search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    வெர்னா ஃபேஸ்லிஃப்ட்
    X
    வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

    இணையத்தில் லீக் ஆன வெர்னா ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்

    ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இதில் காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் பற்றிய விவரம் தெரியவந்து இருக்கிறது.

    அதன்படி காரின் முன்புறம் கேஸ்கேடிங் கிரில், டார்க் குரோம் பெயின்ட், புதிய எல்.இ.டி. ஹெட்லேம்பகள், டூயல் டோன் அலாய் வீல் வடிவமைப்பு, புதிய வடிவமைப்பு கொண்ட டெயில் லேம்ப், இருபுறங்களிலும் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    வெர்னா ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம்

    காரின் உள்புறம் பெரிய எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏ.சி. வென்ட்கள், புதிய ஃபாக்ஸ் வுட் ட்ரிம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    புதிய ஹூண்டாய் வெர்னா மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் யூனிட், 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 114 பி.ஹெச்.பி. பவர், 144 என்.எம். டார்க் செயல்திறன், 114 பி.ஹெச்.பி., 250 என்.எம். டார்க், மற்றும் 118 பி.ஹெச்.பி., 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    Next Story
    ×