search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எர்டிகா
    X
    எர்டிகா

    சோதனையில் சிக்கிய எர்டிகா பி.எஸ். 6 டீசல்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா பி.எஸ். 6 டீசல் வேரியண்ட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    மாருதி சுசுகி  நிறுவனம் தனது வாகனங்களை பி.எஸ். 6 தரத்திற்கு உயர்த்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில் எர்டிகா பி.எஸ். 6 டீசல் காரை சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படும் கார் DDiS டீசல் என்ஜின் கொண்டுள்ளது. மேலும் காரின் பின்புற விண்ட்ஸ்கிரீனில் பி.எஸ். 6 ஆய்வுக்கான சோதனை என்பதை குறிப்பிடும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் புதிய பவர்டிரெயின் ஆப்ஷனுடன் சோதனை செய்யப்படுவதும் இந்த ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது.

    புதிய எர்டிகா காரில் ஃபியாட் உருவாக்கிய 1.6 லிட்டர் பி.எஸ். 6 டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே என்ஜின் மாருதியின் எஸ் கிராஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது பி.எஸ். 4 வடிவில் வழங்கப்பட்டது.

    சோதனையில் சிக்கிய எர்டிகா பி.எஸ். 6 டீசல்

    எர்டிகா தவிர மாருதி சுசுகி நிறுவனம் எஸ் கிராஸ் ஹேட்ச்பேக் மாடலையும் பி.எஸ். 6 தரத்திற்கு உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக எஸ் கிராஸ் பி.எஸ். 6 கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. 

    தற்சமயம் விற்பனை செய்ய்படும் எர்டிகா எம்.பி.வி. காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 94 பி.ஹெச்.பி. பவர், 225 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Gaadiwaadi
    Next Story
    ×