search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர்
    X
    பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர்

    இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்கள்

    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். மோட்டார்சைக்கிள்கள் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

    பி.எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் தனது ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். மோட்டார்சைக்கிள்களை வாங்க சுமார் 600 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பி.எம்.டபுள்யூ. நிறுவனம் முன்பதிவுகளில் இத்தனை யூனிட்களை கடந்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மற்றும் பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஜி.எஸ். மோட்டார்சை்ககிள்களை வாங்குவோருக்கு இன்சூரன்ஸ் மற்றும் வாகன பதிவை இலவசமாக வழங்குகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சலுகையை பி.எம்.டபுள்யூ. வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

    இரு மோட்டார்சைக்கிள்களும் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஜெர்மனி ஆலையில் வடிவமைக்கப்பட்டு அங்கேயே உருவாக்கப்பட்டது. இந்திய விற்பனைக்கு இரு மோட்டார்சைக்கிள்களும் ஹோசூரில் உள்ள டி.வி.எஸ். ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.
     
    பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மாடலின் முன்பக்கம் தங்க நிறத்தாலான 41மில்லிமீட்டர் யு.எஸ்.டி. ஃபோர்க், 17 இன்ச் 5-ஸ்போக் காஸ்ட்-அலுமினியம் வீல்கள் மற்றும் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் கொண்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஜி.எஸ்.


    இதன் சஸ்பென்ஷன்களை பொருத்த வரை முன்பக்கம் மற்றும் பின்புறம் முறையே 140 மில்லிமீட்டர் மற்றும் 131 மில்லிமீட்டர் வழங்கப்பட்டுள்ளன. பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் மாடலில் முன்பக்கம் 110/70 R17 மற்றும் பின்புறம் 150/60 R17 டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவற்றுடன் 300மில்லிமீட்டர் மற்றும் 200மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மாடல்: ஸ்டைல் ஹெச்.பி (பியல் வைட் + HP லெட்டரிங்), காஸ்மிக் பிளாக் மற்றும் ரேசிங் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஜி.எஸ்.: ரேசிங் ரெட், பியல் வைட் மற்றும் காஸ்மிக் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மற்றும் பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஜி.எஸ். மாடல்களில் 313சிசி ரிவர்ஸ்-இன்க்ளைன் செய்யப்பட்ட சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற என்ஜின் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர் @9500 ஆர்.பி.எம் மற்றும் 28என்.எம். @7500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
    Next Story
    ×