என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
கவாசகி நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ஜூன் மாதத்திற்கான சலுகையை அறிவித்து இருக்கிறது.
கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் ஜூன் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட கவாசகி மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகின்றன.

ஜூன் மாதத்தில் கவாசகி வெர்சிஸ் 650, வல்கன் எஸ், நின்ஜா 1000SX, W800, KLX110, KLX140 மற்றும் KX100 போன்ற மாடல்களுக்கு அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து மாடல்களுக்கும் ஜூன் 30 வரை சலுகை வழங்கப்படுகிறது.
கவாசகி நிறுவனம் நியூ பிகினிங் வவுச்சர் ஒன்றை வழங்குகிறது. இவற்றை கொண்டு மோட்டார்சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலையை குறைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு மோட்டார்சைக்கிளுக்கும் ஏற்ப தள்ளுபடி வவுச்சர் மதிப்பு வேறுபடுகிறது. இந்த வவுச்சர் ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஜூன் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் விற்பனையாளர்கள் ஜூன் மாதத்திற்கான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச பேக்கேஜ் வடிவில் வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மாடலுக்கு ரூ. 1.5 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களின் டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இரு மாடல்களின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் சான்ட்ரோ இரா மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சான்ட்ரோ ஹேட்ச்பேக் மற்ற வேரியண்ட்களுக்கு கூடுதலாக ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஐ20 டீசல் மற்றும் iMT டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் பிளெயிட் எலெக்ட்ரிக் கார் மணிக்கு 321 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் மாடல் எஸ் பிளெயிட் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. நிகழ்வு தொடங்கும் முன் மேடையிலேயே புது எலெக்ட்ரிக் காரை டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஓட்டினார்.

புதிய டெஸ்லா மாடல் எஸ் பிளெயிட் துவக்க விலை 1,29,999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 95 லட்சம் ஆகும். புதிய எலெக்ட்ரிக் கார் வினியோகம் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த கார் ஜூன் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், வினியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
டெஸ்லா மாடல் எஶ் பிளெயிட் மாடல் 1020 பிஹெச்பி திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 321 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 627 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
ஜாகுவார் நிறுவனத்தின் 2021 எப் பேஸ் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் 2021 ஜாகுவார் எப் பேஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய எப் பேஸ் துவக்க விலை ரூ. 69.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக எப் பேஸ் மாடல் ஆர் டைனமிக் எஸ் வேரியண்டில் கிடைக்கிறது.

புதிய ஜாகுவார் எப் பேஸ் மார்ஸ் ரெட் மற்றும் சியனா டேன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 2021 ஜாகுவார் எப் பேஸ் புது காஸ்மெடிக் மாற்றங்கள், அடுத்த தலைமுறை டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜெனியம் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது.
2021 ஜாகுவார் எப் பேஸ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 247 பிஹெச்பி பவர், 365 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 201 பிஹெச்பி பவர், 430 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2021 ஆக்டேவியா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது ஆக்டேவியா துவக்க விலை ரூ. 25.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் ஸ்டைல் மற்றும் எல் அண்ட் கே என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புது ஆக்டேவியா ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ஸ்கோடா ஆக்டேவியா முந்தைய மாடலை விட வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரில் புது எல்இடி ஹெட்லேம்ப்கள், பட்டர்பிளை கிரில், செங்குத்தான ஸ்லாட்கள், புதிய 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட், பாக் லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

உள்புறம் 2 ஸ்போக் ஸ்டீரிங் வீல், ஷ்பிட்-பை-வயர் கியர்ஸ்டிக், 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் வழங்ப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் நிறுவன விற்பனையாகத்தில் போன்வில் டி100 மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கேரளா மாநிலத்தின் கொச்சியில் செயல்பட்டு வரும் டிரையம்ப் விற்பனையகத்தில் போன்வில் டி100 மோட்டார்சைக்கிள் மாடலுக்கு ரூ. 65 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. போன்வில் டி100 பிளாக் எடிஷன் மாடலுக்கு இந்த சலுகை ஜூன் 30 ஆம் தேதி, ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது.

டிரையம்ப் நிறுவனம் போன்வில் டி100 பிளாக் எடிஷன் மாடலை ரூ. 8,87,400 எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்தது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு வந்தது. இந்த மாடலில் 900சிசி, லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 54.3 பிஹெச்பி பவர், 80 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், டார்க் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் இந்த மாடல் முற்றிலும் பிளாக்டு-அவுட் தீம் கொண்டிருக்கிறது. தோற்றத்தில் இது ஸ்டான்டர்டு மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
மெக்லாரென் நிறுவன சூப்பர் கார் மாடல்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ப்ரிட்டன் நாட்டை சேர்ந்த சூப்பர்கார் உற்பத்தியாளரான மெக்லாரென் ஆட்டோமோட்டிவ் தனது ஜிடி, 720எஸ் மற்றும் 720எஸ் ஸ்பைடர் என மூன்று மாடல்களின் இந்திய விலையை அறிவித்து இருக்கிறது. அதன்படி என்ட்ரி லெவல் மெக்லாரென் ஜிடி மாடல் விலை ரூ. 3.72 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மெக்லாரென் 720எஸ் மற்றும் 720எஸ் ஸ்பைடர் மாடல்கள் விலை முறையே ரூ. 4.65 கோடி மற்றும் ரூ. 5.04 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புது மெக்லாரென் ஆர்டுரா காரை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
அனைத்து மெக்லாரென் கார்களும் இந்தியாவில் CBU முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்தியாவில் அமலாகி இருக்கும் புது இறக்குமதி வரி சலுகையை பயன்படுத்துகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனங்களும் 2500 யூனிட்களை சிபியு மற்றும் சிகேடி முறையில் ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி செய்யலாம். இவ்வாறு செய்ய ஹோமோலோகேஷன் பெற வேண்டிய அவசியமும் கிடையாது.
இருசக்கர வாகன உற்பத்தியாளான ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழக அரசுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி உதவி வழங்கி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள ராயல் என்பீல்டு நிறுவனம் ரூ. 2 கோடி நிதி உதவி வழங்கி இருக்கிறது. இந்த தொகை மாநிலத்தின் சுகாதார துறை சார்ந்த பணிகளை மேம்படுத்த செலவிடப்பட இருக்கிறது.
ராயல் என்பீல்டு சார்பாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் கே தசாரி ரூ. 2 கோடிக்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மூன்று உற்பத்தி ஆலைகள் திருவொற்றியூர், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகிறது.

ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் ராயல் என்பீல்டு தமிழ் நாட்டின் சூழல் அறிந்து தொடர்ந்து உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது. கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு கொடுத்திருக்கும் தொகையை கொண்டு ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்கள், பிபிஇ கிட் போன்ற மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட இருக்கின்றன. இத்துடன் இந்த தொகையை மற்ற செலவீனங்களுக்கும் பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் 2022 சிவிக் மாடல் இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் புத்தம் புதிய சிவிக் ஹேட்ச்பேக் மாடலுக்கான டீசர் படங்களை வெளியிட்டு இருக்கிறது. 2022 ஹோண்டா சிவிக் மாடல் ஜூன் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஹேட்ச்பேக் மாடல் சிவிக் செடான் காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

புதிய ஹோண்டா சிவிக் போன்றே சிவிக் ஹேட்ச்பேக் மாடலும் முந்தைய வேரியண்டை விட மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது. முன்புறம் செடான் மாடலை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டிருக்கிறது.
புதிய சிவிக் ஹேட்ச்பேக் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 158 பிஹெச்பி பவர், 187 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். இது 180 பிஹெச்பி பவர், 240 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்காசர் மாடல் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் அல்காசர் மாடல் ஜூன் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் அல்காசர் மாடல் ஏப்ரல் மாத வாக்கில் காட்சிப்படுத்தப்பட்டது. பின் கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இதன் வெளியீடு தாமதமானது.
தற்போது பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து அல்காசர் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ஹூண்டாய் அல்காசர் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. உலகின் மற்ற நாடுகளைவிட இந்த கார் முதற்கட்டமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. அல்காசர் மாடல் பல்வேறு ஆடம்பர வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
யமஹா நிறுவனத்தின் புதிய FZ X மாடல் முன்பதிவு துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளளது.
யமஹா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் புதிய FZ X நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு விற்பனையாளருக்கும் ஏற்ப முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்தில் துவங்கி ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய யமஹா FZ X மாடல் ஜூன் 18 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த மாடல் FZ S FI மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது நவீன-ரெட்ரோ ஸ்டைலிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், ஒற்றை பாட் கன்சோல், உயர்த்தப்பட்ட ஹேன்டில்பார், வட்ட வடிவ பியூவல் டேன்க் வழங்கப்படுகிறது.
காஸ்மெடிக் அடிப்படையில் புதிய யமஹா FZ X இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில் 149சிசி, ஏர் கூல்டு என்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 12.2 பிஹெச்பி பவர், 13.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டுகாட்டி நிறுவனத்தின் 2021 பேனிகேல் வி4 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் 2021 பேனிகேல் வி4 ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 23.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பேனிகேல் வி2 மாடலை விட விலை அதிகம் ஆகும்.
புதிய 2021 டுகாட்டி பேனிகேல் வி4 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ.23.50 லட்சம், டாப் எண்ட் எஸ் வேரியண்ட் விலை ரூ.28.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

டுகாட்டி பேனிகேல் வி4 மாடலில் அதிக அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இதில் விங்லெட்கள், ரிடர்ன் சேசிஸ், சஸ்பென்ஷன் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 2020 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது அதிக வாடிக்கையாளர்கள் கோரிக்கையை ஏற்று இந்த மாடல் இந்திய சந்தையில் வெளியாகி இருக்கிறது.
2021 டுகாட்டி பேனிகேல் வி4 மாடலில் 1103சிசி, பிஎஸ் 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வி4 டெஸ்மோசெடிகி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 211 பிஹெச்பி பவர், 124 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.






