என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா தார் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார் மாடல் முன்பதிவில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை புதிய தார் மாடலை வாங்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
அறிமுகமானது முதல் கணிசமான வரவேற்பு பெற்று வருவதை தொடர்ந்து புதிய தார் மாடல் உற்பத்தியை அதிகப்படுத்தும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை தார் மாடல் மஹிந்திராவின் நாசிக் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மஹிந்திரா தார் மாடல் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 2020 மஹிந்திரா தார் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 130 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படுகிறது. இது 150 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
டுகாட்டி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்டிரீட்பைட்டர் வி4 மோட்டார்சைக்கிள் விரைவில் வெளியாக இருக்கிறது.
டுகாட்டி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையகங்களில் புதிய ஸ்டிரீட்பைட்டர் வி4 மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெறுகிறது. முன்பதிவு விற்பனையகம் தரப்பில் மட்டுமே துவங்கி இருக்கிறது. டுகாட்டி இந்தியா சார்பில் இதுபற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் வி4 இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்டிரீட்பைட்டர் வி4 மாடல் சர்வதேச சந்தையில் கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர், கவாசகி இசட் ஹெச்2, யமஹா எம்டி 10, அப்ரிலியா டியோனோ வி4 மற்றும் பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

பிளாக்ஷிப் நேக்கட் ரோட்ஸ்டர் மாடலில் 1103சிசி டெஸ்மோசிடிகி ஸ்டிரேடேல் வி4 என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் பேனிகேல் வி4 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லிக்விட் கூல்டு வி4 என்ஜின் 205 பிஹெச்பி பவர் திறன் கொண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் டார்க் ஸ்டெல்த் மற்றும் டுகாட்டி ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவிலும் இந்த இரு நிறங்கள் கொண்டுவரப்படும் என தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிளாட்டினா மற்றும் சிடி100 மாடல்கள் விலை இந்திய சந்தையில் இரண்டாவது முறையாக மாற்றப்பட்டு உள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பளாட்டினா மற்றும் சிடி100 மாடல்கள் விலை இந்திய சந்தையில் மீண்டும் உயர்த்தப்பட்டது. அதன்படி இந்த மாடல்கள் விலை ரூ. 750-இல் துவங்கி ரூ. 1700 வரை உயர்ந்து இருக்கிறது.
என்ட்ரி லெவல் சிடி100 மாடல் விலை ரூ. 1498 உயர்த்தப்பட்டு தற்போது இதன் விலை ரூ. 49,152 எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.
பஜாஜ் சிடி100 பிஎஸ்6 மாடலில் ஏர்-கூல்டு, சிங்கில் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 102சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 7.5 பிஹெச்பி பவர், 8.34 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

சிடி110 அலாய் மற்றும் அலாய் எக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பஜாஜ் சிடி110 அலாய் மற்றும் அலாய் எக்ஸ் மாடல் விலை முறையே ரூ. 1696 மற்றும் ரூ. 1356 உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இவற்றின் புதிய விலை முறையே ரூ. 53,498 மற்றும் ரூ. 55,494 என மாறி இருக்கிறது.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பஜாஜ் சிடி110 மாடலில் 115.4சிசி, ஏர் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 8.4 பிஹெச்பி பவர், 9.81 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 முதல் காலாண்டிற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் 2021 முதல் காலாண்டில் மட்டும் 5,90,999 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. சீனா மற்றும் அமெரிக்க சந்தைகளில் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பென்ஸ் நிறுவனம் வாகன விற்பனையில் 22.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஐரோப்பியாவில் விற்பனையான நான்கு பென்ஸ் மாடல்களில் ஒன்று xEV மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் ஒட்டுமொத்த விற்பனையில் பத்து சதவீதம் இடம்பிடித்துள்ளன. பென்ஸ் நிறுவனத்தின் EQA மாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 20 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. இதுதவிர மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQS, EQB மற்றும் EQE என மூன்று புது மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பெனலி நிறுவனத்தின் 2021 302ஆர் மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலை விட குறைந்த எடை கொண்டிருக்கிறது.
இத்தாலி நாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளரான பெனலி இந்த ஆண்டு இதுவரை மட்டும் மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது. இந்த வரிசையில் 302ஆர் மாடலும் இணைந்துள்ளது. இந்த மாடல் கவாசகி நின்ஜா 300, கேடிஎம் ஆர்சி 390 மற்றும் டிவிஎஸ் அபாச்சி ஆர்ஆர் 310 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

புதிய 2021 பெனலி 302ஆர் மாடலில் 300சிசி பேரலெல் ட்வின் என்ஜின், லிக்விட் கூலிங் பிஎஸ்6 டியூனிங்கில் வழங்கப்படுகிறது. இது 34.5 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. செயல்திறன் அடிப்படையில் இது முந்தைய என்ஜினை விட குறைவு ஆகும்.
மேலும் இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட 22 கிலோ எடை குறைவு ஆகும். இதன் மொத்த எடை 182 கிலோ ஆகும். எடை குறைக்கப்பட்டு இருப்பதால், சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். மேலும் இது ஒட்டுமொத்த செயல்திறனை கணிசமாக அதிகப்படுத்தும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவன கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் மாதத்துக்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் லாயல்டி தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது.
டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் மற்றும் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டிகோர் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. நெக்சான் டீசல் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் கள்ளுபடி வழங்கப்படுகிறது.

மிட்-சைஸ் எஸ்யுவி மாடலான ஹேரியர், கமோ, டார்க் எடிஷன், XZ+ மற்றும் XZA+ வேரியண்ட்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 40 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டாடா அல்ட்ரோஸ், டாடா சபாரி போன்ற மாடல்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த சலுகைகள் ஏப்ரல் 30 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
கேடிஎம் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
2021 கேடிஎம் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில், 2020 கேடிஎம் ஆர்சி 390 இந்திய வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
புதிய ஆர்சி 390 பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி வருகிறது. புது மாடலின் ரைடிங் பொசிஷன் மாற்றப்பட்டு டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. இதுதவிர புது ஸ்டைலிங் மற்றும் பாடிவொர்க் கொண்டிருக்கிறது.

ஸ்பை படங்களின் படி இந்த மாடலில் புல் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது. இது ஆர்சி8 சூப்பர்பைக் மாடலில் இருந்ததை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் புது மாடல் மேம்பட்ட பிரேம், சப்-பிரேம், வீல்கள், புது சீட்கள் மற்றும் எக்சாஸ்ட் கேனிஸ்டர் வழங்கப்படுகிறது.
390 டியூக் மாடலில் உள்ளதை போன்றே 2021 ஆர்சி 390 மாடலிலும் டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் சற்றே மாற்றப்பட்ட 373சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். புதிய மாடல் விலை ரூ. 2.80 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
யமஹா நிறுவனம் தனது எம்டி 15 மாடலுக்கான புதிய விலையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்திய சந்தையில் யமஹா எம்டி 15 மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தி இருக்கிறது. யமஹா எம்டி 15 அனைத்து நிற வேரியண்ட் விலையும் ரூ. 1000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி யமஹா எம்டி 15 மாடல் விலை ரூ. 1.41 லட்சத்தில் துவங்கி ரூ. 1.45 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
யமஹா எம்டி 15 இந்தியாவில் விற்பனையாகும் வித்தியாசமான மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாகும். இது 150சிசி பிரிவில் லிக்விட் கூலிங் வசதியுடன் கிடைக்கும் ஒற்றை நேக்கட் மாடல் ஆகும். மேலும் இந்த பிரிவின் சக்திவாய்ந்த நேக்கட் மாடலும் இது தான்.

யமஹா எம்டி 15 மாடலில் எல்இடி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், டேன்க் பேனல்கள், ரேடியேட்டர் எக்ஸ்டென்ஷன்களை கொண்டுள்ளது. மேலும் இந்த மாடல் 155சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 18.4 பிஹெச்பி பவர், 14.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக், சிங்கில் சேனல் ஏபிஎஸ், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.
நிசான் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எஸ்யுவி மாடலுக்கு இந்திய சந்தையில் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
நிசான் நிறுவனம் தனது கிக்ஸ் பிளாக்ஷிப் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்களை வழங்குகிறது. நிசான் கிக்ஸ் வேரியண்டிற்கு ஏற்ப சலுகை பலன்கள் வேறுபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ரூ. 50 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை, ரூ. 20 ஆயிரம் கேஷ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வாடிக்கையாளர் சிபில் ஸ்கோர் பொருத்து வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் நிசான் கிக்ஸ் மாடல் - XL, XV, XV பிரீமியம் மற்றும் XV பிரீமியம் ஒ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9.49 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.64 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது சைபர்ஸ்டெர் மாடலின் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய சைபர்ஸ்டெர் எலெக்ட்ரிக் சூப்பர்கார் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. சைபர்ஸ்டெர் கான்செப்ட் மாடல் 2021 ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த விழா ஏப்ரல் 21 துவங்கி ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புகைப்படங்களின் படி புதிய சூப்பர்கார் இரண்டு கதவுகள், இரு இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் மாடல் ஆகும். இது எம்ஜி ரோட்ஸ்டர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிநவீன அம்சங்கள், கேமிங் காக்பிட் மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.
எம்ஜி சைபர்ஸ்டெர் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருப்பதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. மேலும் இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3 நொடிகளில் எட்டிவிடும்.
ஆடி நிறுவனம் கியூ4 இ டிரான் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனத்தின் இ டிரான் எலெக்ட்ரிக் மாடலை சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கியூ4 இ டிரான் மற்றும் கியூ4 இ டிரான் ஸ்போர்ட்பேக் வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவை காம்பேக்ட் கார் பிரிவில் ஆடி நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்கும்.

தற்போது புது எலெக்ட்ரிக் மாடலுக்கான டீசரை ஆடி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. புதிய கியூ4 இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் விர்ச்சுவல் நிகழ்வில் அறிமுகமாக இருக்கிறது. இ டிரான், இ டிரான் ஸ்போர்ட்பேக் மற்றும் இ டிரான் ஜிடி மாடல்கள் வரிசையில் நான்காவது மாடலாக இது இருக்கிறது.
புது மாடலில் பல்வேறு ஸ்கிரீன்கள், ஆக்மென்டெட் ரியாலிட்டி, ஏஐ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதன் இருக்கைகள் நப்பா லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. ஆடி கியூ4 இ டிரான் மற்றும் கியூ4 இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல் ஏப்ரல் 14 ஆம் தேதி அறிமுகமாகிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 125சிசி ஸ்போர்ட் ஸ்கூட்டர் மாடல் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது என்டார்க் 125சிசி ஸ்கூட்டர் விலையை உயர்த்தி இருக்கிறது. தற்போது இந்த மாடல் விலை ரூ. 1540 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் சூப்பர் ஸ்குவாட் எடிஷன் விலை ரூ. 540 அதிகரிக்கப்பட்டு உள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125 புது விலை விவரம்
டிவிஎஸ் என்டார்க் 125 டிரம் மாடல் ரூ. 71,095
டிவிஎஸ் என்டார்க் 125 டிஸ்க் மாடல் ரூ. 75,395
டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் மாடல் ரூ. 78,375
டிவிஎஸ் என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் மாடல் ரூ. 81,075
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஹோண்டா, யமஹா, ஹீரோ மற்றும் பஜாஜ் போன்ற நிறுவனங்களும் தங்களின் வாகனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது டிவிஎஸ் என்டார்க் 125 மாடல் இணைந்துள்ளது.
டிவிஎஸ் என்டார்க் 125 மாடலில் 124.8சிசி ஏர் கூல்டு, மூன்று வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 9.1 பிஹெச்பி பவர், 10.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 12 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ஹோண்டா கிரேசியா, யமஹா ரே இசட்ஆர் 125, சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.






