என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிள் 675சிசி என்ஜின் கொண்டிருக்கிறது.
டிரையம்ப் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிள் ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 6.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது டிரையம்ப் டிரைடென்ட் 660 மாடலின் வினியோகம் துவங்கி இருக்கிறது.
டிரைடென்ட் 660 மாடலில் ப்ளூடூத் மாட்யூல் வசதியுடன் கூடிய டிஎப்டி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு செயல்படும். மேலும் கூடுதல் தொகைக்கு கோப்ரோ கேமரா கண்ட்ரோல் செய்வதற்கான வசதியும் இந்த மாடலுடன் வழங்கப்படுகிறது.

புதிய டிரையம்ப் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளில் 660 சிசி இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.
இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் டிஎப்டி டிஸ்ப்ளே, ஆப்ஷனல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யுவி மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி மாடலாக கிரெட்டா இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஹூண்டாய் கிரெட்டா இந்திய சந்தை விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த கிரெட்டா தற்போது ஆறு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
அந்த வகையில் 1.06 லட்சம் யூனிட்கள் ஒன்பதே மாதங்களில் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் கிரெட்டா புது தலைமுறை வேரியண்ட் விற்பனைக்கு வந்தது. அறிமுகமான ஒரே ஆண்டிற்குள் இந்த மாடல் சுமார் 1.06 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

கடந்த மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா முதலிடம் பிடித்தது. முன்னதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா மாடல் - 1.5 லிட்டர், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா மாடல் கியா செல்டோஸ், டாடா ஹேரியர் மற்றும் எம்ஜி ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி இந்த மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
கேஷ்பேக் மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான சேமிப்பை வழங்கும் நிதி சலுகையை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி இந்திய விலை விவரம்
அபாச்சி ஆர்டிஆர் 200 4வி சிங்கில் சேனல் ஏபிஎஸ் - ரூ. 1,23,520
அபாச்சி ஆர்டிஆர் 200 4வி சிங்கில் சேனல் ஏபிஎஸ் மற்றும் மோட்கள் - ரூ. 1,28,000
அபாச்சி ஆர்டிஆர் 200 4வி டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ. 1,28,520
அபாச்சி ஆர்டிஆர் 200 4வி டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் மோட்கள் - ரூ. 1,29,520
இந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் கிளாஸ் பிளாக் மற்றும் மேட் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் 197.75சிசி ஆயில் கூல்டு FI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.54 பிஹெச்பி பவர், 17.25 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
லெக்சஸ் நிறுவனத்தின் புதிய NX என்ட்ரி லெவல் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லெக்சஸ் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் எஸ்யுவி-யான NX மாடலின் இரண்டாம் தலைமுறை வேரியண்டை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. லெக்சஸ் நிறுவனத்தின் அதிக வரவேற்பு பெற்ற மாடல்களில் ஒன்றாக NX இருந்து வருகிறது.
சமீபத்தில் லெக்சஸ் காட்சிப்படுத்திய LF-Z EV கான்செப்டை தழுவி புதிய NX மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. புதிய இரண்டாம் தலைமுறை லெக்சஸ் NX முற்றிலும் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கிறது. பக்கவாட்டில் புது கார் பெரிய ஏர் டேம்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள் உள்ளன. இந்த காரின் முன்புறம் பெரிய ஸ்பின்டில் கிரில் உள்ளது. இதில் உள்ள நீண்ட பொனெட் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. மேலும் இதன் கூர்மையான கிரீஸ்கள் புது காரை முந்தைய மாடலை விட வித்தியாசமானதாக மாற்றுகிறது.
லெக்சஸ் NX மாடல் 2.5 லிட்டர் பெட்ரோல், 2.5 லிட்டர் பெட்ரோல் பிளக்-இன் ஹைப்ரிட், 2.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் என பலவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அதிரடி திட்டம் ஒன்றை மாஸ்கோ மேயர் அறிவித்து இருக்கிறார்.
ரஷ்யா நாட்டில் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு புத்தம் புது கார் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கார்கள் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. ரஷ்யாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதை தொடர்ந்து இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாஸ்கோ நகரின் மேயர் செர்கி சோப்யாயின் இந்த திட்டத்தை அறிவித்தார். புத்தம் புது கார் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்பதால் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று முதல் 18 வயதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொள்வோர் முற்றிலும் புது காரை பரிசாக வெல்வதற்கான போட்டியில் பங்கேற்க முடியும். இந்த திட்டம் ஜூலை 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
அடுத்த நான்கு வாரத்தில் குறைந்தபட்சம் ஐந்து கார்கள் ஒவ்வொரு வாரமும் வழங்கப்பட இருக்கிறது. மொத்தத்தில் இந்த திட்டத்தின் கீழ் 20 வாகனங்கள் வழங்கப்பட இருக்கின்றன. ரஷ்யாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் மாஸ்கோ ஒன்றாகும்.
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் பென்ஸ் EQC, ஜாகுவார் ஐ பேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த எலெக்ட்ரிக் கார் நாட்டின் பல்வேறு விற்பனையகங்களுக்கு வந்தைடந்துள்ளது. இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடலாக இ டிரான் வெளியாக இருக்கிறது.
இ டிரான் மாடல் முன்புறம் ஒற்றை பீஸ் பிளான்க்டு-அவுட் கிரில் வழங்கப்படுகிறது. இத்துடன் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், இ டிரான் மாடலுக்கான பிரத்யேக டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. டெயில் லேம்ப்கள் மெல்லியதாகவும், கூர்மையாகவும் உள்ளது. இது டெயில்கேட் முழுக்க நீள்கிறது.

இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்ப்படுகின்றன. இவை இணைந்து 402 பிஹெச்பி பவர், 664 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 400-க்கும் அதிக கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும்.
இந்தியாவில் புதிய ஆடி இ டிரான் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் EQC மற்றும் ஜாகுவார் ஐ பேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ஜூன் 30 வரை அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு டாடா மோட்டார்ஸ் ரூ. 65 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்களை வழங்குகிறது.
அதன்படி டாடா டியாகோ, டிகோர், நெக்சான் மற்றும் ஹேரியர் போன்ற மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. இவை ஜூன் 30 ஆம் தேதி வரை கிடைக்கும். டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

டிகோர் சப்-காம்பேக்ட் செடான் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. நெக்சான் சப்-காம்பேக்ட் எஸ்யுவி டீசல் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நெக்சான் பெட்ரோல் வேரியண்டிற்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.
டாடா ஹேரியர் மாடலுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஹேரியர் கமோ, டார்க் எடிஷன், XZ+ மற்றும் XZA+ போன்ற மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.
சிஎப் மோட்டோ நிறுவனத்தின் பிஎஸ்6 ரக 300NK மோட்டார்சைக்கிளின் மெக்கானிக்கல் அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சிஎப் மோட்டோ நிறுவனம் தனது 300NK பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை வினியோகம் செய்ய துவங்கி இருக்கிறது. புதிய சிஎப் மோட்டோ 300NK பிஎஸ்6 மாடல் மார்ச் 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 2.29 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

புதிய பிஎஸ்6 மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களை சிஎப் மோட்டோ இதுவரை அறிவிக்கவில்லை. முந்தைய மாடலில் 292.4சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டது. இந்த என்ஜின் 33.5 பிஹெச்பி பவர், 20.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது.
தோற்றத்தில் புது மாடல் முந்தைய வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது. 300NK பிஎஸ்6 மாடலில் லோ-ஸ்லங் புல் எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மஸ்குலர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ரக சீட்கள், 5 ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 எஸ் கிளாஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் புதிய எஸ் கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய எஸ் கிளாஸ் மெர்சிடிஸ் நிறுவனத்தின் டாப் எண்ட் ஆடம்பர செடான் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. புது எஸ் கிளாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை வெளியான எஸ் கிளாஸ் மாடல்களில் அதிகளவு ஆடம்பர அம்சங்கள் நிறைந்த மாடலாக இது இருக்கிறது.

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல் S400d மற்றும் S450 வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த மாடல் 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இவை 367 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. S450 மாடலில் 435 பிஹெச்பி பவர், 520 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
பென்ஸ் எஸ் கிளாஸ் S350d மாடலில் உள்ள 3.0 லிட்டர் என்ஜின் 286 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறனும், S400d மாடலில் 330 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் குர்கா மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 குர்கா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஆப் ரோடு எஸ்யுவி மாடல் 15 மாதங்களுக்கு முன் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய குர்கா மாடல் 2022 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

2022 ஜூலை முதல் செப்டம்பர் மாத வாக்கில் புதிய குர்கா பிஎஸ்6 மாடல் இந்திய சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட விற்பனையகங்களில் ஆப்-ரோடு எஸ்யு மாடலுக்கான சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக பிஎஸ்6 போர்ஸ் குர்கா மாடல் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. முன்னதாக பலமுறை இந்த மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 லட்சமாவது நெக்சான் மாடலை தனது உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிட்டுள்ளது. புது மைல்கல் பற்றிய அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் எஸ்யுவிக்களின் முதல் மூன்று மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இடம்பெற்று இருக்கிறது.

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் சந்தைங்களில் ஆறாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் அறிமுகமாகும் கார்கள் எண்ணிக்கையும், அதற்கேற்ற போட்டியும் பலமாகவே இருக்கிறது. இந்தியாவில் எஸ்யுவி பிரிவு அதிக போட்டி மிக்கதாக இருக்கிறது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது. நெக்சான் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை டாடா மோட்டார்ஸ் குறிவைத்தது. இந்த மாடல் இந்திய சந்தையில் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் பல்வேறு காரணங்களால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இது இந்திய சாலை போக்குவரத்து துறையில் பெரும் பிரச்சினையாக உள்ளது. விபத்துகளை குறைக்க திறமையான டிரைவர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையங்களை நாடு முழுக்க உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் டிரைவர்கள் ஓட்டுனர் உரிமத்துக்காக ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனங்களை இயக்கி காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பயிற்சி மையங்களுக்கான விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. புதிய விதிமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

அதன்படி இந்த பயிற்சி மையங்களில் உயர்தர பயிற்சியை உறுதி செய்வதற்காக சிமுலேட்டர்கள், பிரத்யேக ஓட்டுனர் பயிற்சி தடங்கள் இருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் மேம்பட்ட பாடப்பிரிவுகள் இந்த மையங்களில் கற்பிக்கப்பட இருக்கின்றன.
இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள், ஓட்டுனர் உரிமம் பெற ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனங்களை இயக்க வேண்டிய அவசிம் இல்லை. இதன் மூலம் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாகும். இந்த மையங்கள் தொழில் சார்ந்த சிறப்பு பயிற்சியையும் வழங்க அனுமதிக்கப்படுகிறது.






