என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹூண்டாய் நிறுவனம் மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை கார்களை விற்று இருப்பதாக தெரிவித்து உள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் மார்ச் 2021 மாதத்தில் மட்டும் 64,621 யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. உள்நாட்டில் மட்டும் 52,600 யூனிட்களும் வெளிநாடுகளுக்கு 12,021 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 100 சதவீதமும், ஏற்றுமதியில் 101 சதவீதமும் வளர்ச்சியை பெற்று இருக்கிறது. உள்நாட்டில் 2020 மார்ச் மாதத்தில் 26,300 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 5,979 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருந்தது.
கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் விரைவில் புதிய அல்காசர் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது கிரெட்டா மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களின் புதிய விலை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா, பார்ச்சூனர், லெஜண்டர் மற்றும் கேம்ரி மாடல்களின் புதிய விலை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
அதன்படி கேம்ரி மாடல் முன்பை விட ரூ. 1,18,000 அதிகமாகி தற்போது ரூ. 40.59 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆடம்பர செடான் மாடல் 2.5 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 26 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மற்றும் டீசல் மாடல் புதிய விலை முறையே ரூ. 16.52 லட்சம் மற்றும் ரூ. 16.90 லட்சம் என மாறி இருக்கிறது. பார்ச்சூனர் எஸ்யுவி மாடல் விலை ரூ. 36 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் முன்பை விட ரூ. 72 ஆயிரம் அதிகமாகி இருக்கிறது. இதன் புதிய துவக்க விலை ரூ. 38.30 லட்சம் ஆகும்.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் கிளான்சா, அர்பன் குரூயூசர், வெல்பயர் போன்ற மாடல்களின் விலை தற்போது மாற்றப்படவில்லை.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 செல்டோஸ் மாடலை இப்படி தான் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மேம்பட்ட செல்டோஸ் மாடலை ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது லோகோ கொண்டிருக்கும். இந்த ஆண்டு துவக்கத்தில் கியா மோட்டார்ஸ் தனது புதிய லோகோவை அறிமுகம் தெய்தது.

2021 செல்டோஸ் மாடலில் பானரோமிக் சன்ரூப் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இது பற்றிய கேள்விக்கு கியா மோட்டார்ஸ் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புதிய செல்டோஸ் மாடல் கிரெட்டா, டாடா ஹேரியர், புது எம்ஜி ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
இந்திய சந்தையில் கியா செல்டோஸ் மாடல் விலை ரூ. 9.89 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 16.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் 2021 மார்ச் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் மார்ச் 2021 மாதத்திற்கான வாகன விற்பனையில் 278 சதவீத விற்பனையை பதிவு செய்து இருக்கிறது. மார்ச் மாதத்தில் மட்டும் ரெனால்ட் நிறுவனம் 12,356 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் 3,269 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.
ரெனால்ட் நிறுவனத்தின் சமீபத்திய கார் மாடலானகைகர் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பதற்கு முக்கிய காரணமாமக கூறப்படுகிறது. கைகர் மட்டுமின்றி டிரைபர் மாடலும் இந்திய விற்பனையில் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

புதிய ரெனால்ட் கைகர் மாடல் 3டி கிராபிக் பினிஷ் செய்யப்பட்ட கிரில், ஹனிகொம்ப் வடிவ க்ரோம் ஹைலைட்கள், எல்இடி டிஆர்எல்கள் கொண்டுள்ளது. இந்த கார் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இவை முறையே 70 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறனும், 97 பிஹெச்பி பவர், 160 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டர்போ என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு சிவிடி ஆப்ஷனில் கிடைக்கிறது.
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா SXR 125 ஸ்கூட்டரின் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பியாஜியோ இந்தியா நிறுவனம் தனது SXR 125 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. அப்ரிலியா SXR 125 முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். முன்பதிவு ஆன்லைன் மற்றும் அப்ரிலியா விற்பனையகங்களில் நடைபெறுகிறது.

அப்ரிலியா SXR 125 மாடலில் ட்வின்-பாட் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், புல் டிஜிட்டல் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் சஸ்பென்ஷன், முன்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் சிபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை அப்ரிலியா SXR 125 மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று வால்வுகள் மற்றும் பியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட இந்த என்ஜின் 9.4 பிஹெச்பி பவர், 9.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டிரையம்ப் நிறுவனம் 2021 போன்வில் டி120 மற்றும் டி120 பிளாக் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
டிரையம்ப் நிறுவனம் இந்திய சந்தையில் 2021 போன்வில் டி120 மற்றும் டி120 பிளாக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 10.65 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய மாடல்களின் ஒட்டுமொத்த தோற்றத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும் புது மாடலில் வட்ட வடிவ ஹெட்லைட், ரியர்வியூ மிரர்கள், ட்வின் பாட் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வட்ட வடிவ பியூவல் டேன்க், இருபுறங்களிலும் ரப்பர் பேட்கள், ஒற்றை சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

டி120 பிளாக் மாடலில் என்ஜின் கவர்கள், ரியர்-வியூ மிரர் ஹவுசிங், ரிம், எக்சாஸ்ட் கேனிஸ்டர் உள்ளிட்டவைகளில் பிளாக் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் புதிதாக டேன்க் பேட்ஜ்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் புது லே-அவுட், மேம்பட்ட ஸ்விட்ச்-கியர் வழங்கப்பட்டு உள்ளது.
இரு மாடல்களிலும் 1200சிசி, ட்வின்-சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 78.9 பிஹெச்பி பவர், 105 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ரோடு, ரெயின் என இருவித ரைடிங் மோட்கள், ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், குரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
புதிய டிரையம்ப் போன்வில் டி120 மற்றும் டி120 பிளாக் மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றின் வினியோகம் அடுத்த சில வாரங்களில் துவங்கும் என தெரிகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புது அப்டேட் வழங்கி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு 13-வது ஒடிஏ அப்டேட் வழங்கி வருகிறது. இந்த அப்டேட் ஏத்தர்ஸ்டேக் ஆட்டம் என அழைக்கப்படுகிறது. புது அப்டேட் ஸ்கூட்டரில் ப்ளூடூத் சார்ந்து இயங்கும் மியூசிக் மற்றும் கால் அம்சங்களை வழங்குகிறது.

இந்த அம்சம் கொண்டு ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் டேஷ்போர்டு ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து கொள்ள முடியும். பின் ஆல்பம் ஆர்ட், பாடல்களின் பெயர் மற்றும் பாடியவர் விவரங்களை டிஸ்ப்ளேவை பார்க்க முடியும். மேலும் வாகனம் ஒட்டும் போதே பாடல்களை மாற்றவோ, நிறுத்தவோ செய்யலாம். இது பல்வேறு முன்னணி ஸ்டிரீமிங் மற்றும் பாட்காஸ்ட் சேவைகளுக்கான ஆதரவை கொண்டுள்ளது.
இத்துடன் அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது உள்ளிட்ட அம்சங்களை ஸ்கூட்டரின் டேஷ்போர்டிலேயே மேற்கொள்ளலாம். மியூசிக் மற்றும் கால் தவிர புது அப்டேட் ஏத்தர் செயலியும் மாற்றப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட செயலி முழுமையாக மாற்றப்பட்டு தற்போது மிகவும் தெளிவான இன்டர்பேஸ் கொண்டுள்ளது.
போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டி ராக் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
போக்ஸ்வேகன் நிறுவனம் புதிய டி ராக் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 21.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய போக்ஸ்வேகன் டி ராக் சிபியு முறையில் கொண்டு வரப்படுகிறது.
புதிய போக்ஸ்வேகன் டி ராக் விலை முந்தைய மாடலை விட ரூ. 1.35 லட்சம் அதிகம் ஆகும். புதிய மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெற்று வருகிறது. புதிய டி ராக் மாடல் MQB பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

புதிய டி ராக் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.
இத்துடன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூப், 6 ஏர்பேக், டையர் பிரஷர் மாணிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளது. புதிய டி ராக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய 2021 டி ராக் மாடல் ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டார், டாடா ஹேரியர் மற்றும் ஹூண்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஹோண்டா நிறுவனம் உலகம் முழுக்க ஏழு லட்சம் வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா மோட்டார் கோ நிறுவனம் உலகம் முழுக்க 7,61,000 வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது. வாகனங்களின் பியூவல் பம்ப் கோளாறு இருப்பதால் ரீகால் செய்யப்படுகிறது. இது நாளடைவில் என்ஜின் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

அமெரிக்காவில் 2018-2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 6,28,000 அக்யூரா மற்றும் இதர ஹோண்டா வாகனங்கள் ரீகால் செய்யப்படுகின்றன. இந்த கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை ஹோண்டா நிறுவனத்திற்கு எந்த புகாரும் எழவில்லை.
ரீகால் செய்யப்படும் வாகனங்களில் அக்கார்ட், சிவிக், சிஆர்-வி, பிட், பைலட், ரிட்ஜெலின், எம்டிஎக்ஸ், ஆர்டிஎக்ஸ் மற்றும்
டிஎல்எக்ஸ் போன்றவை அடங்கும்.
டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் வாகனங்கள் எண்ணிக்கையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் மார்ச் 2021 மாத வாகன ஏற்றுமதியில் 1 லட்சம் யூனிட்களை எட்டியதாக தெரிவித்து உள்ளது. உலகம் முழுக்க மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

`பல்வேறு பகுதிகளில் வாகன விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வந்ததே இதற்கு காரணம். தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால மொபிலிட்டியில் தொடர் முதலீடு செய்தல் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்' என டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேனு தெரிவித்தார்.
டிவிஎஸ் நிறுவனம் தனது வாகனங்களை ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா, இந்திய துணை கண்டம், மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்கா பகுதிகளை சேர்ந்த 60-க்கும் அதிக நாடுகளில் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பகுதிகளில் மேலும் சில சந்தைகளில் களமிறங்க டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2021 எக்ஸ்யுவி500 புது வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், அவ்வாறு அறிமுகமாகவில்லை. பின் இந்த மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எக்ஸ்யுவி500 மாடல் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் விற்பனை செப்டம்பர் மாத வாக்கில் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது. வினியோகம் நவம்பர் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

வெளியீட்டுக்கு முன் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யுவி400 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இந்த மாடலின் பொனெட்டில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
புதிய 2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 152 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படலாம்.
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கார் வரைபடங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனம் தனது 2021 கோடியக் பேஸ்லிப்ட் மாடலை ஏப்ரல் 13, 2021 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது புதிய கார் வரைபடங்களை ஸ்கோடா வெளியிட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடலாக கோடியக் இருக்கிறது.

இந்தியாவில் ஸ்கோடா கோடியக் மாடல் 2017 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய மாடலின் முன்புறம், பின்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் வயர்லெஸ் சா்ஜிங் மற்றும் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் என புது அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய கோடியக் மாடலிலும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும். இதுவரை இந்த பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் உலகம் முழுக்க 60 நாடுகளில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.






