என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்.சி.40 பெட்ரோல் மாடல் காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்வீடன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான வால்வோ எக்ஸ்.சி.40 மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் இதற்கான முன்பதிவுகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்.சி.40 மாடல் டி4 2.0 டீசல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் மாடல் தற்சமயம் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதன் விற்பனை அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கலாம்.

விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் எக்ஸ்.சி.40 மாடல் டி4 வேரியணட்டில் கிடைக்கும் என்றும் இதில் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். இத்துடன் 8-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
வால்வோ எக்ஸ்.சி.40 மாடலில் பேடிள்-ஷிஃப்டர்கள், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் பார்க்கிங், ஹீட்டெட் சீட், வையர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
இந்தியாவில் இந்த எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 34 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம். அறிமுகமானதும் எக்ஸ்.சி.40 பெட்ரோல் மாடல் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ., ஆடி கியூ3 மற்றும் மினி கண்ட்ரிமேன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய ஆரா சப்-காம்பேக்ட் செடான் காரின் சோதனையை அதிகாரப்பூர்வமாக துவங்கியிருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆரா சப்-காம்பேக்ட் செடான் காரின் சோதனையை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. புதிய ஆரா மாடல் அடுத்த தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆரா காரின் சோதனை ஹூண்டாய் நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து துவங்கப்பட்டுள்ளது. புதிய கார் பாலைவனங்கள், இமய மலை பகுதிகள் மற்றும் கிழக்கு கடலோர பகுதிகள் என இந்திய வானிலை மற்றும் சாலைகளில் தீவிர சோதனை செய்யப்படும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஹூண்டாய் ஆரா காரின் ப்ரோடோடைப் மாடல்கள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், தற்சமயம் இந்த கார் இந்தியா முழுக்க சோதனை செய்யப்பட இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஆரா கார் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆரா காரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புகைப்படம் நன்றி: TeamBHP
ஹோண்டா நிறுவனத்தின் எஸ்.பி. 125 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எஸ்.பி. 125 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் புதிய ஹோண்டா எஸ்.பி. 125 விலை ரூ. 72,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா எஸ்.பி. 125 டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹோண்டா எஸ்.பி. 125 டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 77,100 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹோண்டா நிறுவனத்தின் இரண்டாவது வாகனமாக எஸ்.பி. 125 வெளியாகி இருக்கிறது. முன்னதாக ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோண்டா எஸ்.பி. 125 மாடலில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.7 பி.ஹெச்.பி. @7500 ஆர்.பி.எம். மற்றும் 10.9 என்.எம். டார்க் @9000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புதிய எஸ்.பி. 125 மாடலில் ஹோண்டாவின் ஹெச்.இ.டி. அம்சம் வழங்கப்படுகிறது. இது மோட்டார்சைக்கிளின் மைலேஜ், என்ஜின் பயன்பாடு போன்றவற்றை மேம்படுத்தி என்ஜினில் இருந்து வரும் சத்தத்தை குறைக்கும்.
ஹோண்டா எஸ்.பி. 125 மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லேம்ப், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப், ஹெட்லைட் பீம், பாசிங் ஸ்விட்ச், ஸ்போர்ட் அலாய் வீல் மற்றும் குரோம் எக்சாஸ்ட் மஃப்ளர் கவர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஹோண்டா எஸ்.பி. 125 மோட்டார்சைக்கிள் ஸ்டிரைக்கிங் கிரீன், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், பியல் சைரென் புளூ மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா பி.எஸ். 6 டீசல் வேரியண்ட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களை பி.எஸ். 6 தரத்திற்கு உயர்த்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில் எர்டிகா பி.எஸ். 6 டீசல் காரை சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படும் கார் DDiS டீசல் என்ஜின் கொண்டுள்ளது. மேலும் காரின் பின்புற விண்ட்ஸ்கிரீனில் பி.எஸ். 6 ஆய்வுக்கான சோதனை என்பதை குறிப்பிடும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் புதிய பவர்டிரெயின் ஆப்ஷனுடன் சோதனை செய்யப்படுவதும் இந்த ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது.
புதிய எர்டிகா காரில் ஃபியாட் உருவாக்கிய 1.6 லிட்டர் பி.எஸ். 6 டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே என்ஜின் மாருதியின் எஸ் கிராஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது பி.எஸ். 4 வடிவில் வழங்கப்பட்டது.

எர்டிகா தவிர மாருதி சுசுகி நிறுவனம் எஸ் கிராஸ் ஹேட்ச்பேக் மாடலையும் பி.எஸ். 6 தரத்திற்கு உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக எஸ் கிராஸ் பி.எஸ். 6 கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
தற்சமயம் விற்பனை செய்ய்படும் எர்டிகா எம்.பி.வி. காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 94 பி.ஹெச்.பி. பவர், 225 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: Gaadiwaadi
அல்ட்ராவைலெட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அல்ட்ராவைலெட் ஆட்டோமோட்டிவ் எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அல்ட்ராவைலெட் எஃப்77 என அழைக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிளின் விலை இந்தியாவில் ரூ. 3 லட்சத்தில் துவங்கி ரூ. 3.25 லட்சம் (ஆன்-ரோடு, பெங்களூரு) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அல்ட்ராவைலெட் எஃப்77 மோட்டார்சைக்கிளில் 3 மாட்யூலர் லித்தியம் அயன் பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் திறன் 4.2 கிலோவாட் ஆகும். இந்த பேட்டரிகளுடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இவை ஒருங்கிணைந்து 33.5 பி.ஹெச்.பி. பவர் @2250 ஆர்.பி.எம். மற்றும் 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

புதிய எஃப்77 மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 147 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
பிரேக்கிங்கிற்கு எஃப்77 மாடலின் முன்புறம் 320 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அல்ட்ராவைலெட் எஃப்77 மாடல்: லைட்னிங், லேசர் மற்றும் ஷேடோ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் வடிவமைப்புகளில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மிகக்குறைந்தளவு கிராஃபிக்ஸ் கொண்டுள்ள எஃப்77 மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு இலவசமாக ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. டிசம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
புதிய இசட்.எஸ். எலெக்ட்ரிக் காரில் 150 ஹெச்.பி. எலெக்ட்ரிக் மோட்டார், 44.5 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 335 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.
இந்த பேட்டரியை 7 கிலோவாட் ஏ.சி. சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய ஏழு மணி நேரங்களும், 50 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது 0 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது.

இந்தியாவில் எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடலாக எம்.ஜி. இசட்.எஸ். வெளியாக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இந்த காரை வாங்குவோருக்கு டி.சி. ஃபாஸ்ட் சார்ஜரை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.
எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் அசெம்பல் செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த காரின் விலை ரூ. 22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிளின் விலையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் புல்லட் 350 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளின் விலையை உயர்த்தியுள்ளது. விலை மாற்றம் புல்லட் 350 ஏ.பி.எஸ்.: ஸ்டான்டர்டு மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என இரு வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இரு மாடல்களின் விலையும் ரூ. 4000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக இதன் ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 1.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் விலை ரூ. 1.26 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்சமயம் விலை மாற்றம் செய்யப்பட்டு, ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு மாடல் ரூ. 1.14 லட்சம் (முந்தைய விலையில் இருந்து ரூ. 2000 உயர்வு), புல்லட் 350 ஏ.பி.எஸ். எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் ரூ. 1.30 லட்சம் (முந்தைய விலையில் இருந்து ரூ. 4000 உயர்வு) என மாறியிருக்கிறது.
விலையை தவிர இருமாடல்களிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலில் 349சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு பி.எஸ். 4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர் @5250 ஆர்.பி.எம். மற்றும் 28 என்.எம். டார்க் @4000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புல்லட் 350 மாடல் ஆனிக்ஸ் பிளாக், புல்லட் சில்வர் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 இ.எஸ். மரூன், சில்வர், ஜெட் பிளாக், ரீகல் ரெட் மற்றும் ராயல் புளூ என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள் வழங்கப்படுகின்றன.
டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பகலில் எரியும் புதிய ஸ்ப்லிட்-எல்.இ.டி. லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய நெக்சான் கார் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் புதிய காரில் மேம்பட்ட பொனெட், முன்புற பம்ப்பர், புதிய ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள் காணப்படுகின்றன. இந்த எஸ்.யு.வி. மாடலில் மேம்பட்ட கிரில் வழங்கப்படுகிறது. இதுவரை கிடைத்தி்ருக்கும் தகவல்களின் படி இந்த காரின் பின்புறத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என கூறப்படுகிறது.

காரின் வெளிப்புறம் பற்றிய விவரங்கள் ஓரளவு வெளியாகிவிட்டது. காரின் உள்புறத்தில் அதிக பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது. புதிய நெக்சான் காரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்கள், இரட்டை கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் புதிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.
டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வரும் என தெரிகிறது.
இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் டாடா நெக்சான் மாடல் ரூ. 6.58 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11.10 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 7.5 லட்சத்தில் துவங்கி ரூ. 12.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
புகைப்படம் நன்றி: carwale
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஆக்டேவியா கார் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்கோடா நிறுவனத்தின் வெற்றிகர மாடல்களில் ஒன்றாக ஆக்டேவியா மாடல் இருக்கிறது. தற்சமயம் இதன் நான்காவது தலைமுறை மாடல் செக் குடியரசில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
2020 ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் முந்தைய மாடலை விட அதிநவீன தொழில்நுட்பம், அதிக இடவசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முதல்முறையாக பிளக்-இன் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் பிராண்டின் 60 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது.
வடிவமைப்பில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டெயில் லைட், பிரேக் லைட் மற்றும் ஃபாக் லேம்ப்களுக்கும் எல்.இ.டி. லைட் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் 19-இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

காரின் உள்புறம் 2020 ஸ்கோடா மாடலில் புதிய டு-ஸ்போக் ஸ்டீரிங் வீல் மற்றும் 14 அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வேரியண்ட்டிற்கு ஏற்ப 8.25 முதல் 10 இன்ச் வரையிலான அளவுகளில் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 109 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் இ-டி.இ.சி. பேட்ஜ் கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆரா காம்பேக்ட் செடான் மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் மாடல் கார் ஆரா எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் எக்ஸ்-சென்ட் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது.
புதிய ஹூண்டாய் ஆரா மாடல் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை தழவி உருவாகி இருக்கும் என்றும் இதன் வடிவமைப்புகள் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருப்பதை போன்று உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் ஹூண்டாயின் பிரபல கேஸ்கேடிங் கிரில், ஹணிகாம்ப் மெஷ் ஃபினிஷ், பகலில் எரியும் எல்.இ.டி. லைட்கள் வழங்கப்படுகிறது.

காரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் ஆரா மாடலின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இதன் விலை ரூ. 6.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்தியாவில் ஹூண்டாய் ஆரா மாடல் மாருதி சுசுகி டிசையர், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பையர், டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.
யமஹா நிறுவனத்தின் FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
யமஹா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் FZ மற்றும் FZS-Fi மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ. 99,200 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 1.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் யமஹா நிறுவனம் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களின் ஏ.பி.எஸ். வெர்ஷன்களை யமஹா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. பி.எஸ். 6 விதிகள் தவிர FZS-Fi மாடல் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டார்க்நைட் வெர்ஷனின் விலை ரூ. 1.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

யமஹா FZS-Fi பி.எஸ். 6 மாடல் டார்க் மேட் புளூ, மேட் பிளாக், கிரே மற்றும் சியான் புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதேபோன்று யமஹா FZ பி.எஸ். 6 மாடல் மெட்டாலிக் பிளாக் மற்றும் ரேசிங் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
இரு மோட்டார்சைக்கிள்களிலும் 149சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு பி.எஸ். 6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12 பி.ஹெச்.பி. @ 7250 ஆர்.பி.எம். மற்றும் 13.6 என்.எம். டார்க் @ 5500 ஆர்.பி.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர இரு மோட்டார்சைக்கிள்களின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இரு மாடல்களிலும் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், எல்.சி.டி. டிஸ்ப்ளே, சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா கே.யு.வி.100 இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சோதனையில் சிக்கிய கே.யு.வி.100 கார் பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
ஸ்பை படங்களின் படி கே.யு.வி.100 மாடலின் ஃபியூயல் டேன்க் மூடியில் பி.எஸ்.6 பெட்ரோல் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த மாடலில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரின் வடிவமைப்புகளில் வெளிப்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என தெரிகிறது.
தற்போதைய கே.யு.வி.100 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது 77 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புகைப்படம் நன்றி: Rushlane






