search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரெனால்ட் கேப்டூர்
    X
    ரெனால்ட் கேப்டூர்

    சர்வதேச சந்தையில் ரெனால்ட் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

    ரெனால்ட் நிறுவனத்தின் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.



    ரெனால்ட் நிறுவனம் தனது கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முதற்கட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவை ரஷ்ய மாடலுக்கானவை ஆகும். தற்சமயம் ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் பிரீ ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடல்கள் பி0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    புகைப்படங்ளின் படி காரின் வெளிப்புறம் சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய அலாய் வீல்கள், கிரில் மற்றும் பம்ப்பர் பகுதிகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கார் மேம்பட்ட பி0+ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதாக ரெனால்ட் தெரிவித்து இருக்கிறது.

    ரெனால்ட் கேப்டூர்

    ஏப்ரல் 1, 2020 முதல் இந்தியாவில் கேப்டூர் மாடல் பெட்ரோல் வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. பி.எஸ்.6 விதிகள் அமலானதும், கேப்டூர் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரெனால்ட் 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜினை பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யாது என தெரிகிறது.

    ரஷ்யாவில் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேப்டூர் மாடல் இந்தியாவில் சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மேம்பட்ட கேப்டூர் மாடலில் 156 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இதே என்ஜின் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் டைரெக்ட் இன்ஜெக்‌ஷன் மற்றும் டர்போசார்ஜிங் கொண்டிருக்கிறது. 
    Next Story
    ×