search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோண்டா எஸ்.பி. 125 பி.எஸ்.6
    X
    ஹோண்டா எஸ்.பி. 125 பி.எஸ்.6

    ஹோண்டா எஸ்.பி. 125 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்

    ஹோண்டா நிறுவனத்தின் எஸ்.பி. 125 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எஸ்.பி. 125 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

    இந்தியாவில் புதிய ஹோண்டா எஸ்.பி. 125 விலை ரூ. 72,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா எஸ்.பி. 125 டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹோண்டா எஸ்.பி. 125 டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 77,100 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹோண்டா நிறுவனத்தின் இரண்டாவது வாகனமாக எஸ்.பி. 125 வெளியாகி இருக்கிறது. முன்னதாக ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ். 6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    ஹோண்டா எஸ்.பி. 125 பி.எஸ்.6

    ஹோண்டா எஸ்.பி. 125 மாடலில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.7 பி.ஹெச்.பி. @7500 ஆர்.பி.எம். மற்றும் 10.9 என்.எம். டார்க் @9000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    புதிய எஸ்.பி. 125 மாடலில் ஹோண்டாவின் ஹெச்.இ.டி. அம்சம் வழங்கப்படுகிறது. இது மோட்டார்சைக்கிளின் மைலேஜ், என்ஜின் பயன்பாடு போன்றவற்றை மேம்படுத்தி என்ஜினில் இருந்து வரும் சத்தத்தை குறைக்கும்.

    ஹோண்டா எஸ்.பி. 125 மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லேம்ப், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப், ஹெட்லைட் பீம், பாசிங் ஸ்விட்ச், ஸ்போர்ட் அலாய் வீல் மற்றும் குரோம் எக்சாஸ்ட் மஃப்ளர் கவர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

    புதிய ஹோண்டா எஸ்.பி. 125 மோட்டார்சைக்கிள் ஸ்டிரைக்கிங் கிரீன், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், பியல் சைரென் புளூ மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×