என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
கே.டி.எம். நிறுவனத்தின் புதிய 890 டியூக் ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கே.டி.எம். நிறுவனத்தின் 890 டியூக் ஆர் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடல் 790 டியூக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடல் பார்க்க 790 டியூக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடலில் கார்னெரிங் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், பல்வேறு ரைடிங் மோட் மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., எல்.இ.டி. டெயில் லைட், டி.எஃப்.டி. கலர் டிஸ்ப்ளே உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய கே.டி.எம். 890 டியூக் ஆர் மாடலில் 890 சிசி பேரலெல் ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 790 டியூக் மாடலை விட 15 பி.ஹெச்.பி. மற்றும் 14 என்.எம். டார்க் அதிக செயல்திறன் வழங்குகிறது.
சர்வதேச சந்தையில் கே.டி.எம். 890 டியூக் மாடல் விற்பனை வரும் வாரங்களில் துவங்குகிறது. தற்சமயம் இந்த மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படாது. கே.டி.எம். நிறுவனம் சமீபத்தில் 790 டியூக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக கே.டி.எம். 790 டியூக் வெறும் 100 யூனிட்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக கே.டி.எம். நிறுவனம் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இது இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக இருந்தது. இந்தியாவில் இந்த மாடல் இந்திய பைக் வாரத்தின் போது வெளியிடப்பட இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய விற்பனையில் அசத்தி வருகிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் எஸ் பிரெஸ்ஸோ ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ ஹேட்ச்பேக் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியுச்சர் எஸ் கான்செப்ட்டை தழுவி உருவாகி இருக்கிறது.
முதல் மாத விற்பனையில் மாருதியின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடல் 10,634 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் மாருதி சுசுகியின் பிரபல விட்டாரா பிரெஸ்ஸா மாடலை விட அதிகம் ஆகும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடல் முதல் மாத விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸாவை முந்தியுள்ளது. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா இருந்தது.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் அக்டோபர் மாதத்தில் 10,227 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றன.
அந்த வகையில் எஸ் பிரெஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்கள் முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
உலகின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்ட்ரீம் 1.ஆர். கான்செப்ட்டை EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் மாடலை விட முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எக்ஸ்ட்ரீம் 200ஆர் வழக்கமான வடிவமைப்புக்கு மாற்றாக இளம் தலைமுறையினரை கவரும் வகையில் அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கிறது.

அதன்படி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பெரிய ஃபியூயல் டேன்க், எல்.இ.டி. டெயில் லேம்ப் மற்றும் இதர உபகரணங்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், இது கான்செப்ட் மாடல் என்பதால் இதன் உற்பத்தி வடிவம் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் முன்புற ஃபோர்க் பெரிதாகவும், இருபுறங்களிலும் பெரிய டிஸ்க் பிரேக் மற்றும் மெல்லிய டையர்களை கொண்டிருக்கிறது. கான்செப்ட் வடிவத்தை நிஜத்தில் உருவாக்குவது அதிக சவால் நிறைந்த பணி என்பதால், இதன் இறுதி வடிவம் எவ்வாறு காட்சியளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் இ.கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மஹிந்திராவின் இ.கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
காரின் வடிவமைப்புகளில் வெளிப்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என தெரிகிறது. இ.கே.யு.வி. மாடல் மஹிந்திரா இ20 மாடலுக்கு மாற்றாக இருக்கும். புதிய மாடலின் எலெக்ட்ரிக் டிரைவ்-டிரெயின் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இ-வெரிட்டோ மாடலில் 21.2 கிலோவாட் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 42 பி.எஸ். மற்றும் 91 என்.எம். டார்க் வழங்குகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் காரில் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
இந்தியாவில் மஹிந்திரா இ.கே.யு.வி.100 மாடலின் விலை ரூ. 9 லட்சத்தில் துவங்கி ரூ. 10 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது.
புகைப்படம் நன்றி: TeamBHP
ஹோண்டா விற்பனையாளர்கள் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹோண்டா விற்பனையாளர்களில் சிலர் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளன. இதன் விலை விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சில விற்பனையாளர்கள் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடல் டிசம்பர் மாத வாக்கில் விநியோகம் செய்யப்படலாம் என தெரிவித்து இருக்கின்றன.
முன்னதாக வெளியான தகவல்களில் பி.எஸ். 6 சிட்டி மாடலில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் பிஎஸ். 4 வெர்ஷனை போன்று 119 ஹெச்.பி. திறன் வழங்கும் என கூறப்படுகிறது. ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 பெட்ரோல் மாடல் விலை பி.எஸ். 4 மாடலை விட ரூ. 35,000 முதல் ரூ. 40,000 அதிகமாக இருக்கும்.

ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 மாடலில் டூயல் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 15-இன்ச் அலாய் வீல், ரிமோட் லாக்கிங், பவர் விங் மிரர் மற்றும் விண்டோக், ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனர், ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் முதற்கட்டமாக தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2020 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
எம்.ஜி. மோட்டார் இந்தியா இசட்.எஸ். இ.வி. காரின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. மாடல் டிசம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் வாகனம் 2020 முதல் காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாகனத்திற்கான டீசர்களை எம்.ஜி. மோட்டார் சில காலமாக வெளியிட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. இந்தியாவில் ஹூன்டாய் கோனா மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. மாடலின் இந்திய வெர்ஷன் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இது ஐரோப்பிய மாடலில் உள்ளதை போன்ற பேட்டரி திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். பிரிட்டனில் காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் 141 பி.ஹெச்.பி. பவர், 353 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் மோட்டார் கொண்டுள்ளது.

இதில் உள்ள 44.5 கிலோவாட் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை செல்லும். லித்தியம் அயன் பேட்டரியை 50 கிலோவாட் டி.சி. சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது 80 சதவிகிதத்திற்கு சார்ஜ் செய்ய 40 நிமிடங்களே போதுமானது. 7 கிலோவாட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது ஏழு மணி நேரத்தில் சார்ஜ் செய்திட முடியும்.
இந்தியாவில் எம்.ஜி. எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், கிளைமேட் கண்ட்ரோல், அலாய் வீல், ஒ-டி-ஏ சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கே.டி.எம். நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இருந்தது.
முன்னதாக இந்த மாடல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அந்த வகையில் ஒருவழியாக 390 அட்வென்ச்சர் மாடலை கே.டி.எம். நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது. புதிய மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
390 டியூக் மாடலின் ஆஃப்ரோடு வெர்ஷனாக கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் டிசம்பர் மாதம் நடைபெறும் இந்திய பைக் வாரம் 2019 இல் வெளியிடப்படலாம்.

கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் 390 டியூக் மற்றும் ஆர்.சி. மாடல்களில் வழங்கப்பட்டிருக்கும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 373.2சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 44 பி.ஹெச்.பி. @9000 ஆர்.பி.எம். பவர், 37 என்.எம். டார்க் @7000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் பெரிய வீல்பேஸ், உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், பெரிய ஃபியூயல் டேன்க் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 43 எம்.எம். யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் மோனோ-ஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டியாகோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2020 டியாகோ மாடல் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் வடிவமைப்பு அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கும் என தெரிகிறது.
அதன்படி காரின் முன்புறம் கூர்மையான ஹெட்லேம்ப்கள் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புற பம்ப்பர், ஃபாக் லேம்ப் வடிவமைப்பு மாற்றப்பட்டு அல்ட்ராஸ் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. காரின் பின்பற பம்ப்பர்களும் மாற்றப்பட்டு புதிய டெயில் லேம்ப் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
இதன் வீல் வடிவமைப்பில் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஹேட்ச்பேக் மாடலில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் 2020 டிகோர் மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 டாடா டியாகோ மாடலில் பிரத்யேக பெட்ரோல் பவர்டிரெயின் உடன் விற்பனைக்கு வரும் என எதி்ர்பார்க்கப்படுகிறது.

புதிய காரில் தற்சமயம் விற்பனையாகும் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினின் பி.எஸ். 6 வெர்ஷன் செயல்திறன் அளிவில் மாற்றம் இருக்காது.
இந்த என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏ.எம்.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கும். புதிய ஹேட்ச்பேக் மாடலிலும் இதே டிரான்ஸ்மிஷன் எதிர்பார்க்கலாம்.
புகைப்படம் நன்றி: Area of Interest
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய காருக்கென ஃபோர்டு நிறுவனம் மஹந்திராவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.
புதிய எம்.பி.வி. கார் மஹிந்திரா மராசோ மாடலை தழுவி உருவாகி வருவதாக கூறப்படுகிறது. புதிய ஃபோர்டு எம்.பி.வி. இந்திய சந்தைக்கென பிரத்யேக மாடலாக உருவாகி வருகிறது. முன்னதாக இரு நிறுவனங்களும் இணைந்து மூன்று புதிய எஸ்.யு.வி.க்கள் விற்பனையை ஊக்குவிக்கும் என அறிவித்துள்ளது.
புதிய எம்.பி.வி. கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு, பிரத்யேக அம்சங்களுடன் மராசோ மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் மற்ற நிறுவனங்களை போன்று ஃபோர்டு-மஹிந்திரா ரி-பேட்ஜ் வெர்ஷனை அறிமுகம் செய்யாது என கூறப்படுகிறது.

புதிய ஃபோர்டு எம்.பி.வி. மாடலில் பி.எஸ். 6 ரக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். டீசல் யூனிட் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் யூனிட் தவிர புதிய ஃபோர்டு எம்.பி.வி. மாடலில் மஹிந்திராவின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.
இந்தியாவில் எம்.பி.வி. வாகன விற்பனை அதிகரித்து வருவதால் ஃபோர்டு நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த புதிய எம்.பி.வி. வழி செய்யும் என எதிர்பார்க்கிறது.
அக்டோபர் 2019 மாத விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அக்டோபர் 2019 மாத காலத்தில் மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இது முந்தைய மாத்தை விட 4.5 சதவிகிதம் அதிகம் ஆகும்.
முந்தைய மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 1.53 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் 1.41 லட்சம் யூனிட்கள் உள்நாட்டிலும், 9,158 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மாருதி சுசுகி வாகன விற்பனையில் யு.வி. பிரிவு 11.3 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
யு.வி. பிரிவில் விடாரா பிரெஸா, எர்டிகா எம்.பி.வி., எக்ஸ்.எல்.6 பிரீமியம் எம்.பி.வி. மற்றும் எஸ் கிராஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. மாருதி சுசுகி வாகன விற்பனைக்கு தீபாவளி பண்டிகை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இத்துடன் பல்வேறு தள்ளுபடி மற்றும் சலுகைகளும் வழங்கப்பட்டன.

மாருதி நிறுவனம் கடந்த மாதம் எஸ் பிரெஸ்ஸோ மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் அறிமுகமான முதல் இரு மாதங்களில் 10,000 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மாருதி நிறுவனத்தின் முதல் பி.எஸ். 6 ரக வாகனமாக எஸ் பிரெஸ்ஸோ இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது ஆல்டோ கே10 மாடலில் வழங்கப்பட்டதை விட மேம்பட்ட என்ஜின் ஆகும். இதே என்ஜின் மற்ற என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியீட்டிற்கு முன் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி மற்றும் அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடல்களின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகின.
முதற்கட்டமாக பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து அதன்பின் ஸ்கூட்டர்களை பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் பி.எஸ். 4 மாடல்களை விட பி.எஸ். 6 மாடல்களின் விலை 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடல் முதலில் பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
யமஹா, ஹீரோ மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்களும் தங்களின் பி.எஸ். 6 வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. கடந்த மாதம் ஹோண்டா நிறுவனம் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
புதிய பி.எஸ். 6 புகை விதகள் மூலம் நாடு முழுக்க காற்று மாசு அளவை பெருமளவு குறைக்க முடியும். இதற்கான காலக்கெடு ஏப்ரல் 1, 2020 ஆகும்.
ஹோண்டா இந்தியா நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 10,000-க்கும் அதிக கார்களை விற்பனை செய்திருக்கிறது.
ஹோண்டா இந்தியா நிறுவனம் அக்டோபர் 2019 இல் மட்டும் 10,010 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 4,177 யூனிட்கள் குறைவு ஆகும். அக்டோபர் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 633 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
"ஆட்டோமொபைல் துறையின் மந்த நிலையை பண்டிகை காலம் மாற்றியமைத்துவிட்டது. அதிக தள்ளுபடி மற்றும் பண்டிகை கால சலுகைகள் காரணமாக வாகன விற்பனை அதிகரித்தது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது கடந்த மாத விற்பனை ஹோண்டாவிற்கு சாதகமாக அமைந்தது. இதே நிலை வரும் மாதங்களிலும் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்" என ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தெரிவித்தார்.

தற்சமயம் ஹோண்டா கார்ஸ் இந்தியா - ப்ரியோ, அமேஸ், ஜாஸ், டபுள்யூ.ஆர்.-வி, சிட்டி, பி.ஆர்.-வி, சிவிக், சி.ஆர்.-வி மற்றும் அக்கார்ட் என மொத்தம் ஒன்பது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் ஹோண்டா ஜாஸ் புதிய வேரியண்ட்டை டோக்கியோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது.
இத்துடன் சர்வதேச சந்தைக்கான ஹோண்டா சிட்டி மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகின. இந்த கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் புதிய செடான் மற்றும் ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்யலாம்.






