என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் யூனிட்களில் கோளாறு இருப்பதாக அறிவித்து இருக்கிறது.


    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 31,346 மோட்டார்சைக்கிள் யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. இந்த யூனிட்களில் ஹெட்லைட் பல்பு கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய தகவல்களின்படி இந்த யூனிட்கள் அனைத்தும் அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுவரை விற்பனை செய்யப்பட்ட ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டெர் பிரிவில் 14 மாடல்களில் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது. இத்துடன் மாற்று ஹெட்லைட்களாக விற்கப்பட்ட 800 யூனிட்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புள்ள மாடல்களில் ஹெட்லைட் அதிக சூடாகி டிப் பகுதியில் துளையிடும் வாய்ப்பு இருக்கிறது.

     ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்

    இத்துடன் ஹெட்லைட்டை லோ- ஹை பீம்களுக்கு ஸ்விட்ச் செய்யும் போது சீரற்ற முறையில் இயங்குவது, சமயங்களில் முற்றிலும் இயங்காமல் போவது போன்ற குறைபாடும் ஏற்படுகிறது.

    பாதிக்கப்பட்ட 14 ஸ்போர்ட்ஸ்டர் மாடல்கள் - XL1200C (2019), XL1200CX (2019-2020), XL1200NS (2019-2021), XL1200X (2019-2021), XL1200XS (2019), XL883L (2019) மற்றும் XL883N (2019-2021) ஆகும். இந்த மாடல்களை பயன்படுத்துவோரை ஹார்லி டேவிட்சன் தொடர்பு கொண்ட ஹெட்லைட் பல்பு ஷீல்டை முற்றிலும் இலவசமாக மாற்றி தருகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது கார் மாடல்களில் அந்த வசதியை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களில் சிஎன்ஜி வசதியை வழங்க இருக்கிறது. எந்தெந்த மாடல்களில் சிஎன்ஜி வசதி வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், டியாகோ, டிகோர் மாடல்கள் சிஎன்ஜி மையங்களில் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    இரு ப்ரோடோடைப்களும் தற்போது விற்பனை செய்யப்படும் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதையொட்டி சமீப காலங்களில் சிஎன்ஜி மாடல்கள் சிறந்த மாற்றாக மாறி வருகின்றன. 

     டாடா கார்

    ஏற்கனவே ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் சிஎன்ஜி வசதியை வழங்கி வருகின்றன. இந்திய சந்தையில் பயணிகள் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. சிஎன்ஜி வசதி அறிமுகம் செய்யும் பட்சத்தில் வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    டாடா டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் சிஎன்ஜி கிட் பொருத்த சிறந்த தேர்வாக இருக்கும். இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 
    லெக்சஸ் நிறுவனத்தின் 2022 இஎஸ் மாடல் ஆட்டோ ஷாங்காய் மோட்டார் நிகழ்வில் அறிமுகமாக இருக்கிறது.


    லெக்சஸ் நிறுவனம் புதிய தலைமுறை இஎஸ் செடான் மாடலை அறிமுகம் செய்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏற்கனவே இந்த மாடலுக்கு அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதல் அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் இஎஸ் மாடலின் புது வேரியண்ட் அறிமுகமாகிறது.

    ஆட்டோ ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகமாக இருக்கும் 2022 லெக்சஸ் இஎஸ் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரின் படி புது இஎஸ் மாடல் புதுவித ஹெட்லேம்ப் டிசைன், வித்தியாசமான டே-டைம் ரன்னிங் லைட்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

     லெக்சஸ் இஎஸ் டீசர்

    ஹெட்லேம்ப் மற்றும்  டெயில்-லேம்ப்களில் முற்றிலும் வித்தியாசமான லைட்டிங் இருக்கும் என்றும் புது அலாய் வீல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இவைதவிர புது லெக்சஸ் கார் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதன் உள்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

    அதன்படி டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் புளோட்டிங் இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் இன்டர்பேஸ் மாற்றப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2021 ஆரா மாடல் கார் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    2021 ஹூண்டாய் ஆரா இந்திய சந்தையில் அறிமுகமானது. முன்னதாக 2021 ஹூண்டாய் ஆரா மாடல் விற்பனையகம் வந்தடைந்தது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. புதிய ஆரா மாடல் விலை முந்தைய மாடலை விட ரூ. 4 ஆயிரம் அதிகமாகி இருக்கிறது. 

    எனினும், இதன் பேஸ் வேரியண்ட் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் விலை ரூ. 5.92 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.34 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

     ஹூண்டாய் ஆரா

    புதிய சப்-4 மீட்டர் செடான் மாடலின் எஸ் பெட்ரோல் வேரியண்டில் 15 இன்ச் வீல்கள் உள்ளன. பேஸ் வேரியண்ட் தவிர அனைத்து வேரியண்ட்களிலும் 14 இன்ச் ஸ்பேர் டையர் வழங்கப்படுகிறது. என்ட்ரி லெவல் மாடலில் 13 இன்ச் யூனிட் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் ஆரா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் போன்ற என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய ஹூண்டாய் ஆரா மாடல் போர்டு ஆஸ்பையர், மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய சிடி110எக்ஸ் மோட்டார்சைக்கிள் அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் சிடி110எக்ஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 55,494 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெறுகிறது. மேலும் இது நாடு முழுக்க பஜாஜ் விற்பனையகங்களுக்கு வர துவங்கிவிட்டது.

     பஜாஜ் சிடி110எக்ஸ்

    புதிய சிடி110எக்ஸ் மாடலின் பின்புற பென்டர் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. முன்புற பென்டரும் சிறிதளவு மாற்றப்பட்டு மேட் பிளாக் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி டிஆர்எல் கொண்ட ஹெட்லேம்ப் கவுல், ஹேண்டில்பார் பிரேஸ், பெரிய என்ஜின் கார்டு மற்றும் சம்ப் கார்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    பஜாஜ் சிடி110எக்ஸ் மாடலில் 115சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.48 பிஹெச்பி பவர், 9.81 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய பஜாஜ் மோட்டார்சைக்கிள் புளூ மற்றும் பிளாக், ரெட் மற்றும் பிளாக், கிரீன் மற்றும் கோல்டன் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.
    அப்ரிலியா SXR 125 மேக்சி ஸ்கூட்டர் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    அப்ரிலியா நிறுவனம் தனது SXR 125 மேக்சி ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய SXR 125 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. அப்ரிலியா SXR 125 முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். 

     அப்ரிலியா SXR 125

    விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய அப்ரிலியா ஸ்கூட்டர் இந்திய விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய அப்ரிலியா SXR 125 மாடல் விலை ரூ. 1.16 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என கூறப்படுகிறது. இது SXR 160 மாடலை விட ரூ. 9 ஆயிரம் குறைவு ஆகும்.

    அறிமுகமானதும் புதிய அப்ரிலியா SXR 125 மாடல் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலுக்கு போட்டியாக அமையும். டிவிஎஸ் என்டார்க் ரேஸ் எடிஷன் இந்த மாடலுக்கு போட்டியாக இருக்காது என்றாலும் இது அப்ரிலியா SXR 125 மாடலை விட ரூ. 38 ஆயிரம் விலை குறைவு. 
    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்த எஸ்-சிஎன்ஜி ரக வாகன விவரங்களை வெளியிட்டுள்ளது.


    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் 2020-21 நிதியாண்டில் மட்டும் 1.57 லட்சம் எஸ்-சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. எஸ்-சிஎன்ஜி வாகன விற்பனையில் இது மற்ற நிறுவனங்கள் இதுவரை எட்டாத மைல்கல் ஆகும்.

     மாருதி சுசுகி கார்

    தற்போது ஆல்டோ, செலரியோ, வேகன்ஆர், எஸ் பிரெஸ்ஸோ, இகோ, எர்டிகா மற்றும் டூர் எஸ் போன்ற மாடல்களில் மாருதி சுசுகி சிஎன்ஜி வசதியை வழங்குகிறது. பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி சூப்பர் கேரி வர்த்தக வாகனத்திலும் இதே வசதியை மாருதி சுசுகி வழங்கி வருகிறது. 

    2016-17 மற்றும் 2017-18 நிதியாண்டில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 70 ஆயிரம் எஸ் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்தது. பின் இரண்டு நிதியாண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் யூனிட்களாக அதிகரித்தது.
    போக்ஸ்வேகன் நிறுவனம் தனது போலோ மாடலை புது நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.


    போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் கம்பர்ட்லைன் டிஎஸ்ஐ வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 7.41 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மெட்டாலிக் நிற வேரியண்ட் விலை ரூ. 7.51 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     போக்ஸ்வேகன் போலோ

    புதிய கம்பர்ட்லைன் மாடல் 1.0 லிட்டர் எம்பிஐ என்ஜின், மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் வழங்கப்பட்டது. புதுய வேரியண்டில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்படுகிறது. இது கம்பர்ட்லைன் மற்றும் ஹைலைன் பிளஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    1.0 லிட்டர், 3  சிலிண்டர் டிஎஸ்ஐ மோட்டார் 109 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் ஹைலைன் பிளஸ் வேரியண்டில் மட்டும் வழங்கப்படுகிறது. 
    ஸ்கோடா நிறுவனத்தின் 2021 கோடியக் பேஸ்லிப்ட் மாடல் பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது.


    ஸ்கோடா நிறுவனம் மேம்பட்ட கோடியக் பேஸ்லிப்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. மூன்றடுக்கு இருக்கை கொண்ட புது எஸ்யுவி மாடலில் மேம்பட்ட முன்புறம் மற்றும் கேபின் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆர்எஸ் ட்ரிம் சார்ந்து உருவாகி இருக்கும் கோடியக் மாடல் இரு டீசல், மூன்று பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட முன்புற கிரில், எல்இடி ஹெட்லைட் வழங்கப்படுகிறது. மேலும் பயனர் விரும்பினால் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்களை பெறும் வசதியும் வழங்கப்படுகிறது. பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் புது டிசைனில் வழங்கப்படுகிறது. கோடியக் மாடல் 17 முதல் 20 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

     ஸ்கோடா கோடியக்

    2021 ஸ்கோடா கோடியக் மாடல் கேபினில் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல், ஆம்பியன்ட் லைட்டிங், 9.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், முன்புறம் லெதர் இருக்கைகள் உள்ளன. இத்துடன் 10.25 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    புதிய கோடியக் மாடல் 2.0 லிட்டர் என்ஜின், முன்புற வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் வழங்கப்படுகிறது. இவை முறையே 147 பிஹெச்பி பவர் மற்றும் 197 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின், ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பம் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறை 147 பிஹெச்பி பவர், 188 பிஹெச்பி பவர் மற்றும் 241 பிஹெச்பி பவர் வழங்குகிறது. 
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு மீண்டும் ஆன்லைனில் துவங்கி இருக்கிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய ரூ.2  ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1,15,000 எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

     பஜாஜ் செட்டாக்

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி முன்பதிவு நிறுத்தப்பட்டது. பின் இந்த மாடலுக்கான உற்பத்தி மீண்டும் துவங்கி இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்களும், 25 சதவீதம் சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் ஆகும். செட்டாக் ஸ்கூட்டரை 3-பின் ஏசி 220 வோல்ட், 5ஏ கிரவுண்ட் வால் சாக்கெட் மூலம் சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்கூட்டர் லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டார் சீரிஸ் மாடல்கள் விலை இந்தியாவில் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டது.


    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஹெக்டார் மாடலை தொடர்ந்து மூன்றடுக்கு இருக்கைகள் ஹெக்டார் வேரியண்டை எம்ஜி ஹெக்டார் பிளஸ் பெயரில் அறிமுகம் செய்தது. இத்துடன் முற்றிலும் மின்சக்தியில் இயங்கும் எம்ஜி இசட்எஸ் இவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. 

    தற்போது ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. எம்ஜி ஹெக்டார் மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் விலை ரூ. 28 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

     எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் கொண்ட ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஸ்டைல், சூப்பர் மற்றும் ஸ்மார்ட் வேரியண்ட்களின் விலை ரூ. 38 ஆயிரமும், ஷார்ப் வேரியண்ட் விலை ரூ. 43 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    எம்ஜி ஹெக்டார் பிளஸ் பெட்ரோல் ஹைப்ரிட் வேரியண்ட்களின் விலை ரூ. 28 ஆயிரமும், சூப்பர் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்களின் விலை ரூ. 43 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    கோவாவை சேர்ந்த கபிரொ மொபிலிட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டெலிவரி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.


    எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான கபிரா மொபிலிட்டி ஹெர்மஸ் 75 பெயரில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இது அதிவேகமாக செல்லும் வர்த்தக டெலிவரி ஸ்கூட்டர் ஆகும். இந்தியாவில் இதன் விலை ரூ. 89,600 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     ஹெர்மஸ் 75

    இந்த டெலிவரி ஸ்கூட்டருடன் வரும் பேட்டரி மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 முதல் 120 கிலோமீட்டர் வரை செல்லும், ஸ்வாப் செய்யக்கூடிய பேட்டரி மாடல் 80 கிலோமீட்டர் வரை செல்லும். ஹெர்மஸ் 75 மாடலில் 60V 40 aH லி-அயன் ரேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. 

    இது பேட்டரியை 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இது இந்தியாவில் கிடைக்கும் அதிவேக வர்த்தக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
    ×