search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    யமஹா FZS
    X
    யமஹா FZS

    இந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்

    யமஹா நிறுவனத்தின் FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.



    யமஹா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் FZ மற்றும் FZS-Fi மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ. 99,200 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 1.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு துவக்கத்தில் யமஹா நிறுவனம் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களின் ஏ.பி.எஸ். வெர்ஷன்களை யமஹா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. பி.எஸ். 6 விதிகள் தவிர FZS-Fi மாடல் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டார்க்நைட் வெர்ஷனின் விலை ரூ. 1.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    யமஹா FZS

    யமஹா FZS-Fi பி.எஸ். 6 மாடல் டார்க் மேட் புளூ, மேட் பிளாக், கிரே மற்றும் சியான் புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதேபோன்று யமஹா FZ பி.எஸ். 6 மாடல் மெட்டாலிக் பிளாக் மற்றும் ரேசிங் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    இரு மோட்டார்சைக்கிள்களிலும் 149சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு பி.எஸ். 6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12 பி.ஹெச்.பி. @ 7250 ஆர்.பி.எம். மற்றும் 13.6 என்.எம். டார்க் @ 5500 ஆர்.பி.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இவை தவிர இரு மோட்டார்சைக்கிள்களின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இரு மாடல்களிலும் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், எல்.சி.டி. டிஸ்ப்ளே, சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×