என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மஹிந்திரா நிறுவனத்தின் டியுவி300 பிஎஸ்6 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் டியுவி300 பிஎஸ்6 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய கார் தோற்றத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாமல் முன்புறம் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய டியுவி300 பேஸ்லிப்ட் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் உடன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் வழங்கப்படலாம்.

தோற்றத்தில் புதிய பேஸ்லிப்ட் மாடல் பார்க்க டியுவி300 பிளஸ் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இது 4 மீட்டர் மாடல் ஆகும். இந்த கார் பிஎஸ்4 மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் டியுவி300 மாடல் நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர், டாடா நெக்சான், போர்டு இகோஸ்போர்ட், ஹோண்டா டபிள்யூஆர்-வி, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டொயோட்டா அர்பன் குரூயிசர், மாருதி பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்யுவி300 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
கார் வைபர் சிஸ்டம் முக்கியத்துவம், பராமரிப்பது எப்படி என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மழைக்காலத்தில் கார் ஓட்டும் போது சாலையை தெளிவாக பார்க்க உதவுவது வைபர் சிஸ்டம். அதை நாம் முறையாக பராமரிக்க வேண்டும். வைபர் சிஸ்டத்தில் முதலில் கவனிக்க வேண்டியது வைபர் பிளேடு. இதுதான் முகப்பு கண்ணாடியை துடைக்க பயன்படுகிறது.
வைபர் பிளேடு ரப்பரால் ஆனது. அதன் ஷார்ப் பகுதிதான் கண்ணாடியை சுத்தமாக துடைக்கிறது. இந்த ஷார்ப் பகுதி தேய்ந்தாலோ அல்லது கிழிந்தாலோ வைபர் பிளேடை மாற்றி விடவேண்டும். தவிர நெடு நாட்கள் வைபர் பிளேடு மாற்றாமல் இருந்தால் அது கடினமானதாக மாறிவிடும்.
அவ்வாறு ஆகும் போது கண்ணாடியை சரியாக துடைக்காது. எனவே வைபர் பிளேடு நன்றாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை மாற்றி விடுவது நல்லது. அதிக நாட்கள் கார் உபயோகிக்காமல் நிறுத்தி வைக்கும் போது ‘வைபர் ஆர்ம்’ ஐ நிமிர்த்தி வைப்பதன் மூலம் வைபர் பிளேடு அழுத்தமாகாமல் அதிக நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

இரண்டாவது வைபர் ஆர்ம். இதன் மூலம்தான் வைபர் பிளேடு சுத்தம் செய்கிறது. இதன்மீதுதான் வைபர் பிளேடு பொருத்தப்பட்டுள்ளது. இதன் அசைவுக்கு எற்ற மாதிரி வைபர் பிளேடு மேலும் கீழும் சென்று கண்ணாடியை சுத்தம் செய்கிறது. இந்த வைபர் ஆர்ம் வளைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வளைந்து விட்டால் வைபர் பிளேடுக்கு அழுத்தம் சரியாக கிடைக்காமல் கண்ணாடியை சரியாக துடைக்காது.
வைபர் பிளேடு மற்றும் வைபர் ஆர்ம் வேலை செய்ய உதவி செய்வது வைபர் மோட்டார். இதன் உதவியால் தான் வைபர் ஆர்ம் இயங்குகிறது. இந்த வைபர் மோட்டாரில் தண்ணீர் போகாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். வைபர் மோட்டாருக்கு வரும் வயரை சரியாக பராமரிக்க வேண்டும். வைபர் சிஸ்டமை இயக்க பயன்படுவது ஸ்ட்ரீங் வீல்-க்கு கீழே இருக்கும் காம்பினேஷன் சுவிட்ச். இதை ஆன் செய்வதன் மூலமாகத்தான் வைபர் மோட்டார் இயங்குகிறது. இந்த சுவிட்சை சரியாகப் பராமரிக்க வேண்டும்.
வைபர் சிஸ்டத்தில் வைபர் ஸ்பிரே ஒன்றும் உள்ளது. இது எதற்கு என்றால் மழை இல்லாத நேரங்களில் கண்ணாடியை துடைக்க தேவையான தண்ணீரை வைபர் டேங்கில் இருந்து உறிஞ்சி பைப் வழியாக கண்ணாடியின் மீது பீய்ச்சி அடிக்கும். இந்த வைபர் டேங்கில் உப்பு தண்ணீரை பயன்படுத்தக் கூடாது ஏனென்றால் உப்பு நீரின் உப்பானது கட்டியாகி ஸ்பிரே ஜெட்டை அடைத்து விடும். இதனால் கண்ணாடியின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பது தடுக்கப்படும். வைபரில் உள்ள தண்ணீருடன் வைபர் ஷாம்பு கலந்து பயன்படுத்தினால் கண்ணாடியை நன்றாக துடைக்க முடியும்.
வைபர் சிஸ்டம் வேலை செய்யவில்லை என்றால் முதலில் வைபர் பியூஸை பார்க்க வேண்டும். இது பெரும்பாலான கார்களில் டிரைவர் சைடு டாஸ் போர்டு பியூஸ் பாக்ஸில் இருக்கும். இதை பரிசோதித்த பின்பு தான் மற்றவைகளை ஒன்றன்பின் ஒன்றாக பரிசோதிக்க வேண்டும்.
ஜாகுவார் நிறுவனத்தின் எப் டைப் ஸ்பெஷல் எடிஷன் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜாகுவார் நிறுவனம் அதிக பிரபலமான இ-டைப் ஸ்போர்ட்ஸ் காரின் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய எப் டைப் மாடலின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. இ டைப் ஸ்போர்ட்ஸ் கார் மார்ச் 2021 மாதத்தில் 60-வது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் கூப் மற்றும் ரோட்ஸ்டர் ஸ்டைல்களில் கிடைக்கிறது. இந்த மாடல் உலகம் முழுக்க மொத்தத்தில் 60 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதுதவிர ஆறு 3.8 லிட்டர் இ டைப் ஜாகுவார்களின் லிமிடெட் எடிஷனை மறு சீரமைப்பு செய்யப்பட இருக்கிறது.

ஜாகுவார் எப் டைப் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் பிரத்யேக நிறம், ஆடம்பர வசதிகள் மிக நேர்த்தியாக வடிவமைத்து வழங்கப்படுகின்றன. புதிய மாடலில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 567 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 299 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜனவரி 2021 முதல் கார் மாடல்களுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி லிமிட்டெட் நிறுவனம் ஜனவரி 2021 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்தப்படும் என அறிவித்து இருக்கிறது. கார் உற்பத்தி செலவீன கட்டணம் உயர்ந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
விலை உயர்வு வெவ்வேறு மாடல்களின் வேரியண்ட்கள் அளவில் வேறுபடும் என மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தற்சமயம் 14 கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை ஆல்டோ (ரூ. 2.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) துவங்கி எக்ஸ்எல்6 (ரூ. 9.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.
முன்னதாக டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மாருதி சியாஸ், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் செலரியோ போன்ற மாடல்களுக்கு ரூ.. 51 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 125 மற்றும் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்தியாவில் மாற்றியமைத்தது. தற்சமயம் ஆர்சி 125 மற்றும் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புதிய விலை உயர்வின் படி கேடிஎம் ஆர்சி 125 மாடல் விலை ரூ. 1,280 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 1,61,101 என மாறி இருக்கிறது. கேடிஎம் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 3,537 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ. 2,56,917 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கேடிஎம் ஆர்சி 125 மாடலில் 125சிசி, லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.5 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஆர்சி மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கேடிஎம் 390 டியூக், 390 அட்வென்ச்சர் போன்ற மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி 390 டியூக் மாடல் விலை ரூ. 8515 வரை உயர்த்தப்பட்டது.
ரெவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை மாற்றப்பட்டு உள்ளது.
ரெவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்தி உள்ளது. இரு மாடல்களின் விலையும் ரூ. 15 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் முன்பதிவு கட்டணம் மற்றும் ஒருமுறை செலுத்தும் தொகையும் அடங்கும்.
ரெவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் 2019 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவற்றின் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டன.
முன்னதாக ஆர்வி300 மாடல் ரூ. 84,999, ஆர்வி400 மாடல் ரூ. 1,03,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்சமயம் மோட்டார்சைக்கிள் விலை மட்டுமின்றி முன்பதிவு கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வின் படி ரெவோல்ட் ஆர்வி300 மாடல் துவக்க விலை ரூ. 94,999 என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையில் இருந்து ரூ. 10 ஆயிரம் வரை அதிகம் ஆகும். ரெவோல்ட் ஆர்வி400 மாடல் துவக்க விலை ரூ. 1.19 லட்சம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 15 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் எம்ஜி கிறிஸ்துமஸ் சர்பிரைஸ் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் விசேஷ சலுகை, தள்ளுபடி மற்றும் பலன்கள் எம்ஜி வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
எம்ஜி மோட்டார் தனது வாடிக்கையாளர்கள் எக்ஸ்பீரியன்ஸ் திட்டத்தை அப்கிரேடு செய்ய வாய்ப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய கார்களுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பலன்களை பெற முடியும்.

இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக பைபேக் திட்டம் வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் தங்களின் வாகனத்தை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையில் திரும்ப கொடுக்கும் திட்டத்தையும் எம்ஜி மோட்டார் வழங்குகிறது.
இந்த சலுகைகள் எம்ஜி ஹெக்டார், ஹெக்டார் பிளஸ் மற்றும் இசட்எஸ் இவி மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இவை ஸ்டாக் இருப்பிற்கு ஏற்றவாரு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வால்வோ நிறுவனம் சமீபத்தில் மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய செடான் மாடல் அளவில் 4761எம்எம் நீளமாகவும், 2040எம்எம் அகலமாகவும், 1431எம்எம் உயரமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2872எம்எம் அளவில் இருக்கிறது.
இத்துடன் தார் ஹேமர் எல்இடி டேடைம் லைட்கள், சி வடிவ எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மாடல் 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஹெட்-யூனிட் மற்றும் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இதன் கேபின் பானரோமிக் சன்ரூப், 4 சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு பைலட் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேண் கீப்பிங் ஏயிட், டிரைவர் அலெர்ட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் வால்வோ எஸ்60 மாடல் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடலுக்கான சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கான சந்தா விலையை தற்காலிகமாக குறைத்து உள்ளது. அதன்படி டாடா நெக்சான் இவி சந்தா மாதம் ரூ. 29,500 முதல் துவங்குகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இரண்டாவது முறையாக விலை குறைக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக நெக்சான் இவி சந்தா விலை செப்டம்பர் மாதத்தில் ரூ. 41,500 இல் இருந்து ரூ. 34,900 ஆக குறைக்கப்பட்டது. இந்த விலை நெக்சான் இவி 36 மாதங்களுக்கான சந்தா திட்டத்திற்கு டெல்லி பகுதியில் மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

டாடா நெக்சான் இவி சந்தா விலை ஒவ்வொரு நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. பெங்களூரு, ஐதராபாத், பூனே மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் நெக்சான் இவி கிடைக்கிறது. டாடா நெக்சான் இவி சந்தா முறை 12, 24 அல்லது 36 மாதங்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
டாடா நெக்சான் இவி மாடலில் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 127 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 275 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முன்பதிவு விரைவில் துவங்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஸ்கூட்டர் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விலை ரூ. 1.27 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது எஸ்ஆர்160 மாடலின் விலையை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.
புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. எனினும், விலை அடிப்படையில் அப்ரிலியா மாடல் விலை சற்றே அதிகம் ஆகும்.
புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய சந்தைக்கென உருவாக்கப்பட்டு இருக்கிறது. அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆர்எஸ்660 மாடலில் உள்ளது போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.
பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் சவுகரியமான இருக்கை, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 160சிசி பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 மாடல் விற்பனை அடுத்த ஆண்டு நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிரீமியம் எஸ்யுவி மாடல் விற்பனை அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அல்டுராஸ் ஜி4 மாடல் இரண்டாம் தலைமுறை சங்யாங் ரெக்ஸ்டான் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்தியாவில் அல்டுராஸ் ஜி4 மாடல் சிகேடி முறையில் கொண்டுவரப்பட்டு இங்குள்ள மஹிந்திரா ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு காரணங்களால் மஹிந்திரா மற்றும் சங்யாங் நிறுவனங்களிடையே உள்ள ஒப்பந்தம் முடிவுக்கு வர இருகிறது.

தற்சமயம் சுமார் 500 யூனிட்களை உற்பத்தி செய்வதற்கான பாகங்களை மஹிந்திரா வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்பின் கூடுதல் யூனிட்களை மஹிந்திரா இறக்குமதி செய்யாது என்றே கூறப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 மாடலை இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 28.69 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா நிறுவனம் தனது எலெக்டிரிக் வாகன வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி டொயோட்டா நிறுவனத்தின் டிஎன்ஜிஏ பிளாட்பார்மில் மிட்-சைஸ் எஸ்யுவி ரக எலெக்ட்ரிக் மாடல் உருவாக வருகிறது.
புதிய பிளாட்பார்ம் முன்புறம், பின்புறம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் போன்ற வாகனங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இது அனைத்து விதமான பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உபகரணங்களை பொருத்த ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதை கொண்டு பல்வேறு வேரியண்ட்களை குறுகிய காலக்கட்டத்தில் உருவாக்குவதோடு, தனிப்பட்ட மாடல்களையும் உருவாக்க முடியும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது. தற்போதைய வடிவமைப்பின் படி புதிய கார் தோற்றத்தில் ஆர்ஏவி4 எஸ்யுவி போன்று காட்சியளிக்கிறது.
முன்னதாக டொயோட்டா நிறுவனம் கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலை ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.






