என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.



    புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ஸ்பை படங்களின் படி 2020 ஹூண்டாய் ஐ20 காரின் உள்புறங்கள் தெரிகின்றன. 

    அந்த வகையில் முழுமையாக மறைக்கப்பட்டு இருந்தாலும், காரின் உள்புற வடிவமைப்பு சர்வதேச மாடல்களில் இருப்பதை போன்றே காட்சியளிக்கின்றன. 

    இத்துடன் முழுமையன டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய ஸ்டீரிங் வீல் வடிவமைப்பு, 10.25 இன்ச் அளவில் ஃபுளோட்டிங் ரக தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.  

    ஹூண்டாய் ஐ20 ஸ்பை படம்

    சர்வதேச மாடலில் உள்ள மற்ற அம்சங்களை பொருத்தவரை சமீபத்திய புளூலின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம், குரூயிஸ் கண்ட்ரோல், பிரீமியம் போஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

    உள்புறம் மட்டுமின்றி காரின் வெளிப்புறம் புதிய கேஸ்கேடிங் கிரில், மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், புதிய டைமண்ட் கட் அலாய் வீல் காணப்படுகின்றன.
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குர்கா 2020 மாடல் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    ஃபோர்ஸ் குர்கா 2020 ஆஃப்ரோடு எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அடுத்த தலைமுறை ஆஃப் ரோடு எஸ்.யு.வி. மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 2020 குர்கா மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், புதிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஃபோர்ஸ் குர்கா

    இதில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் குர்காவின் பாரம்பரிய ரக்கட் வடிவமைப்பை பரைசாற்றும் விதத்தில் அமைந்து இருக்கிறது. இத்துடன் இதில் புதிய 16 இன்ச் அலாய் வீல்கள் 245/70 டையர்கள் வழங்கப்படுகின்றன. இதன் வீல் ஆர்ச்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.

    காரின் உள்புறம் மேம்பட்ட அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், MID டிஸ்ப்ளே, இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே பொருத்தப்பட்டு, ஏ.சி. வென்ட்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கின்றன.
    மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ பி.எஸ்.6 கார் விற்பனையகங்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனையகங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று காரின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 

    காரின் முன்புறம் புதிய கிரில், பம்ப்பர் உள்ளிட்டவை காணப்படுகிறது. இதுதவிர முன்புற ஹெட்லேம்ப்கள் மாற்றப்பட்டு கிளஸ்டரை சுற்றி பிளாக் இன்சர்ட் மற்றும் குரோம் பிட்கள் வழங்கப்படுகின்றன.

    பொலிரோ

    முன்புறம் போன்றே பின்புறமும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் உள்புறத்தில் பொலிரோ பி.எஸ்.6 மாடலில் முன்பை விட கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட கேபின் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அப்டேட் செய்யப்பட்ட டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் காரிபிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகின்றன.

    புதிய மஹிந்திரா பொலிரோ பி.எஸ்.6 மாடலில் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட டீசல் டி75 ரக என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் இந்த கார் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படுகிறது.

    மஹிந்திரா பொலிரோ பி.எஸ்.6 மாடல் பி4, பி6 மற்றும் பி6 (ஒ) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. புதிய பி.எஸ்.6 பொலிரோ மாடலின் விலை தற்சமயம் விற்பனை செய்யப்படும் வேரியண்ட்டை விட ரூ. 50 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து இருப்பதால் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.



    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2020 ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை மார்ச் 25 ஆம் தேதி துவங்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெளியீட்டு ஒத்திவைக்கப்படுவதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது. 

    நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து இருப்பதால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. புதிய வெளியீட்டு தேதி மார்ச் 31-க்கு பின் அறிவிக்கப்படும் என டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் தெரிவித்து இருக்கிறது. 

    2020 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ்.

    புதிய ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மாடல் முந்தைய ஆர்.எஸ். மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்களை கொண்டிருக்கிறது. தோற்றத்தில் முந்தைய மாடல் போல் காட்சியளித்தாலும், இதில் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. 

    புதிய ஹெட்லேம்ப்கள் தவிர இந்த மோட்டார்சைக்கிளின் பாடி பேனல்களும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய மாடலில் முந்தைய வெர்ஷன்களில் உள்ளதை போன்றே பெரிய டி.எஃப்.டி. ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. எனினும், இதில் புதிய கிராஃபிக்ஸ், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கோ-ப்ரோ கண்ட்ரோல்கள் உள்ளிட்டவை அக்சஸரி சிப் மூலம் எனேபிள் செய்யப்படுகிறது.

    புதிய மோட்டார்சைக்கிளில் 765சிசி, லிக்விட் கூல்டு, இன் லைன் டிரிபில் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 123 பி.ஹெச்.பி. பவர், 79 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அப்/டவுன் குவிக்‌ஷிஃப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் தற்போதைய டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மாடல் விலை ரூ. 11.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய மாடல் விலை விரைவில் தெரியவரும்.
    உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால் ஆட்டோமொபைல் துறை முடங்கியுள்ளது.



    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்களது நிறுவன பணிகளை நிறுத்த துவங்கி இருக்கின்றன. நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்களான மாருதி சுசுகி, மஹிந்திரா மற்றும் டொயோட்டா போன்றவை உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றன. 

    இதேபோன்று இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளர்களான பஜாஜ் ஆட்டோ, ஹோண்டா 2 வீலர் மற்றும் டி.வி.எஸ். மோட்டார் உள்ளிட்டவையும் தங்களது பணிகளை தற்காகிலகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானா ஆலையின் உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த ஆலை அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. இதே போன்று ரோடக்கில் உள்ள ஆய்வு மற்றும் உற்பத்தி மையத்தை மூட தயாராக இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

    ஆட்டோமொபைல் உற்பத்தி

    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பூனே, மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள ஆலைகளின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றன. எனினும், உற்பத்தி பணிகள் எதுவரை நிறுத்தப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. 

    ஃபோக்ஸ்வேகன் ஏ.ஜி. இந்தியா நிறுவனம் தனது உற்பத்தி பணிகளை மூன்று வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதேபோன்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் தனது உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

    கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் ஆலையில் உற்பத்தி பணிகள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தப்படுவதாக தெரிவித்து இருக்கிறது. இதேபோன்று பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை பகுதிகளை சார்ந்து இயங்கும் வியாபார மையங்களில் உள்ள ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளது.
    ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. இந்திய சந்தையில் தனது என்ட்ரி லெவல் எக்ஸ்7 கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனம இந்திய சந்தையில் புதிய என்ட்ரி லெவல் எக்ஸ்7 எஸ்.யு.வி. காரினை அறிமுகம் செய்துள்ளது. புதிய என்ட்ரி லெவல் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 எக்ஸ்டிரைவ் 3-டி டி.பி.இ. மாடல் விலை ரூ. 92.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பேஸ் வேரியண்ட் மாடல் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 காரின் விலையை இந்திய சந்தையில் ரூ. 6 லட்சம் வரை குறைத்து இருக்கிறது. எனினும், புதிய என்ட்ரி லெவல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், மிட் ரேன்ஜ் மற்றும் டாப் எண்ட் மாடல் விலையை பி.எம்.டபுள்யூ. அதிகரித்து இருக்கிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7

    புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 7 - எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ., எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. சிக்னேச்சர் மற்றும் எக்ஸ்டிரைவ் 40ஐ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் மிட் ரேன்ஜ் மற்றும் டாப் எண்ட் மாடல்களின் விலை முறையே ரூ. 1.02 கோடி மற்றும் ரூ. 1.06 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    என்ட்ரி லெவல் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. மாடலில் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 254 பி.ஹெச்.பி. பவர், 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
    வால்வோ நிறுவன கார் மாடல்களில் கோளாறு கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து 7.5 லட்சம் கார்களை திரும்ப பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.



    வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட சில கார் மாடல்களை இந்திய சந்தையில் திரும்ப பெற இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் வெவ்வேறு வால்வோ மாடல்களை சேர்ந்த சுமார் 1891 யூனிட்களை திரும்ப பெறுவதாக வால்வோ அறிவித்து இருக்கிறது.

    வால்வோ கார்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், அவற்றை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டதாக வால்வோ கார்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

    ஆட்டோனோமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டத்தை (AEB) இயக்கும் மென்பொருளை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது. இந்த கோளாறு சில வெப்பநிலைகளில் ஏற்படுவது கண்டறியப்பட்டு இருக்கிறது.

    வால்வோ

    இதே பிரச்சினை வால்வோ நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்த சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்களில் ஏற்பட்டு இருக்கிறது. வால்வோ எக்ஸ்.சி.40, எக்ஸ்.சி.60, எக்ஸ்.சி.90, வி90 கிராஸ் கண்ட்ரி மற்றும் எஸ்90 உள்ளிட்ட மாடல்களை பாதித்து இருக்கிறது.

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடல்களை பயன்படுத்துவோரில், கோளாறு உறுதி செய்யப்பட்ட கார்களை வைத்திருப்போரை வால்வோ தொடர்பு கொண்டு, பிரச்சினை இலவசமாக சரி செய்து தரப்படும் என வால்வோ தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினை மென்பொருள் அப்டேட் மூலமாகவே சரி செய்துவிட முடியும்  என கூறப்படுகிறது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 பி.எஸ்.6, கான்டினென்ட்டல் ஜி.டி. 650 பி.எஸ்.6 மாடல்களின் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 பி.எஸ்.6, கான்டினென்ட்டல் ஜி.டி. 650 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இரு மாடல்களின் விலை விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இவை பி.எஸ்.4 மாடல்களை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பி.எஸ்.6 மாடல் விலை ரூ. 8000 விரையிலும், கான்டினென்ட்டல் ஜி.டி. பி.எஸ்.6 மாடலின் விலை பி.எஸ்.4 மாடல்களை விட ரூ. 9000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 

    இன்டர்செப்டார் 650

    புதிய மாடல்கள் தோற்றத்தில் பி.எஸ்.4 போன்றே காட்சியளிக்கின்றன. ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்ட்டல் ஜி.டி. 650 மாடல்களில் 649சிசி ஏர் கூல்டு, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. @7250 ஆர்.பி.எம். பவர் மற்றும் 52 என்.எம் @5250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. இதே செயல்திறனை பி.எஸ்.6 மாடல்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
    கார் மற்றும் மோட்டார்சைக்கிள் வாகனங்களில் அதிக மைலேஜ் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.



    பெட்ரோல் மற்றும் டீசல் கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் அல்ல. இன்னும் 30-40 ஆண்டுகளில் தீர்ந்துபோகக்கூடியது. இந்தியாவில் கச்சா எண்ணெய் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றது. அதனால், காலாகாலத்துக்கும் பெட்ரோல், டீசலை சார்ந்து நாம் இயங்க முடியாது. 

    எரிபொருளை குறைவாகப் பயன்படுத்துவதால் இன்னும் அதிக ஆண்டுகளுக்கு அது தீர்ந்துபோகாமல் பார்த்துக்கொள்ள முடியும். பெட்ரோல், டீசலை சேமிப்பதன் மூலம் எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றை குறைத்து, பணத்தையும் சேமிக்க முடியும். அந்த வகையில் வாகனத்தில் அதிக மைலேஜ் பெற என்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

    வாகனத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பழுதுநீக்கி பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் 20 சதவீத மைலேஜ் குறையும். பெட்ரோல்-டீசலை குறைவாக பயன்படுத்த வாகன டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தை பராமரிக்க வேண்டும். காற்றழுத்தம் குறைந்து இருந்தால், எரிபொருள் செலவு அதிகரிக்கும். 

    வேகத்துக்கு ஏற்ப வாகனத்தின் கியரைத் தொடர்ந்து மாற்றி இயக்க வேண்டும். வேகம்-கியர் இடையிலான சமநிலை இல்லையென்றால் எரிபொருள் செலவு கூடும். போக்குவரத்து நெரிசல், சாலையின் தன்மையைப் பொறுத்து எப்போதும் குறிப்பிட்ட ஒரு வேகத்தில் மட்டும் வண்டியை ஓட்ட முயற்சிக்க வேண்டும்.

    இந்தியச் சாலைகளில் மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டுவதன் மூலம் 40 சதவீதம் எரிபொருள் சேமிக்கப்படும் என்கின்றன ஆய்வுகள். புறநகர் பகுதிகள், நெடுஞ்சாலைகள் போன்ற வாகன நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளில் அதிகபட்ச கியரில் ஓட்டலாம். 

    போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்

    மேடும் பள்ளமுமான சாலைகளுக்கு பதிலாக சமமான சாலையிலேயே ஓட்ட முயற்சிக்கவும். போக்குவரத்து சிக்னலில் வாகனத்தை அணைத்துவிட்டு, நமக்குச் சிக்னல் கிடைப்பதற்கு 3 விநாடிகள் முன்னதாக வாகனத்தை ஸ்டார்ட் செய்தால்போதும். குறைந்தபட்சமாக 14 விநாடிகள் வாகனம் அணைக்கப்பட்டிருந்தால்கூட எரிபொருள் சேமிக்கப்படும். அணைத்துவைப்பதன் மூலம் சராசரியாக 20 சதவீத எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

    ஸ்பீடா மீட்டரில் சிவப்புக்கு முன்னதாகக் குறிக்கப்பட்டுள்ள மிதமான வேகத்தில் செல்வதே நல்லது. அதிக வேகத்தில் செல்வது எரிபொருள் செலவை அதிகரிப்பதுடன், வண்டியின் பாகங்களை விரைவில் பழுதாக்கிவிடும். பெட்ரோல்-டீசல் டாங்கில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக எரிபொருளை நிரப்ப வேண்டாம். 

    பெட்ரோல்-டீசல் நிரப்பப்பட்ட பிறகு, அதன்மூடி சரியாக மூடி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சரியாக மூடவில்லை எனில், எரிபொருள் ஆவியாக நேரிடும்.

    கார்களில் குளிரூட்டும் எந்திரத்தைப் பயன்படுத்துவது எரிபொருள் செலவைப் பெருமளவு அதிகரிக்கும். குளிரூட்டும் எந்திரத்தைத் தவிர்க்கலாம், கூடியவரை அணைத்து வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் குறைந்தபட்சம் 10 சதவீத எரிபொருளை சேமிக்கலாம். பெட்ரோல், டீசலுக்கு பதிலாக எரிவாயு மூலம் வாகனத்தை மாற்றி இயக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம். 

    எப்போதும் வாகனத்தை நிழல் பகுதியில் நிறுத்த வேண்டும். வெயில் நேரடியாகப்படும் இடத்தில் நிறுத்துவது எரிபொருளை அதிகம் ஆவியாக்கலாம்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனம் டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 5.89 லட்சத்தில் என்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட் ரூ. 7.31 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய மாருதி டிசையர் மாடல்: Lxi, Vxi, Zxi, மற்றும் Zxi+ என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் Zxi+ மேனுவல் மற்றும் ஆட்டமேடிக் வேரியண்ட் விலை முறையே ரூ. 8.28 லட்சம் மற்றும் ரூ. 8.80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி டிசையர்

    2020 டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் புதிய எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய முன்புற கிரில், மேம்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 15 இன்ச் பிரெசிஷன் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    மாருதி சுசுகி டிசையர் மாடலில் அடுத்த தலைமுறை K சீரிஸ் டூயல் ஜெட், டூயல் VVTBS6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 81 பி.ஹெச்.பி. மற்றும் 133 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    நிசான் நிறுவனத்தின் பி.எஸ்.4 கிக்ஸ் கார் இந்திய சந்தையில் ரூ. 1.6 லட்சம் மதிப்புள்ள சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.



    இந்திய சந்தையில் பி.எஸ். 6 புகை விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலாக இருக்கும் நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பி.எஸ்.4 வாகனங்களுக்கு அதிகளவு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நிசான் இணைந்திருக்கிறது. 

    அதன்படி நிசான் கிக்ஸ் பி.எஸ்.4 வேரியண்ட்டிற்கு ரூ. 1.63 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் நிசான் கிக்ஸ் விலை ரூ. 9.55 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    நிசான் கிக்ஸ்

    நிசான் கிக்ஸ் டீசல் வேரியண்ட்டிறஅகு ரூ. 45 ஆயிரம் வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் ரூ. 40 ஆயிரம், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 10 ஆயிரம், ரூ. 13,100 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், ரூ. 20,500 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை 2+3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. 

    பெட்ரோல் வேரியண்ட்டிற்கு எக்சேன்ஜ் போனஸ் ரூ. 40 ஆயிரம், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 10 ஆயிரம், ரூ. 13,100 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், ரூ. 20,500 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை 2+3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் 36 மாதங்களுக்கு 6.99 சதவீதம் வட்டியில் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள சேமிப்பை வழங்குகிறது.
    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பி.எஸ்.6 ரக இன்ட்ரூடர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இன்ட்ரூடர் குரூயிசர் மோட்டார்சைக்கிளின் பி.எஸ்.6 வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக ஜிக்சர் மற்றும் ஜிக்சர் எஸ்.எஃப். மோட்டார்சைக்கிள்களின் பி.எஸ்.6 வெர்ஷன்களை சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதுதவிர அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் உள்ளிட்ட மாடல்களின் பி.எஸ்.6 வெர்ஷன்களை சுசுகி அறிமுகம் செய்துள்ளது.

    2020 சுசுகி இன்ட்ரூடர் பி.எஸ்.6

    புதிய பி.எஸ்.6 சுசுகி இன்ட்ரூடர் மோட்டார்சைக்கிளில் 154.9சிசி, அலுமினியம் 4 ஸ்டிரோக், சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 13 பி.ஹெச்.பி. @8000 ஆர்.பி.எ.ம் மற்றும் 13.8 என்.எம். @6000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இன்ட்ரூடர் பி.எஸ்.6 மாடலில் சுசுகி இகோ பெர்ஃபார்மனஅஸ் மற்றும் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக மைலேஜ் வழங்குகிறது. இதுதவிர மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 
    ×