search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 ஸ்கோடா ஆக்டேவியா
    X
    2020 ஸ்கோடா ஆக்டேவியா

    2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்

    ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஆக்டேவியா கார் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஸ்கோடா நிறுவனத்தின் வெற்றிகர மாடல்களில் ஒன்றாக ஆக்டேவியா மாடல் இருக்கிறது. தற்சமயம் இதன் நான்காவது தலைமுறை மாடல் செக் குடியரசில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    2020 ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் முந்தைய மாடலை விட அதிநவீன தொழில்நுட்பம், அதிக இடவசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முதல்முறையாக பிளக்-இன் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் பிராண்டின் 60 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    வடிவமைப்பில் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டெயில் லைட், பிரேக் லைட் மற்றும் ஃபாக் லேம்ப்களுக்கும் எல்.இ.டி. லைட் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் 19-இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

    2020 ஸ்கோடா ஆக்டேவியா

    காரின் உள்புறம் 2020 ஸ்கோடா மாடலில் புதிய டு-ஸ்போக் ஸ்டீரிங் வீல் மற்றும் 14 அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வேரியண்ட்டிற்கு ஏற்ப 8.25 முதல் 10 இன்ச் வரையிலான அளவுகளில் வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 109 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் இ-டி.இ.சி. பேட்ஜ் கொண்டிருக்கிறது. 
    Next Story
    ×