என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்
    X
    டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்

    வாகன ஏற்றுமதியில் புது மைல்கல் எட்டிய டிவிஎஸ் மோட்டார் கம்பெனி

    டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் வாகனங்கள் எண்ணிக்கையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து உள்ளது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் மார்ச் 2021 மாத வாகன ஏற்றுமதியில் 1 லட்சம் யூனிட்களை எட்டியதாக தெரிவித்து உள்ளது. உலகம் முழுக்க மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்

    `பல்வேறு பகுதிகளில் வாகன விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வந்ததே இதற்கு காரணம். தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால மொபிலிட்டியில் தொடர் முதலீடு செய்தல் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்' என டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேனு தெரிவித்தார்.

    டிவிஎஸ் நிறுவனம் தனது வாகனங்களை ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா, இந்திய துணை கண்டம், மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்கா பகுதிகளை சேர்ந்த 60-க்கும் அதிக நாடுகளில் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பகுதிகளில் மேலும் சில சந்தைகளில் களமிறங்க டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    Next Story
    ×