search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹார்லி டேவிட்சன் ரோடு கிளைட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
    X
    ஹார்லி டேவிட்சன் ரோடு கிளைட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்

    ஹார்லி மோட்டார்சைக்கிள்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி

    ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களில் விரைவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது டூரிங், சி.வி.ஒ. மற்றும் டிரைக் மாடல்களை 2021 ஆண்டு முதல் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சத்தினை வழங்க இருக்கிறது. இதுவரை நான்கு சக்கர வாகனங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி முதல் முறையாக ஹார்லி மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்பட இருக்கிறது.

    அடுத்த ஆண்டு முதல் ஹார்லி மாடல்களில் ஜி.டி.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதை கொண்டு எதிர்காலத்தில் கூகுள் மேப்ஸ் நேவிகேஷன், மியூசிக் ஸ்டிரீமிங் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற சேவைகளை இயக்க முடியும்.

    ஹார்லி டேவிட்சன் ரோடு கிளைடு

    ப்ளூடூத் இணைப்பு கொண்ட டிஸ்ப்ளேக்களை விட ஆண்ட்ராய்டு ஆட்டோ சவுகரியமானதாக இருக்கிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் அம்சங்களை டிஸ்ப்ளேவிலேயே இயக்க முடியும்.

    ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சத்தினை பயன்படுத்த ஸ்மார்ட்போன் யு.எஸ்.பி. கேபிள் மூலம் டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட வேண்டும். இதே முறை ஆப்பிள் கார்பிளே சேவைக்கும் பொருந்தும். ஹார்லி மாடல்களில் இந்த வசதி 2018 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×