search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கார்களில் எரிபொருள் சேமிக்க இதை செய்யலாம்

    அன்றாடம் கார் பயன்படுத்துவோர் அதற்கு தேவைப்படும் எரிபொருளை சேமிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக சொந்த வாகனங்களில் அலுவலகம் மற்றும் இதர இடங்களுக்கு சென்று வருவோர் எரிபொருளுக்கென தனி வருமானம் ஈட்ட வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இந்த சூழலில் கார் பயன்படுத்துவோர் அதற்கு தேவைப்படும் எரிபொருளை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    எரிபொருளை சிக்கனப்படுத்த கார் என்ஜினை ஸ்டார்ட் செய்த பின்பு, அதிக ஆக்சிலரேட் செய்யாமல் கியரை என்கேஜ் செய்து பின்பு மிதமாக ஆக்சிலரேட் கொடுத்து வாகனத்தை நகர்த்துவதன் மூலம் எரிபொருளை சேமிக்கலாம். என்ஜினின் வேகத்திற்கேற்ப கியர் மாற்றுவதை கடைபிடிப்பதன் மூலம் கியர் ரேஷியோ சரியாக இருக்கும், இதை சரியாக பின்பற்றுவதன் மூலம் மூலம் எரிபொருள் சேமிக்கலாம். 

     கோப்புப்படம்

    சிக்னலில் வாகனம் நிற்கும் போது என்ஜினை ஆப் செய்து விட்டு பச்சை விளக்கு எறிய 15 நொடிகள் இருக்கும் போது என்ஜினை ஸ்டார்ட் செய்து பின்பு வாகனத்தை இயக்கலாம். வாகனம் ஓட்டும்போது கிளட்ச் பெடலின் மீது கால் வைத்து ஓட்டுவதைத் தவிர்த்து வந்தால் என்ஜினின் சக்தி வீணாவ‌தை தவிர்க்க முடியும். அதோடு கிளட்சின் தேய்மானமும் குறையும்.

    டயரின் காற்றழுத்தத்தை முறையாக பராமரிப்பதன் மூலம் என்ஜினின் சக்தி விரயமாவதை தவிர்க்க முடியும். அதோடு டயரின் ஆயுள் காலத்தையும் அதிகரிக்கலாம். குறிப்பிட்ட கால ‌ இடைவெளியில் தவறாமல் என்ஜின் ஆயில் மாற்றுவதையும், பியூவல் சிஸ்டத்தை சுத்தம் செய்வது, மாற்றுவதையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் எரிபொருள் வீணாவதை தவிர்க்க முடியும். என்ஜினின் சப்தமும் அதிகமாகாமல் இருக்கும்.

    தேவையான போது மட்டும் ஏ.சி. உபயோகித்து மற்ற நேரங்களில் தவிர்த்து வந்தல் எரிபொருள் சேமிப்பாகும். மைலேஜும் கிடைக்கும். பிரேக் சிஸ்டத்தை முறையாக ப‌ராம‌ரிப்ப‌த‌ன் மூல‌ம் `வீல் ஜாம்’ ஆவதை த‌விர்க்கலாம். வாக‌ன‌த்தில் ப‌ய‌ண‌ம் செய்யும்போது இருக்கைக்கு ஏற்ற‌வாறு ஆட்க‌ள் ப‌ய‌ண‌ம் செய்ய‌ வேண்டும். அதிக‌ப‌டியான‌ ஆட்க‌ள் ப‌ய‌ண‌ம் செய்யும் போது என்ஜின் அதிக‌ பார‌ம் இழுப்பதால், எரிபொருள் அதிகம் செலவாகும்.
    Next Story
    ×