search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஜாகுவார் எப் டைப் ஸ்பெஷல் எடிஷன்
    X
    ஜாகுவார் எப் டைப் ஸ்பெஷல் எடிஷன்

    ஜாகுவார் எப் டைப் ஸ்பெஷல் எடிஷன் மாடல் அறிமுகம்

    ஜாகுவார் நிறுவனத்தின் எப் டைப் ஸ்பெஷல் எடிஷன் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஜாகுவார் நிறுவனம் அதிக பிரபலமான இ-டைப் ஸ்போர்ட்ஸ் காரின் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய எப் டைப் மாடலின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. இ டைப் ஸ்போர்ட்ஸ் கார் மார்ச் 2021 மாதத்தில் 60-வது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் கூப் மற்றும் ரோட்ஸ்டர் ஸ்டைல்களில் கிடைக்கிறது. இந்த மாடல் உலகம் முழுக்க மொத்தத்தில் 60 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதுதவிர ஆறு 3.8 லிட்டர் இ டைப் ஜாகுவார்களின் லிமிடெட் எடிஷனை மறு சீரமைப்பு செய்யப்பட இருக்கிறது. 

     ஜாகுவார் எப் டைப் ஸ்பெஷல் எடிஷன்

    ஜாகுவார் எப் டைப் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் பிரத்யேக நிறம், ஆடம்பர வசதிகள் மிக நேர்த்தியாக வடிவமைத்து வழங்கப்படுகின்றன. புதிய மாடலில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 567 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 299 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
    Next Story
    ×