search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி செலரியோ
    X
    மாருதி சுசுகி செலரியோ

    2021 மாருதி சுசுகி செலரியோ இந்திய வெளியீட்டு விவரம்

    மாருதி சுசுகி நிறுவனம் 2021 செலரியோ மாடலை இந்த தேதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் செலரியோ ஹேட்ச்பேக் காரின் புது தலைமுறை வேரியண்டை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் நாடு முழுக்க சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த காரின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    இந்த நிலையில், தற்போதைய தகவல்களின் படி புதிய தலைமுறை மாருதி சுசுகி செலரியோ மாடல் மே மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. புதிய செலரியோ மாடல் அளவில் பெரியதாகவும், அதிக இடவசதியுடன் தற்போதைய மாடலை விட பாதுகாப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

     மாருதி சுசுகி செலரியோ

    பல்வேறு மாற்றங்களுடன் வெளியாகும் என்பதால், இதன் விலையும் தற்போதைய வேரியண்டை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். புதிய செலரியோ ஹேட்ச்பேக் மாடல் மாருதி சுசுகியின் ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்மில் மாருதி சுசுகியின் ஸ்விப்ட், வேகன்ஆர் மற்றும் டிசையர் மாடல்கள் உருவாகி இருக்கின்றன.

    புதிய மாடலில் முன்புறம் இரட்டை ஏர் பேக், ஸ்பீடு அலெர்ட்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் எல்இடி லைட்டிங், புதிய அலாய் வீல்கள், மேம்பட்ட டேஷ்போர்டு, ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகியின் புதிய தலைமுறை செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் ஆட்டோ கியர் ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
    Next Story
    ×