search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா ஹெச்.பி.எக்ஸ்.
    X
    டாடா ஹெச்.பி.எக்ஸ்.

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா ஹெச்.பி.எக்ஸ்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெச்.பி.எக்ஸ். எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் ஹெச்.பி.எக்ஸ். எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

    ஸ்பை படங்களின் படி புதிய காரில் ஸ்டிராப் ஆன் ஹெட்லைட்களை கொண்டிருக்கின்றன. இத்துடன் டாடாவின் பாரம்பிய முன்புற கிரில், அலாய் வீல் வடிவமைப்பு உள்ளிட்டவை காணப்படுகின்றன.

    டாடா நிறுவனம் தனது ஹெச்.பி.எக்ஸ். மினி எஸ்.யு.வி. மாடலினை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹெச்2எக்ஸ் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்தது. அதன்பின் ஹெச்.பி.எக்ஸ். பெயரில் ரக்கட் வெர்ஷன் காரினை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது.

    டாடா ஹெச்.பி.எக்ஸ். ஸ்பை படம்

    புதிய கார் டாடா மோட்டோர்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா தளத்தில் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது உயரமான வடிவமைப்பில், ஹேரியர் மாடலை தழுவிய முன்புறம் கொண்டிருக்கிறது. இதில் டூயல் எல்.இ.டி. ஹெட்லேம்ப், டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகிறது.

    டாடா ஹெச்.பி.எக்ஸ். மாடலிலும் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் உள்ள என்ஜினே வழங்கப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவை முறையே 85 பி.ஹெச்.பி. மற்றும் 113 என்.எம். டார்க், 89 பி.ஹெச்.பி. மற்றும் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    Next Story
    ×