என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஆடி நிறுவனத்தின் கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஜெர்மன் நாட்டு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் தனது கியூ8 மாடலை ஜனவரி 15, 2020 தேதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. 

    கடந்த வாரம் வெளியான தகவல்களில் ஆடி இந்தியா நிறுவனம் புதிய கியூ8 மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கிவிட்டதாக கூறப்பட்டது. எனினும் புனே, மும்பை மற்றும் டெல்லியில் உள்ள விற்பனையாளர்கள் முன்பதிவை துவங்கவில்லை என தெரிவித்தனர்.

    ஆடி ஏ6 மாடலை தொடர்ந்து பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தி வெளியாக இருக்கும் இரண்டாவது ஆடி கார் மாடலாக கியூ8 இருக்கிறது. புதிய ஆடி கியூ8 மாடல் இறக்குமதி மற்றும் சி.பி.யு. முறையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஆடி கியூ8

    சர்வதேச சந்தையில் ஆடி கியூ8 மாடல் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி6 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டிப்டிரோனிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் கியூ8 மாடலில் 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ-டிம்மிங் இன்டீரியர் ரியர் வியூ மிரர், டிஜிட்டல் காம்பஸ், பவர் ஷேட் கொண்ட சன்ரூஃப், எட்டு விதங்களில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், எல்.இ.டி, ஹெட்லைட்கள், 12.3 இன்ச் எல்.சி.டி. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய விற்பனையில் தொடர்ந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது.



    இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் அதிக பிரபல மாடலாக இருக்கிறது. விற்பனை துவங்கிய சில மாதங்களில் ஹூண்டாய் எஸ்.யு.வி. கார் விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

    இந்தியாவில் தொடர்ந்து விற்பனை அதிகரித்து வருவதால் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை பெறுவதற்கான காத்திருப்பு காலம் 15 வாரங்கள் வரை அதிகரித்துள்ளது. இது என்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷனிற்கு ஏற்ப வேறுபடும்.

    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின்படி வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. வென்யூ கார்: 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என மொத்தம் மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் வென்யூ

    ஹூண்டாய் வென்யூ எஸ் 1.0 டி.சி.டி. மாடலை பெற வாடிக்கையாளர்கள் 15 வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. 1.0 லிட்டர் மாடலை பெற அதிகபட்சம் எட்டு வாரங்களும், டீசல் மாடலை பெற ஆறு வாரங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு மே மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ காரின் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
    சுசுகி நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை சோதனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விரைவில் சோதனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

    முதற்கட்டமாக ப்ரோடோடைப் மாடல்களை சோதனை செய்ய சுசுகி திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரி ஸ்டேஷன் மற்றும் சார்ஜிங் வசதியின்மை நிலவுவதாக சுசுகி கருதுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடும் போது மாருதி சுசுகி கட்டமைக்கும் உள்கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொள்ள சுசுகி திட்டமிடுகிறது.

    சுசுகி அக்சஸ் - கோப்புப்படம்

    எலெக்ட்ரிக் வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் சிலகாம் ஆகும் என சுசுகி கருதுகிறது. இந்திய சந்தையில் முதல் இரு தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்கள் வெற்றி பெறாமல் போகலாம் என்றும் சுசுகி நினைக்கிறது. தற்சமயம் எலெக்ட்ரிக் வாகனம் சார்ந்த ஆய்வுகளில் சுசுகி ஈடுபட்டுள்ளது.

    நாட்டில் காற்று மாசு அளவை குறைக்கவும், அதிகரிக்கும் பெட்ரோல் பயன்பாட்டை கட்டுக்குள் வைக்கும் நோக்கிலும் ஆட்டோமொபைல் துறையை எலெக்ட்ரிக் மயமாக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். மோட்டார்சைக்கிள்கள் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

    பி.எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் தனது ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். மோட்டார்சைக்கிள்களை வாங்க சுமார் 600 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பி.எம்.டபுள்யூ. நிறுவனம் முன்பதிவுகளில் இத்தனை யூனிட்களை கடந்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மற்றும் பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஜி.எஸ். மோட்டார்சை்ககிள்களை வாங்குவோருக்கு இன்சூரன்ஸ் மற்றும் வாகன பதிவை இலவசமாக வழங்குகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சலுகையை பி.எம்.டபுள்யூ. வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

    இரு மோட்டார்சைக்கிள்களும் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஜெர்மனி ஆலையில் வடிவமைக்கப்பட்டு அங்கேயே உருவாக்கப்பட்டது. இந்திய விற்பனைக்கு இரு மோட்டார்சைக்கிள்களும் ஹோசூரில் உள்ள டி.வி.எஸ். ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.
     
    பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மாடலின் முன்பக்கம் தங்க நிறத்தாலான 41மில்லிமீட்டர் யு.எஸ்.டி. ஃபோர்க், 17 இன்ச் 5-ஸ்போக் காஸ்ட்-அலுமினியம் வீல்கள் மற்றும் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் கொண்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஜி.எஸ்.


    இதன் சஸ்பென்ஷன்களை பொருத்த வரை முன்பக்கம் மற்றும் பின்புறம் முறையே 140 மில்லிமீட்டர் மற்றும் 131 மில்லிமீட்டர் வழங்கப்பட்டுள்ளன. பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் மாடலில் முன்பக்கம் 110/70 R17 மற்றும் பின்புறம் 150/60 R17 டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவற்றுடன் 300மில்லிமீட்டர் மற்றும் 200மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மாடல்: ஸ்டைல் ஹெச்.பி (பியல் வைட் + HP லெட்டரிங்), காஸ்மிக் பிளாக் மற்றும் ரேசிங் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஜி.எஸ்.: ரேசிங் ரெட், பியல் வைட் மற்றும் காஸ்மிக் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மற்றும் பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஜி.எஸ். மாடல்களில் 313சிசி ரிவர்ஸ்-இன்க்ளைன் செய்யப்பட்ட சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற என்ஜின் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர் @9500 ஆர்.பி.எம் மற்றும் 28என்.எம். @7500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
    கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் நவம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக பெராக் மோட்டார்சைக்கிள் ஜாவா 42 மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், ஜாவா பெராக் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

    புதிய ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் ஜாவா மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. எனினும், ஜாவா பெராக் மாடலை வித்தியாசப்படுத்த சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி ஜாவா பெராக் மாடலில் மேம்பட்ட எக்சாஸ்ட் மற்றும் ஃபென்டர் வழங்கப்பட்டுள்ளது.

    ஜாவா பெராக்

    ஜாவா பெராக் மாடலில் 334சிசி லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 30 பி.ஹெச்.பி. பவர், 31 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களை விட 3 பி.ஹெச்.பி. மற்றும் 3 என்.எம். டார்க் அதிகம் ஆகும். இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    முன்னதாக இந்நிறுவனம் நவம்பர் 15 ஆம் தேதி அறிவிப்பை வெளிடுவதாக தெரிவித்து இருந்தது. இதில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களும் அறிவிக்கப்படலாம். அடுத்த 18 மாதங்களில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் மொத்தம் நான்கு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    ஏற்கனவே வெளியான தகவல்களின்படி இந்தியாவில் ஜாவா பெராக் மாடல் விலை ரூ. 1.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 350 டி கார் விற்பனை துவங்கிய மூன்றே வாரங்களில் விற்று தீர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கென நிர்ணயித்த ஜி 350 டி யூனிட்களும் இந்தியாவில் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட பென்ஸ் ஜி 350 டி வெறும் மூன்றே வாரங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.

    இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணண் செய்யப்பட்டுள்ளது. ஜி கிளாஸ் சீரிசில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஆஃப்-ரோடர் மாடல் இந்தியாவில் என்ட்ரி லெவல் சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

    பென்ஸ் ஜி350டி மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 282 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி

    இதே என்ஜின் எஸ் கிளாஸ் 350டி மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடல் மணிக்கு 199 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் 12.3 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதிலேயே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் லெதர் இருக்கைகள், பவர் முன்புற சீட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், குரூஸ் கண்ட்ரோல், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பிற்கென மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் மொத்தம் எட்டு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், டிராக்‌ஷன் கண்ட்ரோல், இ.எஸ்.சி., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
    ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிகாக ஒகினாவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் இந்தியாவில் எலைட் என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஒகினாவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 59,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் சிறுது தூர பயணங்களுக்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய லைட் ஸ்கூட்டர் பயன்படுத்த எளிமையாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் அன்றாட பயன்பாட்டிற்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ஒகினாவா தெரிவித்துள்ளது. ஒகினாவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்.இ.டி. லைட், ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்களை கொண்டிருக்கிறது.

    ஒகினாவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஸ்பீடோமீட்டர், புஷ் பட்டன் செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோமேடிக் எலெக்டிரானிக் ஹேண்டில் வழங்கப்பட்டுள்ளது. ஒகினாவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழற்றக்கூடிய 40 வோல்ட், 1.25kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கிறது.

    லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 250W BLDC எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 முதல் 60 கிலோமீட்டர் வரை செல்லும். இது மணிக்கு அதிகபட்சம் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என ஒகினாவா தெரிவித்துள்ளது.

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரிகளை ஒருமுறை சார்ஜ் செய்ய நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும். லைட் ஸ்கூட்டரில் உள்ள மோட்டார் மற்றும் பேட்டரிக்கு ஒகினாவா மூன்று வருட வாரண்டி வழங்குகிறது. 
    ஸ்கோடா நிறுவனத்தின் கமிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் ஸ்கோடா கமிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியானதில் சிறிய எஸ்.யு.வி. மாடலாக கமிக் உருவாகி இருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடல் 4.2-4.3 மீட்டர் நீளமாகவும், நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த வடிவமைப்பு பார்க்க கமிக் சர்வதேச மாடலை போன்று காட்சியளிக்கிறது. எனினும் அம்சங்கள் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வழங்கப்படலாம்.

    ஸ்கோடா கமிக்

    காரின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. புதிய மாடலில் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஐந்து பேர் அமரக்கூடிய கேபினில் பின்புற இருக்கைகளை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    ஸ்கோடா கமிக் மாடல் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் டீசல் என்ஜினை ஸ்கோடா வழங்காது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் வெளியாக இருக்கும் ஸ்கோடாவின் முதல் எஸ்.யு.வி. மாடலாக இது இருக்கிறது.

    புகைப்படம் நன்றி: autocarindia
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வி கிளாஸ் எலைட் காரை அறிமுகம் செய்துள்ளது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் வி கிளாஸ் எலைட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய வி கிளாஸ் எலைட் மாடல் விலை ரூ. 1.10 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பென்ஸ் வி கிளாஸ் எலைட் மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் புதிய வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி புதிய வி கிளாஸ் எலைட் மாடலில் ட்வீக் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர், முன்புறம் ஸ்போர்ட் பம்ப்பர் மற்றும் அகலமான மெஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளது. புதிய வி கிளாஸ் எலைட் மாடல் ஸ்டீல் புளு, செலினைட் கிரே மற்றும் கிராஃபைட் கிரே போன்ற புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட்

    காரின் உள்புறத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட் ஆறு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புடன் வருகிறது. இத்துடன் சொகுசு அம்சங்கள் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் ரூஃப், மசாஜிங் வசதி மற்றும் 640 வாட் பர்மெஸ்டர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் எலைட் மாடலில் புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 161 பி.ஹெச்.பி. பவர், 380 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 
    இந்தியாவில் விற்பனைக்கு வந்த இரண்டு மாதங்களில் ரெனால்ட் டிரைபர் கார் புதிய மைல்கல் கடந்துள்ளது.



    ரெனால்ட் டிரைபர் எம்.பி.வி. கார் இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்திய சந்தையில் முற்றிலும் புதிய வாகனமாக அறிமுகமான எம்.பி.வி. மாடல் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

    இந்தியாவில் விற்பனைக்கு வந்து இரண்டு மாதங்களில் ரெனால்ட் டிரைபர் மாடல் புதிய மைல்கல் கடந்துள்ளது. ரெனால்ட் டிரைபர் விற்பனையின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 10,000 யூனிட்களை கடந்துள்ளது. டிரைபர் விற்பனை இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவன வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 2019 அக்டோபர் மாத விற்பனையில் ரெனால்ட் நிறுவனம் 63 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்ட காலக்கட்டத்தில் ரெனால்ட் விற்பனை வளர்ச்சியடைந்து இருக்கிறது.

    ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல்-டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பேனல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

    இத்துடன் 7.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பி.எஸ். ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவின் முதல் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள், ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடல் விலை ரூ. 64,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 8000 வரை அதிகம் ஆகும்.

    பி.எஸ். 6 சான்று பெற்றதும் ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பி.எஸ். 6 மாடல் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்சமயம், இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் மாடலில் ஹீரோவின் ஐ3எஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    பி.எஸ். 6 ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்

    ஹீரோவின் ஐ3எஸ் சிஸ்டம் வாகனத்தின் எரிபொருள் பயன்பாட்டு மற்றும் காற்று மாசை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது. ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடலில் 113 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.1 பி.ஹெச்.பி. பவர், 9.89 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்குகிறது.

    ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடல் 2,048 எம்.எம். நீளமும், 1,110 எம்.எம். உயரம், 726 எம்.எம். அகலமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் முந்தைய மாடலை விட 15 எம்.எம். வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 என்ஜின் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பி.எஸ். 6 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களை பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்யும் பணிகளில் மும்முரம் செலுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், மாருதி நிறுவனம் எஸ் கிராஸ் கிராஸ்-ஓவர் ஹேட்ச்பேக் மாடலை 1.6 லிட்டர் பி.எஸ். 6 என்ஜின் கொண்ட மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

    ஸ்பை படங்களில் எஸ் கிராஸ் மாடலில் கார் வெளியிடும் புகையை சோதிக்கும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் பின்புறம் 1.6 பேட்ஜ் கொண்டிருக்கிறது. இதனால் இந்த கார் 1.6 லிட்டர் என்ஜினுடன் வரும் என உறுதியாகி இருக்கிறது.

    மாருதி சுசுகியின் பி.எஸ். 6 எஸ் கிராஸ் ஸ்பை படம்

    மாருதி சுசுகி எஸ் கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் வெளியாகும் போது மாருதி நிறுவனம் தனது 1.6 லிட்டர் டீசல் DDiS 320 என்ஜினுக்கு மாற்றாக 1.3 லிட்டர் DDiS 200 என்ஜினை அறிமுகம் செய்தது. எனினும், மாருதி நிறுவனம் 1.3 லிட்டர் டீசலை என்ஜின் பயன்பாட்டை நிறுத்துவிடுவதாக அறிவித்துள்ளது. 

    பி.எஸ். 6 விதிகள் அமலான பின் டீசல் என்ஜின் மீதான மோகம் அதிகரிக்கும் பட்சத்தில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை பி.எஸ். 6 தரத்தில் வழங்கும் பணிகளில் ஈடுபடும் என தெரிகிறது.

    புகைப்படம் நன்றி: Gaadiwaadi
    ×