என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 220ஐ ஸ்போர்ட் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் 220ஐ ஸ்போர்ட் வேரியண்டை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புது பிஎம்டபிள்யூ கார் விலை ரூ. 37.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது சென்னையில் இயங்கி வரும் பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய பிஎம்டபிள்யூ 220ஐ ஸ்போர்ட் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும். 2021 பிஎம்டபிள்யூ 220ஐ ஸ்போர்ட் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பாரம்பரிய பிஎம்டபிள்யூ கிட்னி கிரில், எல்இடி டெயில் லைட்கள் உள்ளன. இத்துடன் ஆல்பைன் வைட், பிளாட் சபைட், மெல்போன் ரெட் மற்றும் ஸ்டாம் பே என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
காரின் உள்புறம் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 5.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்போர்ட் சீட்கள், ஆம்பியன்ட் லைட்டிங், பானரோமிக் சன்ரூப் உள்ளது.
இத்துடன் லெதர்-ராப் செய்யப்பட்ட மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல், குரூயிஸ் கண்ட்ரோல், மூன்று டிரைவ் மோட்கள், பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது கார் மாடல்கள் விவரங்களை போக்ஸ்வேகன் வெளியிட்டு இருக்கிறது.
போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் இந்த ஆண்டு மட்டும் நான்கு புது எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நான்கு புதிய மாடல்களில் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலான டைகுன் மிகப்பெரும் மாடலாக இருக்கும்.
இந்த மாடலின் சரியான வெளியீட்டு விவரம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுதவிர டி-ராக் மற்றும் டைகுன் ஆல்ஸ்பேஸ் போன்ற மாடல்கள் இந்தியாவில் சிபியு முறையில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புது மாடல்கள் வரிசையில், ஐந்து பேர் பயணிக்கக்கூடிய டைகுன் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என தெரிகிறது.

புதிய டைகுன் மாடல் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவி மாடலில் சதுரங்க வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், 2-ஸ்லாட் குரோம் கிரில், சில்வர் பேஷ் பிளேட்கள், கேபின் பகுதியில் 2-டோன் பினிஷ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச்-ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
டி-ராக் மற்றும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல்கள் இந்தியாவில் எவ்வித மாற்றமும் இன்றி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரு எஸ்யுவி மாடல்களும் கடந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலேயே இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றில் டி ராக் மாடல் இரண்டே மாதங்களில் விற்று தீர்ந்தது. இந்த மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என தெரிகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 125சிசி ஸ்கூட்டர் மாடல் விலை ரூ. 72,050 ஆகும். ஹீரோ டெஸ்டினி 125 ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 66,960 ஆகும்.
புதிய ஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் மேட் பிளாக் நிறம் மற்றும் பிரவுன் நிற பேனல்களை கொண்டுள்ளது. இத்துடன் குரோம் ஹேன்டில்பார் முனை, குரோம் மிரர்கள், குரோம் மப்ளர் ப்ரோடக்டர், குரோம் பென்டர் ஸ்டிரைப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
மற்ற அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் உபகரணங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் பிளாட்டினம் எடிஷன் மாடலில் 125சிசி பிஎஸ்6 ரக பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் மற்றும் எக்ஸ்-சென்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9 பிஹெச்பி பவர், 10.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இவற்றுடன் ஐ3எஸ் (ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம்) தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கூட்டரின் மைலேஜ் திறனை மேம்படுத்தும். இத்துடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பக்கவாட்டில் சைடு ஸ்டான்டு மற்றும் சர்வீஸ் டியூ ரிமைன்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 நின்ஜா 300 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கி இருக்கிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் தனது நின்ஜா 300 பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் நடைபெறுவதாக அறிவித்து இருக்கிறது. புதிய நின்ஜா 300 மாடலை வாங்க விரும்புவோர் அமேசான் தளத்தில் ரூ. 3 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 3.18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும். பிஎஸ்6 நின்ஜா 300 லைம் கிரீன்-கேஆர்டி கிராபிக்ஸ், கேன்டி லைம் கிரீன் மற்றும் எபோனி என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

புதிய மாடல் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் ட்வின்-பாட் ஹெட்லைட், மஸ்குலர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், குரோம் ஹீட்ஷீல்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 ரக 296சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 38.8 பிஹெச்பி பவர், 26.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
நிசான் மற்றும் டேட்சன் பிராண்டு கார் மாடல்களின் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
நிசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு நிசான் மற்றும் டேட்சன் பிராண்டு மாடல்களுக்கு பொருந்தும். இரு பிராண்டு மாடல்களுக்கான விலை உயர்வு ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது.
சரியாக எத்தனை சதவீதம் விலை உயரும் என நிசான் இந்தியா இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு வேறுபடும். கடந்த முறை நிசான் நிறுவன கார் மாடல்களின் விலை 5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
கார் மாடல்களின் உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலை அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. விலை உயர்வில் நிசான் கிக்ஸ், டேட்சன் ரெடி-கோ, கோ மற்றும் கோ பிளஸ் போன்ற மாடல்கள் பாதிக்கப்பட இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடல் வரைபடங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கின்றன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது புதிய அல்காசர் எஸ்யுவி மாடலின் வரைபடங்களை வெளியிட்டு இருக்கிறது. புதிய 7 சீட்டர் பிரீமியம் எஸ்யுவி மாடல் ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
வரைபடங்களின் படி புதிய அல்காசர் மாடல் தோற்றத்தில் கிரெட்டா எஸ்யுவி போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த கார் அதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. வரைபடங்களில் காரின் பக்கவாட்டு, உள்புறம் மற்றும் பின்புற வடிவமைப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது.

அதன்படி பக்கவாட்டில் போல்டு கேரக்டர் லைன், 18 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட ரூப்-மவுன்டெட் ஸ்பாயிலர், ஸ்கப் பிளேட் உள்ளது. உள்புறம் மூன்றடுக்கு இருக்கைகள் உள்ளன.
ஹூண்டாய் அல்காசர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின், 1.4 லிட்டர் டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது. மூன்று என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளை வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளை ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இது டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும். இந்தியாவில் இதன் விலை ரூ. 6 முதல் 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
டிரைடென்ட் 660 மாடலில் ப்ளூடூத் மாட்யூல் வசதியுடன் கூடிய டிஎப்டி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு செயல்படும். மேலும் கூடுதல் தொகைக்கு கோப்ரோ கேமரா கண்ட்ரோல் செய்வதற்கான வசதியும் இந்த மாடலுடன் வழங்கப்படுகிறது.

புதிய டிரையம்ப் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளில் 660 சிசி இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.
இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் டிஎப்டி டிஸ்ப்ளே, ஆப்ஷனல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிள் காவசகி இசட்650 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.94 லட்சம் ஆகும்.
டேட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
டேட்சன் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சலுகை, தள்ளுபடி மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து டேட்சன் மாடல்களுக்கும் இந்த சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி டேட்சன் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன.

இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. என்ட்ரி லெவல் டேட்சன் ரெடி-கோ மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், அரசு மற்றும் பொது துறை ஊழியர்களுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் காம்பேக்ட் எம்பிவி மாடல்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் ரூ. 20 ஆயிரம் கேஷ் போனஸ், ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. டேட்சன் கோ மாடல் விலை ரூ. 4.02 லட்சத்திலும், கோ பிளஸ் மாடல் விலை ரூ. 4.25 லட்சம் முதல் துவங்குகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் எம் சீரிஸ் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை கடந்த ஆண்டு அறிவித்து சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எம் 1000 ஆர்ஆர் மாடல் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் எம் சீரிசில் மோட்டார்சைக்கிள் ஆகும்.
இந்த மோட்டார்சைக்கிள் எஸ் 1000 ஆர்ஆர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் எடை குறைவாகவும், எஸ் சீரிஸ் மாடலை விட அதிக திறன் கொண்டுள்ளது. எம் 1000 ஆர்ஆர் மாடல் அக்ரபோவிக் டைட்டானியம் புல் சிஸ்டம் கொண்டு உருவாகி இருக்கிறது. இதனால் இந்த மாடலின் எடை 3.7 கிலோ வரை குறைந்துள்ளது.

இதில் உள்ள 999சிசி இன்-லைன் என்ஜின் எஸ் 1000 ஆர்ஆர் மாடலை விட 0.4 நொடிகள் 200 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 0.2 நொடிகள் விரைவாக எட்டிவிடும். இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் கார்பன்-பைபர் விங்லெட்கள் அதிகளவு ஏரோடைனமிக் டவுன்-போர்ஸ் வழங்கும். இதனால் அதிவேகமாக செல்லும் போது முன்புற சக்கரம் தரையில் இருந்து உயராமல் இருக்கும்.
எம் 1000 ஆர்ஆர் மாடலில் ரேஸ் ப்ரோ ரைடிங் மோட் உள்ளது. இது பந்தய களங்களில் பயன்படுத்த ஏதுவாக டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் மற்றும் என்ஜின் பிரேக்கிங் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. மேலும் இதில் லான்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் மாடல் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவகு வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைந்த எண்ணிக்கையிலேயே கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 40 முதல் ரூ. 50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
ஜாகுவார் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜாகுவார் நிறுவனம் இந்திய சந்தையில் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐ பேஸ் மாடல் S, SE மற்றும் HSE என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ஐ பேஸ் மாடல் 19 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்கள், கிளாஸ் ரூப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் டூயல் தொடுதிரை வசதி கொண்டு இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, இன்கண்ட்ரோல் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஜாகுவார் ஐ பேஸ் HSE மாடலில் அடாப்டிவ் மேட்ரிஸ் எல்இடி ஹெட்லைட்கள், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, விண்ட்சர் லெதர் ஸ்போர்ட் சீட், 16 ஸ்பீக்கர், 825 வாட் மெர்டியன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் ஐ பேஸ் மாடல் இருவித எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை 400 பிஹெச்பி பவர், 696 என்எம் டார்க் திறன் வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.
புதிய ஜாகுவார் எலெக்ட்ரிக் கார் 90kWh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 470 கிலோமீட்டர் வரை செல்கிறது. ஜாகுவார் ஐ பேஸ் மாடல் துவக்க விலை ரூ. 1.06 கோடி ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.12 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஆண்டுகளில் உற்பத்திக்கான செலவு அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.
இந்த ஆண்டு துவங்கியது முதல் இரண்டாவது முறையாக மாருதி சுசுகி விலை உயர்வை அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் அவற்றின் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாறுபடும். தற்போது மாருதி சுசுகி நிறுவனம் 14 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

இவற்றின் விலை ஆல்டோ மாடலுக்கு ரூ. 2.99 லட்சம் என துவங்கி டாப் எண்ட் எக்ஸ்.எல். மாடல் விலை ரூ. 9.84 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முந்தைய பண்டிகை கால மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,64,469 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 11.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது பிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது. இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களின் 2021 வெர்ஷனை அறிமுகம் செய்து உள்ளது.
இரு மாடல்களும் புது நிறங்களில் கிடைக்கின்றன. 2021 இன்டர்செப்டார் 650 மாடல் துவக்க விலை ரூ. 2.75 லட்சம் ஆகும். இதன் கஸ்டம் பெயின்ட் வெர்ஷன் விலை ரூ. 2.83 லட்சம் ஆகும். டாப் எண்ட் க்ரோம் பெயின்ட் வேரியண்ட் விலை ரூ. 2.97 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

2021 கான்டினென்டல் ஜிடி 650 மாடல் இரண்டு புது நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் துவக்க விலை ரூ. 2.91 லட்சம் ஆகும். இதன் கஸ்டம் பெயின்ட் வெர்ஷன் ரூ. 2.99 லட்சம் என்றும் டாப் எண்ட் மிஸ்டர் கிளீன் நிற வேரியண்ட் விலை ரூ. 3.13 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2021 ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்களில் 649சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 47 பிஹெச்பி பவர், 52 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் அசிஸ்ட் வழங்கப்பட்டு உள்ளது.






