search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டிவிஎஸ் என்டார்க் 125
    X
    டிவிஎஸ் என்டார்க் 125

    என்டார்க் 125 விலையை உயர்த்திய டிவிஎஸ்

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 125சிசி ஸ்போர்ட் ஸ்கூட்டர் மாடல் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது என்டார்க் 125சிசி ஸ்கூட்டர் விலையை உயர்த்தி இருக்கிறது. தற்போது இந்த மாடல் விலை ரூ. 1540 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் சூப்பர் ஸ்குவாட் எடிஷன் விலை ரூ. 540 அதிகரிக்கப்பட்டு உள்ளது.

     டிவிஎஸ் என்டார்க் 125

    டிவிஎஸ் என்டார்க் 125 புது விலை விவரம்

    டிவிஎஸ் என்டார்க் 125 டிரம் மாடல் ரூ. 71,095
    டிவிஎஸ் என்டார்க் 125 டிஸ்க் மாடல் ரூ. 75,395
    டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் மாடல் ரூ. 78,375
    டிவிஎஸ் என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் மாடல் ரூ. 81,075

    ஏப்ரல் 1 ஆம் தேதி  முதல் ஹோண்டா, யமஹா, ஹீரோ மற்றும் பஜாஜ் போன்ற நிறுவனங்களும் தங்களின் வாகனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது டிவிஎஸ் என்டார்க் 125 மாடல் இணைந்துள்ளது.

    டிவிஎஸ் என்டார்க் 125 மாடலில் 124.8சிசி ஏர் கூல்டு, மூன்று வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 9.1  பிஹெச்பி பவர், 10.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 12 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ஹோண்டா கிரேசியா, யமஹா ரே இசட்ஆர் 125, சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    Next Story
    ×