என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
கடந்த ஆண்டு விற்பனையில் டுகாட்டி நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
டுகாட்டி மோட்டார் ஹோல்டிங் நிறுவனம் 2019 ஆண்டு விற்பனையை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
உலகம் முழுக்க டுகாட்டி நிறுவனம் கடந்த ஆண்டு 53,183 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. 2018 ஆண்டில் டுகாட்டி நிறுவனம் மொத்தம் 53,004 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்தவகையில் கடந்த ஆண்டு விற்பனையில் டுகாட்டி 1.4 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

விற்பனை அதிகரிக்க டுகாட்டி பனிகேல் மற்றும் மல்டிஸ்டிராடா உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக இருந்தது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விற்பனை அதிகரித்ததை தொடர்ந்து அந்நிறுவனத்தில் லாபம் 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இதில் காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் பற்றிய விவரம் தெரியவந்து இருக்கிறது.
அதன்படி காரின் முன்புறம் கேஸ்கேடிங் கிரில், டார்க் குரோம் பெயின்ட், புதிய எல்.இ.டி. ஹெட்லேம்பகள், டூயல் டோன் அலாய் வீல் வடிவமைப்பு, புதிய வடிவமைப்பு கொண்ட டெயில் லேம்ப், இருபுறங்களிலும் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் பெரிய எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏ.சி. வென்ட்கள், புதிய ஃபாக்ஸ் வுட் ட்ரிம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
புதிய ஹூண்டாய் வெர்னா மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் யூனிட், 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 114 பி.ஹெச்.பி. பவர், 144 என்.எம். டார்க் செயல்திறன், 114 பி.ஹெச்.பி., 250 என்.எம். டார்க், மற்றும் 118 பி.ஹெச்.பி., 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
லெக்சஸ் நிறுவனம் டாட்டூ போடப்பட்ட உலகினஅ முதல் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மனிதர்களிடையே டாட்டூ போட்டுக் கொள்ளும் பழக்கம் மிகவும் சாதாரணமான ஒன்று தான். ஆனால் காருக்கு டாட்டூ போடுவதை இதுவரை யாரும் நினைத்திருக்க மாட்டோம்.
இதை சாத்தியப்படுத்தும் வகையில் டாட்டூ போடப்பட்ட உலகின் முதல் காரை லெக்சஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. லெக்சஸ் நிறுவனத்தின் யு.எக்ஸ். காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கு டாட்டூ போடப்பட்டு இருக்கிறது. இந்த காருக்கான டாட்டூ வடிவமைப்பினை லண்டனை சேர்ந்த கிளாடியா டி சபே என்ற டாட்டூ கலைஞர் உருவாக்கி இருக்கிறார்.

வெள்ளை நிற காரில் டாட்டூ போடும் ஊசிக்கு பதில் டிரிமெல் ட்ரில் கருவி பயன்படுத்தி டாட்டூ போடப்பட்டு இருக்கிறது. பாரம்பரிய ஜப்பான் நாட்டு கலையை பரைசாற்றும் வகையில் டாட்டூ வடிவைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
நாள் ஒன்று ஐந்து முதல் எட்டு மணி நேர உழைப்பில் காருக்கு முழுமையாக டாட்டூ போட ஆறு மாதங்கள் ஆனதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டாட்டூ போடப்பட்ட யு.எக்ஸ். மாடலின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் மதிப்பு இந்திய மதிப்பில் ஒரு கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் பி.எஸ்.6 மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.
ஸ்கோடா இந்தியா நிறுவனம் ரேபிட் பி.எஸ்.6 காருக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ரேபிட் மாடலில் பி.எஸ்.6 ரக 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்கோடா ரேபிட் மாடலுக்கான விநியோகம் ஏப்ரல் 14-ம் தேதி துவங்க இருக்கிறது. புதிய 1.0 லிட்டர் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எதகிர்காலத்தில் இந்த காரில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் போலோ மற்றும் வென்டோ பி.எஸ்.6 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 110 பி.ஹெச்.பி. பவர், 175 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே செயல்திறன் ரேபிட் மாடலிலும் இருக்கும் என தெரிகிறது.

என்ஜின் தவிர புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது. ஸ்கோடா ரேபிட் மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஆம்பியன்ட் இன்டீரியர் லைட்டிங், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் ஸ்கோடா ரேபிட் மாடல் மாருதி சுசுகி சியாஸ், 2020 ஹோண்டா சிட்டி உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய கார் விலை தற்போதைய மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் பி.எஸ். 4 மாடல்களுக்கு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் ஹார்லி டேவிட்சன் ஃபாட்பாய், ஃபாட் பாப், ஸ்போர்ட்ஸ்டெர் மற்றும் ஸ்டிரீட் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் சாஃப்டெயில் ரேன்ஜ் மாடல்களான ஹெச்-டி ஃபாட் பாய், ஹெச் டி ஹெரிடேஜ் சாஃப்டெயில் மற்றும் டீலக்ஸ் உள்ளிட்டவற்றுக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் ஃபாட் பாப் மாடலுக்கு ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
2018 ஹார்லி டேவிட்சன் ஐயன் 883, 1200 கஸ்டம், ரோட்ஸ்டர் மற்றும் ஃபார்டி எய்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே மாடல்களின் 2019 வெர்ஷன்களுக்கு ரூ. 75 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டிரையம்ப் இந்தியா நிறுவனம் தனது ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
டிரையம்ப் இந்தியா நிறுவனம் தனது புதிய ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் மாடலை மார்ச் 25-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மாடல் முந்தைய ஆர்.எஸ். மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்களை கொண்டிருக்கிறது.
தோற்றத்தில் முந்தைய மாடல் போல் காட்சியளித்தாலும், இதில் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹெட்லேம்ப்கள் தவிர இந்த மோட்டார்சைக்கிளின் பாடி பேனல்களும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய மாடலில் முந்தைய வெர்ஷன்களில் உள்ளதை போன்றே பெரிய டி.எஃப்.டி. ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. எனினும், இதில் புதிய கிராஃபிக்ஸ், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கோ-ப்ரோ கண்ட்ரோல்கள் உள்ளிட்டவை அக்சஸரி சிப் மூலம் எனேபிள் செய்யப்படுகிறது.
புதிய மோட்டார்சைக்கிளில் 765சிசி, லிக்விட் கூல்டு, இன் லைன் டிரிபில் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 123 பி.ஹெச்.பி. பவர், 79 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அப்/டவுன் குவிக்ஷிஃப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் தற்போதைய டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மாடல் விலை ரூ. 11.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய மாடல் விலை விரைவில் தெரியவரும்.
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் டஸ்டர் பி.எஸ்.6 கார் இந்கிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் டஸ்டர் பி.எஸ்.6 காரினை அறிமுகம் செய்துள்ளது.
புதிய டஸ்டர் ஆர்.எக்ஸ்.இ. துவக்க மாடல் விலை ரூ. 8.49 லட்சம் என்றும், ஆர்.எக்ஸ்.எஸ். வேரியண்ட் ரூ. 9.29 லட்சம் என்றும் டாப் எண்ட் ஆர்.எக்ஸ்.இசட். வேரியண்ட் ரூ. 9.99 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
புதிய பி.எஸ்.6 ரெனால்ட் டஸ்டர் காரில் 1.5 லிட்டர் H4K நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 106 பி.எஸ். பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த காரின் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம். இது 160 பி.எஸ். பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த டஸ்டர் காரிலும் 17 இன்ச் அலாய் வீல்கள், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், ரிமோட் கேபின் பிரீ-கூலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டி ராக் எஸ்.யு.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் புதிய டி ராக் எஸ்.யு.வி. மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி ராக் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருந்தது. இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்.யு.வி. விலை ரூ. 19.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கி இருக்கின்றன. இதுவரை புதிய காரை வாங்க சுமார் 300 பேர் முன்பதிவு செய்து இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. இந்த காரின் விநியோகம் விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. கார்னெரிங் லைட்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய டி ராக் காரில் 17 இன்ச் அலாய் வீல்கள், மெல்லிய மற்றும் அழகிய எல்.இ.டி. டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விர்ச்சுவல் காக்பிட், லெதர் இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், டூயல் டோன் அலாய் வீல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், கீலெஸ் என்ட்ரி, புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், பல்வேறு ஏர்பேக், ஏ.பி.எஸ். இ.பி.டி. உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பி.எஸ். 6 இன்டர்செப்டார் 650, கான்டினென்ட்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பி.எஸ். 6 இன்டர்செப்டார் 650, கான்டினென்ட்டல் ஜி.டி. 650 மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், இரு மாடல்களும் விற்பனை மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் இதன் விநியோகத்தை துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
என்ட்ரி லெவல் இன்டர்செப்டார் 650 பி.எஸ்.6 மாடல் விலை ரூ. 2.85 லட்சமாகவும், கான்டினென்ட்டல் ஜி.டி. 650 பி.எஸ்.6 மாடல் விலை ரூ. 3.01 லட்சம் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய பி.எஸ்.6 மாடல்களில் உள்ள என்ஜின் 46.8 பி.ஹெச்.பி. @7150 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இவற்றின் பி.எஸ்.4 மாடல்களில் உள்ள என்ஜினும் இதே செயல்திறன் வழங்குகிறது. புதிய பி.எஸ்.6 ரக என்ஜின் தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்களில் 18 இன்ச் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க், டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ் செட்டப் உடன் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெச்.பி.எக்ஸ். எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் ஹெச்.பி.எக்ஸ். எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்பை படங்களின் படி புதிய காரில் ஸ்டிராப் ஆன் ஹெட்லைட்களை கொண்டிருக்கின்றன. இத்துடன் டாடாவின் பாரம்பிய முன்புற கிரில், அலாய் வீல் வடிவமைப்பு உள்ளிட்டவை காணப்படுகின்றன.
டாடா நிறுவனம் தனது ஹெச்.பி.எக்ஸ். மினி எஸ்.யு.வி. மாடலினை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹெச்2எக்ஸ் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்தது. அதன்பின் ஹெச்.பி.எக்ஸ். பெயரில் ரக்கட் வெர்ஷன் காரினை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது.

புதிய கார் டாடா மோட்டோர்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா தளத்தில் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது உயரமான வடிவமைப்பில், ஹேரியர் மாடலை தழுவிய முன்புறம் கொண்டிருக்கிறது. இதில் டூயல் எல்.இ.டி. ஹெட்லேம்ப், டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகிறது.
டாடா ஹெச்.பி.எக்ஸ். மாடலிலும் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் உள்ள என்ஜினே வழங்கப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவை முறையே 85 பி.ஹெச்.பி. மற்றும் 113 என்.எம். டார்க், 89 பி.ஹெச்.பி. மற்றும் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் இகோ சி.என்.ஜி. பி.எஸ்.6 மாடல் வேனை அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் இகோ சி.என்.ஜி. பி.எஸ்.6 வேன் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இகோ சி.என்.ஜி. பி.எஸ்.6 மாடல் விலை ரூ. 4.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 மாடல்களில் மாருதி இகோ தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. ஐந்து அல்லது ஏழு பேர் பயணிக்கக்கூடிய வெர்ஷனில் கிடைக்கும் மாருதி இகோ மொத்தம் 12 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இகோ காரை மாருதி நிறுவனம் கார்கோ மற்றும் ஆம்புலன்ஸ் ஆப்ஷன்களிலும் வழங்குகிறது.

அனைத்து வேரியண்ட்களின் அளவுகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த வேனில் ஸ்லைடிங் கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு இந்த வேனில் டூயல் ஏர்பேக்ஸ், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு வார்னிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய மாருதி இகோ சி.என்.ஜி. மாடலில் பி.எஸ்.6 ரக 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 73 பி.ஹெச்.பி. பவர், 101 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கரோக் மாடலுக்கான முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா இந்தியா நிறுவனம் கரோக் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகளை இந்திய சந்தையில் துவங்கி இருக்கிறது. புதிய ஸ்கோடா கரோக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரோக் எஸ்.யு.வி. மாடலின் விநியோகம் மே 6-ம் தேதி துவங்குகிறது. இந்த காரில் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், 17 இன்ச் அலாய் வீல்கள், எட்டு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஒன்பது ஏர்பேக், மின்சாதன முறையில் 12 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா கரோக் மாடலில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 150 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 202 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
இந்திய சந்தையில் ஸ்கோடா கரோக் மாடலின் துவக்க விலை ரூ. 20 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.






