என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது முழு எலெக்ட்ரிக் கார் எஸ் கிளாஸ் மாடலை தழுவி உருவாகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது விஷன் EQS கான்செப்டை தழுவி உருவாகி இருக்கிறது.

புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் ன்றும் இது 108kWh பேட்டரி பேக் மற்றும் 469 பிஹெச்பி வழங்கும் மோட்டார் வழங்கப்படுகிறது. புதிய பென்ஸ் EQS மாடல் தானியங்கி டிரைவர் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு முறைகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்த கார் உள்புறம் MBUX ஹைப்பர் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இது பயனர் அமரும் பகுதியில் சிறிய ஸ்கிரீனை வழங்குகிறது. சர்வதேச சந்தையை தொடர்ந்து புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
போர்டு நிறுவனத்தின் எதிர்கால கார் மாடல்களில் பயன்படுத்தப்பட இருக்கும் என்ஜின் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
போர்டு இந்தியா நிறுவனம் தனது எதிர்கால கார் மாடல்களில் மஹிந்திரா நிறுவன என்ஜின்களை பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் BX772 குறியீட்டு பெயர் கொண்ட காம்பேக்ட் எஸ்யுவி, BX744 குறியீட்டு பெயரில் உருவாகும் புது சப்-4 மீட்டர் எஸ்யுவிக்களில் மஹிந்திரா என்ஜின் இடம்பெறாது என தெரிகிறது.

இரு எஸ்யுவி மாடல்களும் 2022-23 நிதியாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரு மாடல்களிலும் மஹிந்திரா உற்பத்தி செய்த என்ஜின் வழங்கப்பட இருந்தது. எனினும், தற்போதைய தகவல்களின்படி இரு நிறுவனங்களும் என்ஜின் பயன்பாட்டு விவகாரத்தில் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் தனது வாகனங்களில் சொந்த என்ஜின்களை வழங்க போர்டு முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. `டிசம்பர் 31, 2020 அன்று போர்டு மற்றும் மஹிந்திரா இணைந்து முந்தைய கூட்டு வியாபார திட்டத்தை தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளன.' என்று போர்டு இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏழு புதிய ஏஎம்ஜி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இ கிளாஸ் பேஸ்லிப்ட், ஏ கிளாஸ் லிமோசின் போன்ற மாடல்களை இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் மேலும் சில ஏஎம்ஜி மாடல்களை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டு இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மார்டின் வென்க் தெரிவித்தார்.

தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மார்டின் வென்க் கூறும் போது, `இந்த ஆண்டு மட்டும் மொத்தம் ஏழு ஏஎம்ஜி மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புது மாடல்களை அறிமுகம் செய்ய ஆவலுடன் இருக்கிறோம்' என தெரிவித்தார்.
இதுதவிர சில ஏஎம்ஜி மாடல்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இவை பூனேவில் உள்ள சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப், ஏஎம்ஜி ஏ35 செடான் போன்ற மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது புத்தம் புதிய HR V ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனம் புதிய HR V ஹைப்ரிட் மிட்-சைஸ் கிராஸ்-ஒவர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஹோண்டா நிறுவனத்தின் மேன் மேக்சிமம், மெஷின் மினிமம் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா கார் தற்போது சீன பூர்விக எலெக்ட்ரிக் எஸ்யுவி தோற்றம் பெற்று உள்ளது.
கூப் எஸ்யுவி போன்ற ஸ்டைலிங், மெல்லிய ஹெட்லேம்ப்கள், பின்புறம் க்ளியர் லென்ஸ் எல்இடி டெயில் லைட், பிளாக் கிளாடிங், பாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. உள்புறம் பிரம்மாண்ட புளோட்டிங் டிஸ்ப்ளே உள்ளது.
புதிய காரின் என்ஜின் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் சிலிண்டர் அல்லது 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே என்ஜின்கள் புதிய தலைமுறை ஜாஸ் ஹைப்ரிட் மற்றும் சிஆர்-வி ஹைப்ரிட் மாடல்களில் வழங்கப்பட்டு உள்ளது.
ஐஐடி டெல்லி துவங்கி இருக்கும் கெலியோஸ் மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
ஐஐடி டெல்லியின் கெலியோஸ் மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஹோப் எனும் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கெலியோஸ் ஹோப் ஸ்கூட்டர் துவக்க விலை ரூ. 46,999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஹோப் ஸ்கூட்டர் பயன்படுத்தினால் கிலோமீட்டருக்கு 20 பைசா மட்டுமே செலவாகும் என கெலியோஸ் மொபிலிட்டி தெரிவித்து உள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்த ஓட்டுனர் உரிமம் அல்லது பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கெலியோஸ் ஹோப் ஸ்கூட்டர் 250 வாட் ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லி-அயன் பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் இருவித பேட்டரியை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதன் குறைந்த திறன் கொண்ட பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கிலோமீட்டர் வரை செல்லும், அதிக திறனுள்ள பேட்டரி அதிகபட்சம் 75 கிலோமீட்டர் செல்லும்.
டிரையம்ப் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் பிராஜக்ட் டிஇ-1 கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். இது டிரையம்ப், வில்லியம்ஸ் அட்வான்ஸ்டு என்ஜினியரிங் மற்றும் மேலும் இரு ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து உருவாகி இருக்கிறது.
டிரையம்ப் நிறுவனம் சேசிஸ் மற்றும் பாதுகாப்பு முறைகளையும், வில்லியம்ஸ் அட்வான்ஸ்டு என்ஜினியரிங் பேட்டரி டிசைன், பேட்டரி பயன்பாட்டு முறை மற்றும் வெஹிகில் கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்டவைகளை உருவாக்குகிறது. இதன் இன்டெக்ரல் பவர்டிரெயின் நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார், சிலிகான் கார்பைடு இன்வெர்டர் உருவாக்கிறது.

பிரேம் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் தவிர இந்த மோட்டார்சைக்கிள் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. இதற்கான சோதனை இந்த ஆண்டு இறுதியில் துவங்குகிறது. 2022 ஆண்டு இறுதியில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படலாம்.
முன்னதாக டிரையம்ப் நிறுவனம் தனது டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளை ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் கைகர், டஸ்டர், டிரைவர் மற்றும் க்விட் என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இவற்றின் விலையை உயர்த்துவதாக ரெனால்ட் அறிவித்து இருக்கிறது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக 2021 ஜனவரி மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ரூ. 40 ஆயிரம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விலை உயர்வு ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் ரெனால்ட் நிறுவனம் 2021 டிரைபர் மாடலை டூயல்-டோன் நிறங்களில் அறிமுகம் செய்தது.
புது காரில் ஸ்டீரிங் வீல்-மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர புதிய டிரைபர் மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
லெக்சஸ் நிறுவனம் தனது புதிய கான்செப்ட் கார் விவரங்களை விரைவில் வெளியிடுவதாக தெரிவித்து இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் ஆடம்பர பிரிவான லெக்சஸ் புது கான்செப்ட் மாடல் காரை மார்ச் 30 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இது அடுத்த தலைமுறை லெக்சஸ் வாகனங்களுக்கான குறியீடு என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

புதிய லெக்சஸ் கான்செப்ட் கார் முற்றிலும் புது வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய கான்செப்ட் கார் லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கென லெக்சஸ் வெளியிட்டு இருக்கும் டீசரின்படி புது கான்செப்ட் எஸ்யுவி மாடலாக இருக்கும் என தெரிகிறது.
இதன் ஹூட் பகுதி நீளமாக இருக்கும் என தெரிகிறது. இதன் ஸ்லோபிங் லைன் சிறு விண்ட்ஸ்கிரீன் உடன் இணைகிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தின் படங்களை லெக்சஸ் வெளியிட்டு இருந்தது. அந்த படங்களும், தற்போது லெக்சஸ் வெளியிட்டு இருக்கும் படங்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி காட்சியளிக்கின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ரூ. 39 லட்சம் பட்ஜெட்டில் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 39.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த கார் ஆறுவித நிறங்கள் மற்றும் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
வெளிப்புறம் புதிய லிமோசின் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பானரோமிக் சன்ரூப், எல்இடி டெயில் லைட்கள் உள்ளன. உள்புறம் MBUX இன்போடெயின்மென்ட் சிஸ்டம், விண்ட்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடலில் 1.3 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 161 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இதன் டீசல் என்ஜின் 147 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய ஏ கிளாஸ் ஏ35 ஏஎம்ஜி மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 56.24 லட்சம் ஆகும்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் புத்தம் புது எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் காம்படீஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை இந்தியாவுக்கு சிபியு முறையில் இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன.
புதிய பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 42 லட்சம், காம்படீஷன் வேரியண்ட் விலை ரூ. 45 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய எம் 1000 ஆர்ஆர் இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் முதல் எம் சீரிஸ் மாடல் இது ஆகும். இது லைட் வைட், ரேசிங் புளூ மெட்டாலிக் மற்றும் ரேசிங் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதன் ஏரோடைனமிக் அதிகளவு மேம்படுத்தப்பட்டு க்ளியர்-கோட் கார்பன் எம் விங்லெட்கள் மற்றும் பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.
இதில் உள்ள 999சிசி, வாட்டர்-கூல்டு, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் 209 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.1 நொடிகளில் எட்டிவிடும். புதிய எம் 1000 ஆர்ஆர் மாடலில் ரெயின், ரோட், டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ போன்ற ரைடிங் மோட்கள் உள்ளன.
ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் பேஸ்லிப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் 2021 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது. புது கார் வெளியீட்டு விவரத்தை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்வீஸ் மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்த எஸ்யுவி மாடல் 2020 ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு பலமுறை தள்ளிப்போனது. வழக்கமான ஸ்கோடா கார்களை போன்றே, இந்த காரும் பெட்ரோல் என்ஜினுடன் வெளியாகும் என தெரிகிறது. அந்த வகையில் புது மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.
இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஸ்கோடாவின் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் என்ஜின் 148 பிஹெச்பி பவர், 340 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது.
பென்ட்லி நிறுவனம் அதிக திறன் கொண்ட தனது புதிய ஆடம்பர சூப்பர்கார் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பென்ட்லி நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஆடம்பர சூப்பர்கார் மாடலான, கான்டினென்டல் ஜிடி அறிமுகம் செய்தது. புதிய கார் கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு என அழைக்கப்படுகிறது. இந்த கார் அதிக திறன் கொண்டிருப்பதால், இந்த பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
புதிய ஜிடி ஸ்பீடு மாடலில் 6.0 லிட்டர் டபிள்யூ12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 650 பிஹெச்பி பவர், 900 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக 335 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

தோற்றத்தில் புதிய கார் எந்த மாற்றமும் இன்றி பெரிய செவ்வக வடிவம் கொண்ட முன்புற கிரில், இரட்டை வட்ட-வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. இதன் ரேடியேட்டர் கிரில் பகுதி டார்க் டின்ட் கொண்டுள்ளது. காரின் முன்புற பென்டர் குரோம் பினிஷ் செய்யப்பட்டு ஸ்பீடு பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த கார் 22 இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. மேலும் இவற்றை பிரைட் சில்வர், டார்க் டின்ட் அல்லது கிளாஸ் பிளாக் பினிஷ்களில் தேர்வு செய்து கொள்ளும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
முன்னதாக பென்ட்லி நிறுவனம் தனது மேம்பட்ட பென்ட்யகா மாடலை இந்திய சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இந்த காரின் துவக்க விலை ரூ. 4.10 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






