என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 என் மாடல் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 மாடலின் ஸ்போர்ட் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. புதிய ஐ20 என் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. புதிய தலைமுறை ஐ20 மாடல் அசத்தலான தோற்றம் கொண்டுள்ளது.

     ஹூண்டாய் ஐ20 என்

    சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐ20 என் மாடலில் 1.0 லிட்டர் டி-ஜிடிஐ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 120 பிஹெச்பி பவர், ஐஎம்டி டிரான்ஸ்மிஷன், ட்வீக் செய்யப்பட்ட சஸ்பென்ஷன், என்ஜின் ரெஸ்பான்ஸ், ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர், வித்தியாசமான எக்சாஸ்ட் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் ஐ20 என் மாடல் 1.6 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் கேபின் பகுதியில் முற்றிலும் பிளாக் நிற ஸ்போர்ட்ஸ் சீட், சிவப்பு நிற ஸ்டிட்ச், என் ஸ்டீரிங் வீல், என் பேட்ஜிங் வழங்கப்படுகிறது. 
    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் 2021 CB650R மற்றும் CBR650R மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஜப்பானை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் இரண்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. ஹோண்டா CB650R மற்றும் CBR650R மாடல்கள் இந்திய சந்தையில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன.

    2021 ஹோண்டா CB650R மற்றும் 2021 CBR650R நியோ கபே ரேசர் மாடல்கள் விலை முறையே ரூ. 8.88 லட்சம் மற்றும் ரூ. 8.67 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     2021 ஹோண்டா CB650R

    இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 2021 ஹோண்டா CB650R மாடல் கேண்டி குரோம்ஸ்பியர் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் நிறங்களிலும் 2021 ஹோண்டா CBR650R மாடல் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் நிறங்களிலும் கிடைக்கிறது.

    புதிய மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிள் மாடல்களில் மேம்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 4 சிலிண்டர் 649சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 86 பிஹெச்பி பவர், 57.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.
    ஸ்கோடா நிறுவனம் தனது புதிய குஷக் மாடல் அந்த வேரியண்டிலும் அறிமுகமாகும் என சூசகமாக தெரிவித்து இருக்கிறது.


    ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாடலின் மான்ட் கார்லோ எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என சூசகமாக தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக ஸ்கோடா குஷக் ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும். 

     ஸ்கோடா குஷக்

    இவற்றில் டாப் எண்ட் வேரியண்ட் மற்ற முன்னணி எஸ்யுவி மாடல்களில் உள்ள முக்கிய அம்சங்கள் வழங்கப்படவில்லை. தற்போது ஸ்கோடா இந்தியா தனது குஷக் மாடலின் மான்ட் கர்லோ எடிஷன் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் ஸ்கோடா குஷக் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் மான்ட் கர்லோ எடிஷன் கமிக் எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. 

    கேடிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    கேடிஎம் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆர்சி சீரிஸ் மாடல்களை உருவாக்கும் பணிகளில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது புதிய ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி புதிய கேடிஎம் ஆர்சி 390 உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயாராகி விட்டதாக தெரிகிறது. இந்த மாடல் அசத்தலான டிசைன், மேம்பட்ட குஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     கேடிஎம் ஆர்சி 390

    2021 கேடிஎம் ஆர்சி 390 மாடலில் புதிய முன்புறம் தோற்றம் பெறுகிறது. டூயல் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் தற்போது பெரிய எல்இடி ஹெட்லேம்ப்களாக மாறி டூயல்-ப்ரோஜக்டர்களை கொண்டிருக்கிறது. இதன் பேரிங்கும் முன்பு இருந்ததை விட வித்தியாசமாக மாற்றப்பட்டு சற்று கூர்மையாக காட்சியளிக்கிறது.

    புதிய ஆர்சி  390 மாடலில் 373.2 சிசி, சிங்கில் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்படுகிறது. இது 44 பிஹெச்பி பவர், 36 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2021 ஆர்சி 200 மாடலில் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 199 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இது 25 பிஹெச்பி பவர், 19.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2021 6 சீரிஸ் ஜிடி பேஸ்லிப்ட் மாடல் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் 6 சீரிஸ் ஜிடி பேஸ்லிப்ட் மாடல்கள் கடந்த ஆண்டு மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 2021 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2021 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடல் ஏப்ரல் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    மேம்பட்ட பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடல் முன்பை விட அதிக ஸ்போர்ட் டிசைன் கொண்டுள்ளது. முன்புறம் கிட்னி கிரில் மேம்படுத்தப்பட்டு பிஎம்டபிள்யூ லேசர் லைட் தொழில்நுட்பம் கொண்ட ஹெட்லைட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. எனினும், இது எம் ஸ்போர்ட் வேரியண்டில் வழங்கப்படுகிறது.

     பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி

    உள்புறம் தற்போதைய மாடலை போன்ற ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இத்துடன் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் மற்றும் ஐ டிரைவ் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் பேட் கொண்டிருக்கிறது.

    2021 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 255 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 187 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் கிடைக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் மாடலை புதிதாக பியல் புளூ சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. புதிய டூயல் டோன் நிறம் டிரம் மற்றும் டிஸ்க் என இரு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. டூயல் டோன் பினிஷ் ஹெட்லைட் கவுல், பியூவல் டேன்க், பக்கவாட்டு மற்றும் பின்புற பேனல்களில் காட்சியளிக்கிறது. 

    புதிய நிறம்  தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடலில் ET-Fi தொழில்நுட்பம், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் யுஎஸ்பி மொபைல் சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்

    டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109.7சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் விலை ரூ. 65,865 எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் ஹீரோ பேஷன் ப்ரோ, பஜாஜ் பிளாட்டினா 110 மற்றும் ஹோண்டா சிடி 110 டிரீம் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஆடம்பர கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான பென்ட்லி புது மைல்கல் பற்றிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

    பென்ட்லி நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் உற்பத்து செய்யப்பட்டு இருக்கின்றன. 1919 ஆண்டு துவங்கப்பட்ட பென்ட்லி 101 ஆண்டுகளாக பல்வேறு பாரம்பரியம் மிக்க கார் மாடல்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

    அந்த வரிசையில் தற்போது உற்பத்தியில் 2 லட்சம் கார்களை கடந்து இருப்பதாக பென்ட்லி அறிவித்து உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பென்ட்லி ஆடம்பர கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் புளோயர், அர்னேஜ், மல்சேன், கான்டினென்டல் ஜிடி என பல்வேறு தலைசிறந்த மாடல்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

    பென்ட்லி கார்

    2 லட்சம் யூனிட்களில் சுமார் 1,55,582 யூனிட்கள் 2003 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். தற்போது பென்ட்லி நிறுவனம் கான்டினென்டல், பிளையிங் ஸ்பர் மற்றும் பென்ட்யகா போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மூன்று மாடல்கள் மற்றும் சப்-வேரியண்ட்கள் இங்கிலாந்தில் உள்ள தலைமையகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

    மோட்டார்சைக்கிள்களில் என்ஜின் கோளாறு காரணமாக ரீகால் செய்யப்படுவதாக டுகாட்டி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


    டுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிளை அமெரக்காவில் ரீகால் செய்கிறது. வி4 மோட்டாரில் கோளாறு கண்டறியப்பட்டதே ரீகால் செய்வதற்கான காரணம் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 60 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.


     டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4
    வி4 மோட்டாரின் வால்வ் கைடுகளில் உள்ள சிறு குறைபாடுகள் அதன் செயல்திறனை குறைத்து இறுதியில் செயலற்றதாக மாற்றிவிடும் என டுகாட்டி தெரிவித்து இருக்கிறது. உதிரிபாகங்களை வழங்கிய இரு நிறுவனங்கள் செய்த தவறால் இந்த கோளாறு ஏற்பட்டு இருக்கிறது.

    பாதிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களில் என்ஜின் மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கப்படும். என்ஜின் முழுமையாக மாற்றிக் கொடுக்கும் வரை புதிய மல்டிஸ்டிராடா வி4 விற்பனையை நிறுத்த டுகாட்டி உத்தரவிட்டு இருக்கிறது.
    இந்தியாவில் மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.


    இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் போன்ற மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் பலமுறை நீட்டித்து வந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் கால அவகாசம் முடிவடைவதாக இருந்தது.

    தற்போது நாட்டின் பல பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையிலும் இந்த கால அவகாசத்தை ஜூன் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே இந்த கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததன் பெயரில் மத்திய அரசு தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் புது ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய இரண்டு கதவுகள் கொண்ட கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் விவரங்கள் இணையத்தில் லீக் கி இருக்கிறது. இந்த ஸ்போர்ட்ஸ் கார் மார்ச் 31, 2021 அன்று அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்போர்ட்ஸ் கார் எம்ஜி சைபர்ஸ்டெர் எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    காரின் முன்புறம் ஏரோடைனமிக் டிசைன், பக்கவாட்டு மற்றும் டெயில் லேம்ப் உள்ளிட்டவைகளை பார்க்கும் போது இந்த மாடல் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது சர்வதேச சந்தையில் ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களை கவரும் வகையிலான தோற்றம் கொண்டுள்ளது.

     எம்ஜி எலெக்ட்ரிக் கார்

    இது கேமிங் காக்பிட் கொண்ட உலகின் முதல் முழுமையான சூப்பர் கார் ஆகும். எம்ஜி குளோபல் டிசைன் குழுவினர் இந்த காரை வடிவமைத்து இருக்கின்றனர். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும். 

    இந்த கார் முழுமையான எலெக்ட்ரிக் திறன், 5ஜி இணைப்பு வசதி கொண்டிருக்கும் என்றும் இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது.
    மற்ற நிறுவனங்களை போன்றே டொயோட்டா நிறுவனமும் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களின் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்படுவதாக அறிவித்தது. இந்த நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்கள் விலையும் ஏப்ரல் 1, 2021 முதல் உயர்கிறது. இந்த ஆண்டில் டொயோட்டா கார் விலை உயர்த்தப்படுவது இரண்டாவது முறை ஆகும்.

     டொயோட்டா கார்

    முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் டொயோட்டா தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தியது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும். உற்பத்திக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவேதே வாகனங்கள் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகின்றன.

    கார் உற்பத்திக்கு தேவைப்படும் ஸ்டீல், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுதவிர கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது உற்பத்தி பணிகளை அதிக சவால் மிக்கதாக மாற்றி இருக்கிறது.
    கவாசகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை இந்தியாவில் மாற்றப்பட இருக்கிறது.


    ஜப்பான் நாட்டை பூர்விகமாக கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தியாளரான கவாசகி இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக மீண்டும் அறிவித்து இருக்கிறது. அதன்படி கவாசகி மோட்டார்சைக்கிள் மாடல்கள் புதிய விலை ஏப்ரல் 1, 2021 முதல் அமலாகிறது.

    மார்ச் 31, 2021 அல்லது அதற்கும் முன் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு தற்போதைய விலையே பொருந்தும். அந்த வகையில், ஏப்ரல் 1, 2021 மற்றும் அதன் பின் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு வாடிக்கையாளர்கள் புதிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

     கவாசகி மோட்டார்சைக்கிள்

    நின்ஜா 300 மற்றும் ZX-10R மாடல்கள் தவிர கவாசகி நிறுவனத்தின் அனைத்து மாடல்கள் விலலையும் உயர்த்தப்படுவதாக கவாசகி தெரிவித்து உள்ளது. மற்ற மாடல்களான KX, KLX மற்றும் Z H2 SE உள்ளிட்டவையும் தற்போதைய விலை உயர்வில் பாதிக்கப்படவில்லை.

    விலை உயர்வுக்கான காரணத்தை கவாசகி இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கான காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. கவாசகி மட்டுமின்றி பல்வேறு முன்னணி நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்து இருக்கின்றன.

    ×