என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இதுவரை 10 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்துள்ளது.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலுக்கான முன்பதிவு 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் நிசான் மேக்னைட் எஸ்யுவி மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.

முன்பதிவு மட்டுமின்றி இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இதுவரை 10 ஆயிரம் யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2, 2020 அன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. வெளியீட்டில் இருந்து இதுவரை மேக்னைட் மாடலை வாங்க 2,78,000 பேர் மேக்னைட் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.
நிசான் மேக்னைட் மாடல் XE, XL, XV மற்றும் XV பிரீமியம் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது இரு ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையை விரிவுப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் வினியோகம் செய்யப்படுகிறது. இரு ஸ்கூட்டர் மாடல்களின் விலை முறையே ரூ. 1.60 லட்சம் மற்றும் ரூ. 1.41 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தற்போது ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தமிழகத்தின் மூன்று நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இரு புதிய நகரங்களில் வாடிக்கையாளர்கள் ஏத்தர் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைட் செய்யவும், வாகனத்தின் அம்சங்கள் குறித்து சம்மந்தப்பட்ட விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம்.

இதுதவிர ஏத்தர் ஸ்பேஸ் எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை இரு நகரங்களில் திறக்க இருக்கிறது. வரும் வாரங்களில் இவை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை மட்டுமின்றி இரு நகரங்களில் ஏத்தர் க்ரிட் பாஸ்ட் சார்ஜிங் மையங்களை கட்டமைக்கிறது.
தற்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கோயம்புத்தூரில் 5 பாஸ்ட் சார்ஜிங் மையங்களையும், திருச்சியில் இரண்டு பாஸ்ட் சார்ஜிங் மையங்களை திறந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் மாடல் கார் புது மாற்றங்களுடன் டொயோட்டா பிராண்டிங் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி சியாஸ் மாடலை டொயோட்டா ரி-பேட்ஜ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. யாரிஸ் செடான் மாடலுக்கு மாற்றாக சியாஸ் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரு நிறுவனங்கள் கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது மாடலாக இது இருக்கும்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், சியாஸ் மாடல் கிரிலில் டொயோட்டா பேட்ஜ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை கொண்டு டொயோட்டா நிறுவனம் சியாஸ் மாடலை ரி-பேட்ஜ் செய்யலாம் என கூறப்படுகிறது.
தற்போது செடான் பிரிவில் டொயோட்டா நிறுவனம் யாரிஸ் மாடலை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் சியாஸ் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் யாரிஸ் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் 2021 டிரைபர் மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனத்தின் 2021 டிரைபர் மாடல் விற்பனையில் 75 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்தியாவில் புதிய டிரைபர் மாடல் ஆகஸ்ட் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் சந்தையில் 4.79 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
2021 டிரைபர் மாடல் புது அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் மேம்பட்ட மாடல் விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. புதிய டிரைபர் மாடல் டூயல்-டோன் நிறத்திலும் கிடைக்கிறது. எனினும், இது டாப் எண்ட் RXZ வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

புதிய ரெனால்ட் டிரைபர் மாடல் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 71 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஏஎம்டி ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு அதிகபட்சம் 19 கிலோமீட்டர் வரை செல்லும்.
அதிநவீன அம்சங்கள் நிறைந்த புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்களை டொயோட்டா வெளியிட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத்துக்கான கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கான்செப்ட் BEV பிளாட்பார்மில் உருவாகிறது. புதிய சீரிசை உருவாக்க டொயோட்டா நிறுவனம் பிடபிள்யூடி, சுபாரு, சுசுகி மற்றும் டைஹட்சு போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.

புதிய மாடல் டொயோட்டா மற்றும் சுபாரு இணைந்து உருவாக்குகின்றன. இந்த மாடலில் அசத்தலான AWD தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. இது நீண்ட வீல்பேஸ் மற்றும் சிறு ஓவர்ஹேங் கொண்டிருக்கிறது. இதனால் உள்புறம் பிரீமியம் செடான் மாடல்களில் இருப்பதை போன்று சவுகரியமான இடவசதி கிடைக்கும்.
இத்துடன் பிரத்யேக வடிவமைப்பு கொண்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது. இந்த கார் ஸ்டீர்-பை-வயர் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட இருக்கும் AWD சிஸ்டத்தை டொயோட்டா மற்றும் சுபாரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகின்றன.
ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காம்பேக்ட் செடான் மாடல் இந்தியாவில் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா காம்பேக்ட் செடான் மாடல் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு இ வேரியண்ட் தவிர அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும். ஆரா மாடல் விலை முன்பை விட ரூ. 4240 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஆரா மாடல் புதிய விலை ரூ. 5.92 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.34 லட்சம் வரை மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி ஹூண்டாய் ஆரா மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி இ வேரியண்ட் தவிர அனைத்து மாடல்களிலும் பின்புற ஸ்பாயிலர் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் ஆரா மாடல் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இரு என்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஆரா எஸ் வேரியண்ட் மட்டும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வசதியுடன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஹூண்டாய் ஆறா மாடல் மாருதி சுசுகி டிசையர், போர்டு ஆஸ்பயர், டாடா டிகோர் மற்றும் ஹோண்டா அமேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
கேடிஎம் 1290 சூப்பர் டியூக் மோட்டார்சைக்கிள் விற்பனை ஆன்லைனில் நடைபெற்றது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் 48 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது. இந்த விற்பனையில் மொத்தம் 500 யூனிட்கள் விற்கப்பட்டன. இவை அனைத்தும் கேடிஎம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் தளத்தில் விற்பனையானது. 500 யூனிட்களில் ஒன்றுகூட இந்தியா வராது.
இந்த லிமிடெட் எடிஷன் மாடல் சில அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஸ்டான்டர்டு மாடலை விட லிமிடெட் எடிஷன் கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர்ஆர் மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் ஸ்டான்டர்டு மாடலில் உள்ள 1301சிசி, எல்சி8 வி ட்வின் என்ஜின் 180 பிஹெச்பி பவர், 140 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இதன் எடை முந்தைய மாடலை விட 9 கிலோ குறைவு ஆகும். இதற்கென கார்பன் பைபர் இருக்கை, போர்ஜ் செய்யப்பட்ட அலுமினியம் வீல்கள், டைட்டானியம் அக்ராபோவிக் எக்சாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கேடிஎம் தனது ஸ்டான்டர்டு 1290 சூப்பர் டியூக் மாடலை இந்தியாவில் விற்பனை செய்வதில்லை.
இதனால் இந்த மாடலின் ஆர்ஆர் வெர்ஷன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படாது. எனினும், இதனை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய முடியும்.
இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி பிஎம்டபிள்யூ முதலிடம் பிடித்து இருக்கிறது.
ஆடம்பர கார் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களாக பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இருக்கின்றன. மார்ச் மாதத்தில் 826 யூனிட்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ இந்திய ஆடம்பர கார் விற்பனையில் முன்னணி இடம்பிடித்து இருக்கிறது.
இந்த பட்டியலில் முதலிடத்தை மெர்சிடிஸ் பென்ஸ் வெறும் 14 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்ததால் இழந்துள்ளது. பென்ஸ் நிறுவனம் மார்ச் மாதத்தில் 812 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்த பட்டியலில் மூன்றாவது இடம்பிடித்து இருக்கிறது. இந்த நிறுவனம் 214 யூனிட்களை விற்பனை செய்தது.

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏ கிளாஸ் லிமோசின், இ கிளாஸ் பேஸ்லிப்ட் என புது மாடல்களை அறிமுகம் செய்தது. இதேபோன்று பிஎம்டபிள்யூ நிறுவனம் 6 சீரிஸ் ஜிடி மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய 6 சீரிஸ் ஜிடி மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 255பிஹெச்பி/400 என்எம் டார்க், 188பிஹெச்பி/400 என்எம் டார்க் மற்றும் 261பிஹெச்பி/620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவன கார்களின் பியூவல் பம்ப் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து கார்களை ரீகால் செய்யும் பணி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது கார்களை ரீகால் செய்வதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இதுவரை 77 ஆயிரம் யூனிட்களை ஹோண்டா ரீகால் செய்து இருக்கிறது. பியூவல் பம்ப் பாகத்தில் கோளாறு கண்டறியப்பட்டதே கார்கள் ரீகால் செய்வதற்கான காரணம் ஆகும்.

இந்த பிரச்சினையில் அமேஸ், 4-ம் தலைமுறை சிட்டி, டபிள்யூஆர்-வி, ஜாஸ், சிவிக், பிஆர்-வி மற்றும் சிஆர்-வி போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. மாடலை பொருத்து ஜனவரி 2019 முதல் செப்டம்பர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன.
கார்களின் பியூவல் பம்ப் கோளாறு நாளடைவில் என்ஜினுக்கு தேவையான எரிபொருள் வினியோகத்தை தடைப்படுத்தலாம். இதன் காரணமாக வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் போக வாய்ப்புகள் உண்டு. இதுதவிர கம்பஷன் வழிமுறை சார்ந்த மற்ற பாகங்களையும் இது சேதப்படுத்தும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 100 சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் ஹெச்எப் 100 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 49,400, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்திய சந்தையில் இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும்.

புதிய ஹெச்எப் 100 தோற்றத்தில் ஹீரோ டீலக்ஸ் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் எளிய கிராபிக் டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது. இதனால் இதன் விலை என்ட்ரி லெவல் ஹெச்எப் டீலக்ஸ் மாடலை விட ரூ. 1300 குறைவாகும்.
சிறு மாற்றங்கள் தவிர இந்த மாடல் தோற்றத்தில் ஹெச்எப் 100 டீலக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலிலும் 97சிசி, ஏர் கூல்டு, சிங்கில் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 7.9 பிஹெச்பி பவர், 8.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் சில கார் மாடல்கள் விலை மட்டும் இந்தியாவில் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் தனது கார் மாடல்கள் விலையை 1.6 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. இது கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் பிரதிபலிக்கும். எந்தெந்த மாடல்கள் விலை உயர்த்தப்படுகிறது என்ற விவறங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கடந்த மாதமே கார் மாடல்களின் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதால், விரைவில் விலை உயர்த்துவதாக மாருதி சுசுகி அறிவித்து இருந்தது. அந்த வரிசையில், கார்களின் விலை 1.6 சதவீதம் உயர்த்தப்படுவதாக மாருதி சுசுகி அறிவித்தது. இந்த ஆண்டு துவக்கம் முதலே மாருதி கார் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்படுகிறது.
மார்ச் மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 1,67,014 யூனிட்களை விற்பனை செய்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 99 சதவீதம் வளர்ச்சி ஆகும்.
பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் முன்பதிவு சமீபத்தில் துவங்கிய நிலையில், இந்த மாடல் விற்று தீர்ந்துள்ளது.
பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவை சிறு இடைவெளிக்கு பின் சமீபத்தில் துவங்கியது. முன்பதிவு துவங்கிய இரண்டே நாட்களில் செட்டாக் மாடலின் அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்தது. இதனால் இந்த மாடலுக்கான முன்பதிவு மீண்டும் நிறுத்தப்பட்டது.
குறுகிய காலக்கட்டத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற விவரத்தை பஜாஜ் தெரிவிக்கவில்லை. கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த மாடலுக்கான முன்பதிவு அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தது.

அதிக யூனிட்களை விரைந்து உருவாக்கும் பணிகளை பஜாஜ் சமீபத்தில் துவங்கியது. இதன் காரணமாக இந்த மாடலுக்கான விலையும் உயர்த்தப்பட்டது. அதன்படி செட்டாக் அர்பேன் மற்றும் பிரீமியம் மாடல்கள் விலை முறையே ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் உயர்ந்து இருக்கிறது.
இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்களும், 25 சதவீதம் சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் ஆகும். செட்டாக் ஸ்கூட்டரை 3-பின் ஏசி 220 வோல்ட், 5ஏ கிரவுண்ட் வால் சாக்கெட் மூலம் சார்ஜ் செய்யலாம்.






