என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கி இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முதற்கட்ட விநியோகத்தை துவங்கி இருக்கிறது. முதற்கட்ட மாடல்கள் பூனே மற்றும் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
புதிய செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பனைட் வேரியண்ட் துவக்க விலை ரூ. 1 லட்சம் என்றும் பிரீமியம் வேரியண்ட் விலை ரூ. 1.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பு இருவர் அமரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது.

இந்த மோட்டார் IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரியில் இருந்து தேவையான மின்சக்தியை எடுத்துக் கொள்கிறது. இந்த ஸ்கூட்டர் இகோ, ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் ஏத்தர் 450 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
புதிய செட்டாக் ஸ்கூட்டர் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் உற்பத்தி பணிகளை முழுக்க முழுக்க பெண்களே மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இரு நகரங்களை தொடர்ந்து பஜாஜ் செட்டாக் விற்பனை மற்ற நகரங்களில் வரும் மாதங்களில் துவங்கும் என தெரிகிறது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒட்டுமொத்தமாக 48,910 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அது 54,518 கார்களாக இருந்தது. ஆக, விற்பனை 10.3 சதவீதம் சரிவடைந்துள்ளது.
உள்நாட்டில் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை 7.2 சதவீதம் குறைந்து (43,110-ல் இருந்து) 40,010-ஆக குறைந்து இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 8,900 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 11,408-ஆக இருந்தது. ஆக, ஏற்றுமதி 22 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதேபோன்று மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 32,476 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2019 பிப்ரவரியில் அது 56,005-ஆக இருந்தது. ஆக, விற்பனை 42 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. இதில் உள்நாட்டு விற்பனை 42 சதவீதம் குறைந்து 30,637-ஆக இருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முற்றிலும் புதிய மோட்டார்சைக்கிளை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் பற்றி எவ்வித தகவலும் இதுவரை வெளியாகிவில்லை. எனினும், இது ஜெ1டி எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இதுதவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹண்ட்டர், ஷெர்பா, ஃபிளையிங் ஃபிளீ மற்றும் ரோட்ஸ்டர் என புதிய பெயர்களை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியானது. புதிய மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய மாடலாக வெளியாகும் என தெரிகிறது.

இது ராயல் என்ஃபீல்டு ஹிமாலன் மாடலுக்கு மாற்றாகவோ அல்லது ஹிமாலயன் மாடலின் சிறிய வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாடல் தவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பழைய மாடல்களை பி.எஸ்.6 தரத்திற்கு அப்டேட் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.
முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பி.எஸ்.6 ஹிமாலயன் மற்றும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளில் 250சிசி என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா கார் முன்பதிவு துவங்கிய ஏழு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்து இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது 2020 கிரெட்டா எஸ்.யு.வி. மாடலை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 2020 கிரெட்டா மாடலுக்கான முன்பதிவுகளை மார்ச் 2-ம் தேதி துவங்கியது. இதன் வெளியீடு மார்ச் 17-ம் தேதி நடைபெற இருக்கிறது.
2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்.யு.வி. சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய வடிவமைப்பு, பல்வேறு புது அம்சங்கள் மற்றும் உபகரணங்களை 2020 கிரெட்டா எஸ்.யு.வி. கொண்டிருக்கிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய 2020 கிரெட்டா மாடல் கார் 14 வேரியண்ட்கள் மற்றும் பத்து வித நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவைதவிர புதிய கிரெட்டா மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என தெரிகிறது.
இதே என்ஜின்கள் கியா செல்டோஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் 115 பி.எஸ். பவர், 1.4 லிட்டர் டி -ஜி.டி.ஐ. மோட்டார் 140 பி.எஸ். செயல்திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் 790 டியூக் மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.டி.எம். டியூக் 790 மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பி.எஸ்.4 ரக மாடல்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கே.டி.எம். தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் பி.எஸ்.6 விதகள் அமலாக 20 நாட்களே இருக்கும் நிலையில், புதிய சலுகை அறிவிப்பு வெளியாகி உள்ளது. கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் 790 டியூக் மோட்டார்சைக்கிளை ரூ. 8.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிட்டது.

கே.டி.எம். 790 டியூக் மாடல் 100 யூனிட்கள் இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள பஜாஜ் ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது. இந்தியாவில் வெளியான பத்து நாட்களில் சுமார் 41 யூனிட்கள் விற்பனையானதாக கே.டி.எம். தெரிவித்து இருந்தது.
790 டியூக் மோட்டார்சைக்கிள் சுசுகி ஜி.எஸ்.எக்ஸ். எஸ்759, டுகாட்டி மான்ஸ்டர் 797, டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில், யமஹா எம்.டி. 09 மற்றும் கவாசகி இசட்900 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
2020 நியூ யார்க் ஆட்டோ விழா கொரோனா பாதிப்பு அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மற்ற துறைகளை போன்று ஆட்டோமொபைல் துறையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஜெனிவா ஆட்டோ விழா கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ஏப்ரல் 10-ம் தேதி துவங்கி ஏப்ரல் 19 வரை நடைபெற இருந்தது.

இந்நிலையில், 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ஆகஸ்ட் 28-ம் தேதி துவங்கி செப்டம்பர் 6 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழா மூலம் உள்ளூர் மற்றும் மாநில அளவில் சுமார் ரூபாய் 2400 கோடி வரையிலான வர்த்தக பலன் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2020 நியூ யார்க் ஆட்டோ விழாவிற்கான புதிய தேதிகள் அனைத்து தரப்பினருக்கும் உகந்ததாக இருக்கும் என நம்புவதாக கிரேட்டர் நியூ யார்க் ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு தலைவர் மார்க் ஸ்கெயின்பெர்க் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக மோட்டோ ஜி.பி. கத்தார் சுற்று, மற்றும் எஃப்1 பந்தயத்தின் சீன சுற்று உள்ளிட்டவை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் டாமினர் 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய பஜாஜ் டாமினர் 250 மாடல் விலை ரூ. 1.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.
புதிய பஜாஜ் டாமினர் 250 மாடல் வடிவமைப்பு பார்க்க டாமினர் 400 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் டூயல் டோன் பேனல்கள், ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் AHO லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பஜாஜ் டாமினர் 250 மாடலில் 248சிசி சிங்கிள் சிலிண்டர், லிவ்கிட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. பவர், 23.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் புதிய என்ஜின் ஏற்கனவே கே.டி.எம். 250 டியூக் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய டாமினர் 250 மாடலில் 37 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், ட்வின் பாரெல் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இது டாமினர் 400 மாடலை போன்ற சவுகரியத்தை வழங்குகிறது. இதுதவிர மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் 300 எம்.எம். டிஸ்க் பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. புதிய பஜாஜ் டாமினர் 250 மாடல்: கேன்யான் ரெட் மற்றும் வைன் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் பிஎஸ்.6 ரக வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை அமலாக இருக்கிறது. இதனால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பி.எஸ்.4 மாடல்களை சலுகை விலையில் விற்பனை செய்ய துவங்கி இருக்கின்றன.
அந்த வகையில் உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது பி.எஸ்.4 ரக வாகனங்களுக்கு அதிரடி சலுகை மற்றும் சேமிப்புகளை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. மேலும் பி.எஸ். 4 வாகனங்களுக்கான சலுகை மார்ச் 19-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுவதாக தெரிகிறது.

அதன்படி டாடா ஹெக்சா மாடல் வேரியண்ட்களுக்கு ரூ. 2.05 லட்சம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா ஹேரியர் பி.எஸ். 4 மாடலுக்கு ரூ. 1.30 லட்சம் மற்றும் பி.எஸ். 6 மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று டாடா செஸ்ட் மாடலுக்கு ரூ. 90 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா போல்ட் காருக்கான விலையில் ரூ. 80 ஆயிரமும், டிகோர் மாடலுக்கு ரூ. 70 ஆயிரம், டாடா சஃபாரி ஸ்டாம் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம், டாடா நெக்சான் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம் மற்றும் டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அப்ரிலியா நிறுவனத்தின் பி.எஸ்.6 ரக ஸ்கூட்டர்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
அப்ரிலியா நிறுவனத்தின் பி.எஸ்.6 ஸ்கூட்டர்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன. பி.எஸ்.6 ரக அப்ரிலியா ஸ்கூட்டர்களில் எஸ்.ஆர். 160, எஸ்.ஆர். 125 மற்றும் ஸ்டாம் 125 உள்ளிட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய என்ஜின் தவிர ஸ்கூட்டர்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாத நிலையில், இவற்றின் விலை ரூ. 19 ஆயிரம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் செயல்திறன் அளவுகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. புதிய அப்ரிலியா ஸ்டாம் 125 பி.எஸ்.6 விலை ரூ. 86,638 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எஸ்.ஆர். 125 மாடல் விலை ரூ. 92,181 என்றும், எஸ்.ஆர். 160 ரூ. 1,04,476, எஸ்.ஆர். 160 கார்பன் ரூ. 1,07,570 மற்றும் டாப் எண்ட் மாடலான எஸ்.ஆர். 160 ரேஸ் மாடல் விலை ரூ. 1,13,671 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

160சிசி ஸ்கூட்டர்களில் 160 சிசி சிங்கிள் சிலிண்டர், 3 வால்வ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.7 பி.ஹெச்.பி. @7600 ஆர்.பி.எம். மற்றும் 11.6 என்.எம். டார்க் @6000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 125சிசி ஸ்கூட்டர்களில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 9.4 பி.ஹெச்.பி. @7250 ஆர்.பி.எம்., 9.9 என்.எம். டார்க் @6250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
அப்ரிலியாவின் அடுத்த மாடலாக எஸ்.எக்ஸ்.ஆர். 160 வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் எஸ்.எக்ஸ்.ஆர். 160 மாடலில் 160சிசி மூன்று வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ரெட், புளூ, வைட் மற்றும் பிளாக் என நான்குவித நிறங்களில் உருவாகி வருகிறது.
டேட்சன் நிறுவனத்தின் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.
டேட்சன் நிறுவனம் விரைவில் தனது ரெடிகோ என்ட்ரி லெவல் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
அந்த வகையில் இந்த கார் புதிய கிராஷ் சோதனைகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் என்ஜின்கள் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போதைய ரெடிகோ மாடல் 800 சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 800 சிசி பெட்ரோல் என்ஜின் 545 பி.ஹெச்.பி. பவர், 72 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.0 லிட்டர் யூனிட் 68 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.0 லிட்டர் மாடலில் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. புதிய மேம்பட்ட என்ஜின்களும் பி.எஸ். 6 ரகத்தில் இதே செயல்திறனை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.
ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்புறங்களிலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ரெடிகோ மாடல் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ பெட்ரோல் வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மராசோ பெட்ரோல் மாடல்களை இந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த காரின் பி.எஸ்.6 டீசல் மாடல்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
மஹிந்திரா மராசோ பெட்ரோல் மாடல்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதில் எம் ஸ்டாலியன் ரக டர்போ சார்ஜ் செய்யப்பட்ட காசோலைன் டைரெக்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. இது 161 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

எம் ஸ்டாலியன் சீரிஸ் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எம் ஸ்டாலியன் ஜி15 என்ஜின் பெறும் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் வாகனமாக மஹிந்திரா மராசோ இருக்கிறது. இதே என்ஜின் மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடலிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மஹிந்திரா மராசோ மாடல் இந்திய சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா பெட்ரோல் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய மராசோ மாடல் விலை ரூ. 7.59 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11.21 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
தற்சமயம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மாடல்களின் விலை ரூ. 15.36 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.34 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை அப்டேட் செய்து வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டு வென்யூ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா சப்காம்பேக்ட் செடான் மாடல்களை வெளியிட்ட ஹூண்டாய் தற்சமயம் புதிய கிரெட்டா மற்றும் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காரில் பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.
புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், ஜி.டி.ஐ. டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் வென்யூ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களில் வழங்கப்பட்டுள்ளன. வென்யூ மாடலை போன்றே புதிய வெர்னா மாடலிலும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இதுதவிர புதிய வெர்னா மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளியீட்டை முன்னிட்டு டீசர் புகைப்படம் ஒன்றை ஹூண்டாய் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஃபேஸ்லிஃப்ட் வெர்னா காரில் புத்தம் புதிய கேஸ்கேடிங் கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. காரின் பின்புறத்திலும் எல்.இ.டி. டெயில்லைட்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.






