search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி
    X
    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி

    இந்தியாவில் மூன்று வாரங்களில் விற்றுத் தீர்ந்த பென்ஸ் கார்

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 350 டி கார் விற்பனை துவங்கிய மூன்றே வாரங்களில் விற்று தீர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கென நிர்ணயித்த ஜி 350 டி யூனிட்களும் இந்தியாவில் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட பென்ஸ் ஜி 350 டி வெறும் மூன்றே வாரங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.

    இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணண் செய்யப்பட்டுள்ளது. ஜி கிளாஸ் சீரிசில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஆஃப்-ரோடர் மாடல் இந்தியாவில் என்ட்ரி லெவல் சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

    பென்ஸ் ஜி350டி மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 282 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி

    இதே என்ஜின் எஸ் கிளாஸ் 350டி மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடல் மணிக்கு 199 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் 12.3 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதிலேயே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் லெதர் இருக்கைகள், பவர் முன்புற சீட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், குரூஸ் கண்ட்ரோல், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பிற்கென மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் மொத்தம் எட்டு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், டிராக்‌ஷன் கண்ட்ரோல், இ.எஸ்.சி., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×