மில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பிளாட்பார்ம் பிரண்ட்-வீல் டிரைவ், ரியர்-வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதியை வழங்கும். மேலும் இதை கொண்டு பெரிய அளவில் கிராஸ்ஒவர், மினிவேன் மற்றும் செடான் உள்ளிட்டவைகளை வடிவமைக்க முடியும். இவை அனைத்தும் புதிய பெயர் கொண்டிருக்கும்.

    டீசரின்படி எக்ஸ் ப்ரோலாக் மாடலில் சி வடிவ எல்இடி லைட் வழங்கப்படும் என தெரிகிறது. இதுதவிர இந்த கார் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் உருவாகும் e-TNGA பிளாட்பார்ம் பல்வேறு அளவு கொண்ட பேட்டரிகள் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் அவுட்-புட்களை கையாளும் திறன் வழங்குகிறது.
    ×