என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    சுசுகி நிறுவனத்தின் ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் விற்றுத் தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.



    சுசுகி நிறுவனத்தின் ஹயபுசா மோட்டார்சைக்கிள் சீரிஸ் உலகம் முழுக்க பிரபலமாக இருக்கின்றன. மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் முதல் மோட்டார்சைக்கிள் மாடலாக இது இருக்கிறது. இந்தியாவில் 2004-ம் ஆண்டு வெளியான தூம் திரைப்படத்தில் இந்த மோட்டார்சைக்கிள் பயன்படுத்தப்பட்டது. 

    இந்நிலையில் சுசுகி ஹயபுசா பி.எஸ்.4 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பி.எஸ்.6 ஹயபுசா மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஹயபுசா எனும் பெயர் ஜப்பானில் உள்ள பெரிகிரைன் ஃபால்கன் எனும் பறவையை குறிப்பிடும் வகையில் தேர்வு செய்யப்பட்டது. இந்த பறவை தனக்கான இரையை வேட்டையாடும் போது மணிக்கு அதிகபட்சமாக 320 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். இதே போன்ற வேகத்தை ஹயபுசா மாடலும் எட்டிவிடும்.

    சுசுகி ஹயபுசா

    இதில் 1340சிசி லி்க்விட் கூல்டு, இன்-லைன், 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 197 பி.ஹெச்.பி. @ 9500 ஆர்.பி.எம்., 155 என்.எம். டார்க் @ 7200 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் சுசுகி ஹயபுசா மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.74 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.

    இது மணிக்கு அதிகபட்சமாக 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருந்தாலும், இந்தியாவில் இதன் வேகம் மணிக்கு 299 கிலோமீட்டர்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் டிசம்பர் 2019 இல் சுசுகி நிறுவனம் ஹயபுசா மோட்டார்சைக்கிளின் பி.எஸ்.4 மாடலை குறைந்த எண்ணிக்கையிலேயே கொண்டு வந்தது.

    இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் புதிய நிறங்கள், புதிய முன்புற பிரேக் கேலிப்பர்களுடன் கொண்டுவரப்பட்டது. இவை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கடைசி யூனிட்களாகும். ஐரோப்பிய விதிகளுக்கு பொருந்தாத காரணத்தால் இவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய 2020 கிரெட்டா மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா மாடல் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் ix25 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    2020 ஹூண்டாய் கிரெட்டா

    புதிய ஹூண்டாய் கிரெட்டா 7 இன்ச் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் புளூ லின்க் ஸ்மார்ட்வாட்ச் ஆப், பானரோமிக் சன்ரூஃப், வென்டிலேட்டெட் சீட்கள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹூண்டாய் கிரெட்டா மாடல் விலை ரூ.9.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ பி.எஸ்.6 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.



    மஹிந்திரா நிறுவனத்தின் பி.எஸ்.6 பொரிலோ கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. புதிய பி.எஸ்.6 பொலிரோ கார் இந்தியாவில் அடுத்த மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஸ்பை படங்களின் படி மஹிந்திரா பொலிரோ காரின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் காரின் முன்புறம் புதிய கிரில், பம்ப்பர் உள்ளிட்டவை காணப்படுகிறது. இதுதவிர முன்புற ஹெட்லேம்ப்கள் மாற்றப்பட்டு கிளஸ்டரை சுற்றி பிளாக் இன்சர்ட் மற்றும் குரோம் பிட்கள் வழங்கப்படுகின்றன.

    முன்புறம் போன்றே பின்புறமும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் உள்புறத்தில் பொலிரோ பி.எஸ்.6 மாடலில் முன்பை விட கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட கேபின் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அப்டேட் செய்யப்பட்ட டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் காரிபிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகின்றன.

    பொலிரோ பி.எஸ்.6 ஸ்பை படம்

    புதிய மஹிந்திரா பொலிரோ பி.எஸ்.6 மாடலில் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட டீசல் டி75 ரக என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் இந்த கார் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படுகிறது.

    மஹிந்திரா பொலிரோ பி.எஸ்.6 மாடல் பி4, பி6 மற்றும் பி6 (ஒ) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. புதிய பி.எஸ்.6 பொலிரோ மாடலின் விலை தற்சமயம் விற்பனை செய்யப்படும் வேரியண்ட்டை விட ரூ. 50 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரேன்ஜ் ரோவர் நிறுவனத்தின் எஸ்.வி. கூப் மாடலை தழுவி உருவாகி இருக்கும் அட்வென்டம் கூப் மாடல் அறிமுகம்.



    நெதர்லாந்தை சேர்ந்த தனியார் வாகனங்கள் வடிவமைப்பு நிறுவனமான நீல்ஸ் வான் ரோஜ் டிசைன் அட்வென்டம் கூப் உற்பத்தி மாடலினை அறிமுகம் செய்துள்ளது. 

    இது லேண்ட் ரோவர் கடந்த ஜனவரியில் ரத்து செய்த எஸ்.வி. கூப் மாடலை தழுவி உருவாகி இருக்கும் இரண்டு கதவுகள் கொண்ட கார் ஆகும். புதிய கார் லேண்ட் ரோவர் எஸ்.வி.ஒ. கிரியேஷன் போன்றே உருவாகிறது. இதில் கஸ்டம்-மேட் அலுமினியம் பாடிவொர்க் வழங்கப்படுகிறது. 

    ரேன்ஜ் ரோவர் அட்வென்டம் கூப் மாடலில் லேண்ட் ரோவரின் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 525 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.

    ரேன்ஜ் ரோவர் அட்வென்டம் கூப்

    அட்வென்டம் கூப் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் ஆடம்பர பொருட்கள் பயன்படுத்தப்படுவதோடு, வெவ்வேறு நிறங்களை கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக ஃபியூயல் ஃபில்லர் கேப்கள், டூயல் டோன் வெளிப்புற பெயின்ட்கள் வழங்கப்படலாம் என வேன் ரோஜி தெரிவித்திருக்கிறார்.

    புதிய அட்வென்டம் கூப் மாடலை முழுமையாக கஸ்டமைஸ் செய்வதற்கான கட்டணம் ரூ. 2.19 கோடி வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முழுமையாக உற்பத்தி செய்ய அதிகபட்சம் ஆறு மாதங்கள் ஆகும் என தெரிகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய 500சிசி மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    ஹோண்டா நிறுவனம் விரைவில் ரிபெல் 500 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஹோண்டா நிறுவனத்தின் ஒற்றை குரூயிசர் மாடல் ஆகும். ரிபெல் 300 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாக இருக்கும் ரிபெல் 500 2019 EICMA விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

    புதிய மாடல் ஹோண்டா வெளியிட திட்டமிட்டு இருக்கும் சி.பி.ஆர்.500ஆர், சி.பி.500எஃப் மற்றும் சி.பி.500எக்ஸ் போன்ற 500சிசி மாடல்களில் ஒன்றாகும். இந்த மோட்டார்சைக்கிள் மொத்தம் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹோண்டா ரிபெல் 500 மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், எல்.இ.டி. லைட்டிங் இன்டிகேட்டர், பின்புறம் சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வட்ட வடிவம் கொண்டிருக்கிறது. ஸ்ப்லிட் சீட் இருக்கை கொண்டிருக்கும் ரிபெல் 500 மாடலில் ரைடர் சீட் 690 எம்.எம். உயரத்தில் இருக்கிறது.

    ஹோண்டா ரிபெல் 500

    ரிபெல் 500 மாடலில் 471சிசி 4 வால்வ், லிக்விட் கூல்டு பேரலெல் ட்வின், 4 ஸ்டிரோக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது 46.2பி.எஸ். பவர், 43.3 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் இருபுறங்களிலும் 16 இன்ச் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    சஸ்பென்ஷெனிற்கு முன்புறம் 41 எம்.எம். கன்வென்ஷனல் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. 185 கிலோ எடை கொண்டிருக்கும் ஹோண்டா ரிபெல் 500 மாடலின் வீல்பேஸ் 1490 எம்.எம். ஆகும்.

    இந்தியாவில் ஹோண்டா ரிபெல் 500 மாடலின் விலை ரூ. 4.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த மாடல் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.
    பிப்ரவரி மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 19 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



    உள்நாட்டில், பிப்ரவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 16,46,332-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 20,34,597-ஆக இருந்தது. அந்த வகையில் விற்பனை ஏறக்குறைய 19 சதவீதம் குறைந்துள்ளது.

    பிப்ரவரியில் 2,51,516 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,72,243-ஆக இருந்தது. அந்த வகையில் விற்பனை 7.61 சதவீதம் குறைந்து இருக்கிறது. கார்கள் விற்பனை 9 சதவீதம் சரிவடைந்து 1,56,285-ஆக உள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 33 சதவீதம் சரிவடைந்து 58,670-ஆக குறைந்துள்ளது.

    மோட்டார் வாகனங்கள்

    இரு சக்கர வாகனங்கள் விற்பனை 20சதவீதம் குறைந்து (16,14,941-ல் இருந்து) 12,94,791-ஆக சரிவடைந்து இருக்கிறது. மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 22 சதவீதம் சரிவடைந்து (10,47,356-ல் இருந்து) 8,16,679-ஆக குறைந்துள்ளது. இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 20 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

    இந்நிறுவனம் 4,80,679 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியாவின் விற்பனை 23 சதவீதம் சரிவடைந்து 3,15,285-ஆக உள்ளது. சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் விற்பனை 27 சதவீதம் குறைந்து 1,69,684- ஆக சரிவடைந்துள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 1,33,702 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இது 2.34 சதவீதம் குறைவாகும். ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை 7 சதவீதம் சரிந்து 40,010-ஆக குறைந்துள்ளது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிள் ஏப்ரல் 3, 2020 இல் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதனை பி.எம்.டபிள்யூ. புதிய டீசர் மூலம் அறிவித்து இருக்கிறது.

    முன்னதாக பி.எம்.டபிள்யூ. ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிள் 2019 EICMA விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் குரூயிசர் ஸ்டான்ஸ், பெரிய பாக்சர் என்ஜின் உள்ளிட்டவை காணப்படுகிறது. இது தோற்றத்தில் பி.எம்.டபிள்யூ. ஆர்18 கான்செப்ட் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. ஆர்18 குரூயிசர் கான்செப்ட்

    பி.எம்.டபிள்யூ. ஆர்18 குரூயிசர் மாடலில் 1800சிசி, இரண்டு சிலிண்டர் பாக்சர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது பார்க்க ஃபிளாட்-ட்வின் என்ஜின்களை போன்றே காட்சியளிக்கிறது. இதேபோன்ற என்ஜின்களை 1960-க்களில் விற்பனை செய்த வாகனங்களுக்கு பி.எம்.டபிள்யூ. வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய பி.எம்.டபிள்யூ. ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரெனால்ட் நிறுவனத்தின் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.



    ரெனால்ட் நிறுவனம் தனது கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முதற்கட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவை ரஷ்ய மாடலுக்கானவை ஆகும். தற்சமயம் ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் பிரீ ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடல்கள் பி0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    புகைப்படங்ளின் படி காரின் வெளிப்புறம் சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய அலாய் வீல்கள், கிரில் மற்றும் பம்ப்பர் பகுதிகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கார் மேம்பட்ட பி0+ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதாக ரெனால்ட் தெரிவித்து இருக்கிறது.

    ரெனால்ட் கேப்டூர்

    ஏப்ரல் 1, 2020 முதல் இந்தியாவில் கேப்டூர் மாடல் பெட்ரோல் வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. பி.எஸ்.6 விதிகள் அமலானதும், கேப்டூர் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரெனால்ட் 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜினை பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யாது என தெரிகிறது.

    ரஷ்யாவில் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேப்டூர் மாடல் இந்தியாவில் சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மேம்பட்ட கேப்டூர் மாடலில் 156 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இதே என்ஜின் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் டைரெக்ட் இன்ஜெக்‌ஷன் மற்றும் டர்போசார்ஜிங் கொண்டிருக்கிறது. 
    ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களில் விரைவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது டூரிங், சி.வி.ஒ. மற்றும் டிரைக் மாடல்களை 2021 ஆண்டு முதல் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சத்தினை வழங்க இருக்கிறது. இதுவரை நான்கு சக்கர வாகனங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி முதல் முறையாக ஹார்லி மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்பட இருக்கிறது.

    அடுத்த ஆண்டு முதல் ஹார்லி மாடல்களில் ஜி.டி.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதை கொண்டு எதிர்காலத்தில் கூகுள் மேப்ஸ் நேவிகேஷன், மியூசிக் ஸ்டிரீமிங் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற சேவைகளை இயக்க முடியும்.

    ஹார்லி டேவிட்சன் ரோடு கிளைடு

    ப்ளூடூத் இணைப்பு கொண்ட டிஸ்ப்ளேக்களை விட ஆண்ட்ராய்டு ஆட்டோ சவுகரியமானதாக இருக்கிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் அம்சங்களை டிஸ்ப்ளேவிலேயே இயக்க முடியும்.

    ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சத்தினை பயன்படுத்த ஸ்மார்ட்போன் யு.எஸ்.பி. கேபிள் மூலம் டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட வேண்டும். இதே முறை ஆப்பிள் கார்பிளே சேவைக்கும் பொருந்தும். ஹார்லி மாடல்களில் இந்த வசதி 2018 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் டான் சில்வர் புல்லட் எடிஷன் காருக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை கார் மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கார் டான் சிலவர் புல்லட் கலெக்‌ஷ என அழைக்கப்படுகிறது. 

    இது 1920 ரோட்ஸ்டர் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய டான் சில்வர் புல்லட் கலெக்‌ஷன் பார்க்க அழகாக காட்சியளிக்கிறது. அல்ட்ரா மெட்டாலிக் சில்வர் பெயின்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள புதிய ரோட்ஸ்டர் மாடல் அதிநவீன தோற்றத்தை கொண்டிருக்கிறது.

    ரோல்ஸ் ராய்ஸ் டான் சி்ல்வர் புல்லட் ரோட்ஸ்டர் எடிஷன் டீசர்

    காரின் வெளிப்புறத்தில் டார்க் ஹெட்லைட்கள், புதிய முன்புற பம்ப்பர் ஃபினிஷர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதன் வீல்கள் பாலிஷ் செய்யப்பட்டு அவற்றில் ஆங்காங்கே நிழல் விழும் வகையில் நிறம் பூசப்பட்டுள்ளது. காரின் உள்புறம் கார்பன் ஃபைபர் மூலம் கோட் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த கார் மொத்தம் 50 யூனிட்கள் மட்டுமே உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ரோட்ஸ்டர் கார் இருவர் பயணிக்கும் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
    மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 சி.என்.ஜி. பி.எஸ்.6 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.



    மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 சி.என்.ஜி. பி.எஸ்.6 கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.

    ஸ்பை படங்களில் உள்ள கே.யு.வி.100 காரில் சி.என்.ஜி. ஸ்டிக்கர் காணப்படுகிறது. முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கும் சி.என்.ஜி. வேரியண்ட் ஸ்டீல் வீல்களை கொண்டிருக்கிறது. சோதனை செய்யப்படும் வேரியன்ட் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலின் ட்ரிப் வேரியண்ட் ஆகும்.

    மஹிந்திரா கே.யு.வி.100 சி.என்.ஜி. பி.எஸ்.6 ஸ்பை படம்

    புதிய மஹிந்திரா காரில் எம்ஃபால்கன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க் செயல்திறன், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய வேரியண்ட் லிட்டருக்கு 18.15 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

    மஹிந்திரா கே.யு.வி.100 மாடல் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ, ரெனால்ட் க்விட், 2020 டேட்சன் ரெடி-கோ மற்றும் டாடா ஹெச்.பி.எக்ஸ். போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.



    ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கியது. புதிய காருக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு கட்டணம் ரூ. 25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து இந்த காரின் விநியோகம் துவங்கும் என கூறப்படுகிறது. புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

    அந்த வகையில் காரின் வெளிப்புறம் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், கேஸ்கேடிங் கிரில், முன்புறம் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர், டூயல் டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில்லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் கொண்டிருக்கின்றன.

    உள்புறம் புதிய 9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஹூண்டாயின் புதிய புளூ லின்க் கனெக்டிவிட்டி தொழில்நுட்பம் வழங்கப்படுகின்றன. இத்துடன் 4.2 இன்ச் டி.எஃப்.டி. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அனைத்து என்ஜின்களும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
    ×