search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்.ஜி. இசட்.எஸ். இ.வி.
    X
    எம்.ஜி. இசட்.எஸ். இ.வி.

    இலவச ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் விற்பனைக்கு வரும் எம்.ஜி. எலெக்ட்ரிக் கார்

    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு இலவசமாக ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. டிசம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

    புதிய இசட்.எஸ். எலெக்ட்ரிக் காரில் 150 ஹெச்.பி. எலெக்ட்ரிக் மோட்டார், 44.5 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 335 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.

    இந்த பேட்டரியை 7 கிலோவாட் ஏ.சி. சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய ஏழு மணி நேரங்களும், 50 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது 0 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. 

    எம்.ஜி. இசட்.எஸ். இ.வி.

    இந்தியாவில் எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடலாக எம்.ஜி. இசட்.எஸ். வெளியாக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இந்த காரை வாங்குவோருக்கு டி.சி. ஃபாஸ்ட் சார்ஜரை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.

    எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் அசெம்பல் செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த காரின் விலை ரூ. 22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம். 
    Next Story
    ×