search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோண்டா ஹைனெஸ் சிபி350
    X
    ஹோண்டா ஹைனெஸ் சிபி350

    திடீரென ரீகால் செய்யப்படும் ஹோண்டா மோட்டார்சைக்கிள்

    ஹோண்டா நிறுவனம் தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிரீமியம் 350சிசி குரூயிசர் மாடலை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. நவம்பர் 25, 2020 முதல் டிசம்பர் 12, 2020 வரையிலான தேதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஹோண்டா ஹைனெஸ் சிபி350 யூனிட்களை ரீகால் செய்கிறது.

    ஹைனெஸ் சிபி350 மாடலின் கியர்பாக்சில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மூலப்பொருள் தொடர் பயன்பாட்டில் கோளாறை ஏற்படுத்தலாம் என ஹோண்டா கண்டறிந்து இருக்கிறது. இதுவரை இதுபோன்ற கோளாறு எந்த மாடலிலும் கண்டறியப்படவில்லை. அந்த வகையில் இது முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என தெரிகிறது.

     ஹோண்டா ஹைனெஸ் சிபி350

    ரீகால் வழிமுறைகள் மார்ச் 23 ஆம் தேதி துவங்குகிறது. ரீகால் செய்ய வேண்டிய யூனிட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை ஹோண்டாவின் பிங்விங் விற்பனையாளர்கள் நேரடியாக அழைப்பு, மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மூலம் நேரடியாக தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பிங்விங் வலைதளம் சென்று தங்களின் வாகன குறியீட்டு எண்ணை பதிவிட்டு வாகனம் இந்த பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை பட்டியலில் இருப்பின் வாடிக்கையாளர்கள் விருப்பம் போல் சர்வீஸ் செய்வதற்கான முன்பதிவை செய்யலாம்.
    Next Story
    ×