என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய ஹோண்டா கோல்டு விங் பிஎஸ்6 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது பிரீமியம் மாடல் விலை ரூ. 37.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2021 ஹோண்டா கோல்டு விங் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.

    புதிய கோல்டு விங் பிஎஸ்6 டாப் எண்ட் மாடல் விலை ரூ. 39.16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்து. இந்த மோட்டார்சைக்கிளை வாடிக்கையாளர்கள் ஹோண்டா ஆன்லைன் தளத்தில் முன்பதிவு செய்யலாம். இந்த மாடலின் வினியோகம் ஜூலை மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

     ஹோண்டா கோல்டு விங்

    இந்தியாவில் 2021 ஹோண்டா கோல்டு விங் பிஎஸ்6 மாடல் சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த மாடல் ஹோண்டாவின் பிரீமியம் பிங் விங் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் பியல் கிளேர் வைட் மற்றும் கன்மெட்டல் பிளாக் மெட்டாலிக் / மேட் மோரியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

    2021 ஹோண்டா கோல்டு விங் மாடலில் 1833சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 125 பிஹெச்பி பவர், 170 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 
    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வாகன ஆவணங்களுக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களுக்கான கால அவகாசத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.

     வாகனங்கள்

    கொரோனா பாதிப்பு காரணமாக ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் போன்ற மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் பலமுறை நீட்டித்து வந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் கால அவகாசம் நிறைவடைவய இருந்தது.

    தற்போது நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் இந்த கால அவகாசத்தை செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் 2021 ரேன்ஜ் ரோவர் வெலார் மாடல் இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2021 ரேன்ஜ் ரோவர் வெலார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 79.87 லட்சம் என்றும் டீசல் வேரியண்ட் விலை ரூ. 80.71 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     2021 ரேன்ஜ் ரோவர் வெலார்

    2021 ரேன்ஜ் ரோவர் வெலார் மாடலில் புதிதாக ஏர் சஸ்பென்ஷன் தொழில்நுட்பம், மேம்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, பிஎம் 2.5 பில்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. புது வெலார் மாடலில் ஸ்லோபிங் ரூப்-லைன் மற்றும் ராப் அரவுண்ட் டெயில் லேம்ப்கள் உள்ளன. 

    ரேன்ஜ் ரோவர் வெலார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் என்ஜின் 247 பிஹெச்பி பவர், 365 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 
    ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிரெட்டா எஸ்யுவி மாடலின் புது வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.


    ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டா SX எக்சிகியூடிவ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது வேரியண்ட் துவக்க விலை ரூ. 13.18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    ஹூண்டாய் கிரெட்டா SX பெட்ரோல் மாடல் விலை ரூ. 13.18 லட்சம் என்றும் டீசல் மாடலின் விலை ரூ. 14.18 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்படவில்லை. புதிய SX எக்சிகியூடிவ் வேரியண்ட் விலை SX பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை விட ரூ. 78 ஆயிரம் குறைவு ஆகும்.

     ஹூண்டாய் கிரெட்டா

    கிரெட்டா எஸ்யுவி புது வேரியண்ட் விவரங்கள் இதுவரை ஹூண்டாய் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாற்றப்படவில்லை. புது மாடலில் ஷார்க் பின் ஆன்டெனா, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ப்ளூடூத் மைக் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் கிரெட்டா SX மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் போன்ற என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 115 பிஹெச்பி பவர், 144 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் என்ஜின் 115 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஒகினவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை ரூ. 17 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.


    ஒகினவா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலையை குறைத்து இருக்கிறது. இந்தியாவில் பேம் 2 திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் மாற்றங்கள் காரணமாக விலை குறைப்பு அமலாகி இருக்கிறது. 

    புது மாற்றங்களின் படி பேம் 2 திட்டத்தில் பலன்பெற வாகனம் குறைந்தபட்சம் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்க வேண்டும். மாற்றப்பட்ட புது விலை பட்டியல் ஜூன் 11 ஆம் தேதி அமலுக்கு வந்தது. 

     ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    புதிய விலை பட்டியல் 

    ஒகினவா ஐபிரெய்ஸ் பிளஸ் ரூ. 99,708
    ஒகினவா பிரெய்ஸ் ப்ரோ ரூ. 76,848
    ஒகினவா ரிட்ஜ் பிளஸ் ரூ. 61,791

    ஒகினவா ரிட்ஜ் பிளஸ் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 84 கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. பிரெய்ஸ் ப்ரோ மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 88 கிலோமீட்டர்கள் செல்லும். இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களும் மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது.
    பந்தய களத்தில் வேகமாக வந்த காரின் முன் குறுக்கிட்ட அணில் வீடியோ ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது.


    கார் பந்தய களத்தில் விபத்து நடைபெறுவது சகஜம். பல்வேறு விபத்துகளில் ஓட்டுனர்கள் உயிர் தப்பும் சம்பவங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனால் தற்போது பந்தய களத்திற்கு துளியும் சம்மந்தமில்லாத அணில் ஒன்று விபத்தில் சிக்காமல் உயிர்தப்பிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.


    டெட்ராயிட் கிராண்ட் ப்ரிக்ஸ் கார் பந்தய களத்தில், ரியான் ஹன்டர் லீவி காரின் முன் அணில் ஒன்று வேகமாக குறுக்கிட்டது. வேகமாக வந்த கார் அணில் மீது மோதிவிடுமோ என்ற வகையில் வீடியோ காட்சிகள் இடம்பெற்று இருந்தன. எனினும், அணில் மீது கார் மோதவில்லை. 

    பந்தய களத்தில் குறுக்கிட்ட அணில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது. காரில் சிக்காமல் இருக்க வேகமாக தாவி குதித்த அணில் அருகில் இருந்த சுவர் ஓட்டையில் நுழைந்து தப்பி சென்றது. இந்த சம்பவத்தின் வீடியோ ட்விட்டர் தளத்தில் வெளியாகி இருக்கிறது. காரை வேகமாக ஓட்டிவந்த பந்தய வீரர் அணிலை பார்த்தாரா என உறுதியாக தெரியவில்லை. 

    சுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்டிரீட் 200 ஸ்கூட்டர் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    2022 சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 200 ஸ்கூட்டர் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் புது நிற ஆப்ஷன் பெற்று இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் பியல் வைட் மற்றும் புது டைட்டன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. தற்போது புதிதாக மேட் ஸ்டெல்லார் புளூ நிறத்திலும் கிடைக்கிறது.

     சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 200

    பர்க்மேன் ஸ்டிரீட் 200 ஸ்கூட்டர் பெரிய விண்ட்ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதன் அன்டர்சீட் ஸ்டோரேஜ் 41 லிட்டர்களாக இருக்கிறது. மேலும் இதன் பூட்போர்டு உயர்த்தப்பட்டு, பேடட் ஸ்டெப்-சீட் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது. 

    சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 200 மாடலில் 12V DC பவர் அவுட்புட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட லிக்விட் கூல்டு, 200 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது. இத்துடன் சிவிடி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2021 S 1000 R மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் 2021 பிஎம்டபிள்யூ S 1000 R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது பிஎம்டபிள்யூ S 1000 R விலை ரூ. 17.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு நாடு முழுக்க துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய சந்தையில் 2021 பிஎம்டபிள்யூ S 1000 R மோட்டார்சைக்கிள் - ஸ்டான்டர்டு, ப்ரோ மற்றும் எம் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 22.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     பிஎம்டபிள்யூ S 1000 R

    இதன் ஸ்டான்டர்டு மாடல் ரேசிங் ரெட் நிறத்திலும், ப்ரோ மாடல் ஹாகன்ஹெம் சில்வர் / மேட் காப்பர் நிறத்திலும், எம் ஸ்போர்ட் மாடல் லைட் புளூ, டார்க் புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 

    2021 பிஎம்டபிள்யூ S 1000 R மாடல் 998சிசி என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 162 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் என மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    இந்திய சந்தையில் ஸ்கோடா குஷக் எஸ்யுவி மாடல் MQB-A0-IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் குஷக் எஸ்யுவி மாடல் ஜூன் 28 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. புதிய குஷக் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

     2021 ஸ்கோடா குஷக்

    குஷக் எஸ்யுவி வோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் உருவாகி இருக்கும் முதல் மாடல் ஆகும். இது இந்தியாவுக்கான பிரத்யேக MQB-A0-IN பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்பார்மில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் உருவாகி இருக்கிறது.

    டைகுன் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் 2021 குஷக் மாடல் - ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என ஸ்கோடா தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த கார் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை திடீரென குறைத்து இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விலையை ரூ. 11,250 குறைத்து இருக்கிறது. புது விலை குறைப்பு மத்திய அரசின் பேம் 2 திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை தொடர்ந்து அமலாகி இருக்கிறது.

     டிவிஎஸ் ஐகியூப்

    விலை குறைப்பின் படி டிவிஎஸ் ஐகியூப் புதிய விலை ரூ. 1.01 லட்சம் என மாறி இருக்கிறது. தற்போது டிவிஎஸ் ஐகியூப் மாடல் பெங்களூரு மற்றும் டெல்லி என இரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டணத்தில் மூன்று ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

    டிவிஎஸ் ஐகியூப் மாடலில் 4.4kW எலெக்ட்ரிக் மோட்டார், லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 75 கிலோமீட்டர் வரை செல்லும். இது அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    டொயோட்டா நிறுவனத்தின் பிடாடி ஆலையில் ஒவ்வொரு நாளும் 50 சிலிண்டர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.


    டொயோட்டா நிறுவனம் தனது பிடாடி உற்பத்தி ஆலையின் கம்யூனிட்டி ஹெல்த் சென்டரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்திக்கென டொயோட்டா அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது.

     டொயோட்டா

    இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் நவம்பர் மாத வாக்கில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. 

    இதற்கென டொயோட்டா நிறுவனம் ரூ. 12 கோடி முதலீடு செய்து இருக்கிறது. இந்த ஆலை ஒவ்வொரு நாளும் 50 சிலிண்டர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் ராம்நகரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட இருக்கிறது. 
    ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் திடீரென குறைந்து இருக்கிறது.

    மத்திய அரசு சமீபத்தில் பேம் 2 திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலை குறைந்துள்ளது. ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

     ஏத்தர் 450எக்ஸ்

    புது விலை விவரம்

    ஏத்தர் 450 பிளஸ் - ரூ,1,13,416
    ஏத்தர் 450எக்ஸ்  - ரூ. 1,32,426

    ஜூன் 11 ஆம் தேதி வெளியான மத்திய அரசு அறிவிப்பின் படி ஜூன் 12 முதல் ஏத்தர் மாடல்கள் விலை மாற்றப்பட்டது. மத்திய அரசின் பேம் 2 திட்டத்தின் படி ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450 பிளஸ் மற்றும் 450எக்ஸ் மாடல்கள் விலை ரூ. 14,500 குறைக்கப்பட்டு இருக்கிறது.
    ×