search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chhattisgarh"

    • பைகா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 25-30 பேர் கொண்ட குழு பயணம்.
    • பஹ்பானி பகுதிக்கு அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    சத்தீஸ்கர் மாநிலம், கவர்தா பகுதியில் பிக்-அப் வாகனம் (ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனம்) ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்தவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பைகா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 25-30 பேர் கொண்ட குழு, பாரம்பரிய டெண்டு இலைகளை சேகரித்துவிட்டு பிக்கப் டிரக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தது.

    அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பஹ்பானி பகுதிக்கு அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில், காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைவரும் கூயில் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுகிறது.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில துணை முதல்வர் விஜய் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கவர்தாவில் தொழிலாளர்கள் பயணித்த பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

    இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    மேலும், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சத்தீஸ்கரில் 5 பேரை கொலை செய்து விட்டு 33 வயது நபர் அதே இடத்திலேயே ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • ஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தைகோன் கிராமத்தில் துணி தைக்கும் டெய்லராக உள்ளவர் 33 வயதான மனோஜ்.

    சத்தீஸ்கரில் தனக்கு பெண் கொடுக்காத குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்து விட்டு 33 வயது நபர் அதே இடத்திலேயே ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தைகோன் கிராமத்தில் துணி தைக்கும் டெய்லராக உள்ளவர் 33 வயதான மனோஜ்.

    இவர் அந்த கிராமத்தில் வசித்து வந்த மீரா என்ற பெண்ணை திருமணம் செய்ய விருப்பி கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது வீட்டுக் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மீராவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதனால் மனோஜ் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே மீராவுக்கு ராய்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் தனது குடுமபத்தினரைப் பார்க்க மீரா தனது கிராமத்துக்கு வந்துள்ளார். அவரது வீட்டுக்கு சென்ற மனோஜ், மீராவின் தாய், தந்தை, சகோதரி மற்றும் 5 வயது சிறுவன் உட்பட 5 பேரையும் அவர்கள் தூங்கும்போதே கோடரியால் கொடூரமாக கொலை செய்து விட்டு அதே இடத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் கே.டி.எம் பைக்கின் பெட்ரோல் டேங்க் மேல் காதலியை அமர வைத்து, கட்டியணைத்தபடி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

    அவ்வழியே தனது காரில் பயணம் செய்த ஜாஸ்பூர் காவல் கண்காணிப்பளார் (எஸ்.பி) ஷசி மோகன் சிங் இந்த ஜோடியை பார்த்து அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் ஆபத்தான முறையில் பைக் ஒட்டிய வினய் என்பவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நக்சல் தடுப்பு வேட்டையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
    • நக்சல் தடுப்பு வேட்டையில் நக்சல் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை.

    சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் கங்களூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

    நக்சல் தடுப்பு வேட்டையில் நக்சல் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
    • நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்தது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில தினங்களில் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்குள்ள நாராயணன்பூரி, கன்கேர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்றனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில் 2 பெண் உள்பட 7 நக்சலைட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அங்கிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் தொடர்ந்து நக்சலைட்டுகள் வேட்டை நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடும்ப விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து.
    • காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.

    கதியா கிராமத்திற்கு அருகே நேற்று குடும்ப விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்டவர்கள் பத்தரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

    உயிரிழந்தவர்கள் பூரி நிஷாத் (50), நீரா சாஹு (55), கீதா சாஹு (60), அக்னியா சாஹு (60), குஷ்பு சாஹு (39), மது சாஹு (5), ரிகேஷ் நிஷாத் (6) மற்றும் ட்விங்கிள் நிஷாத் ( 6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4 பேர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    • ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி நடவடிக்கை.
    • யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று குறிப்பிடவில்லை.

    சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் தற்செயலாக துப்பாக்கி வெடித்ததால் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) கான்ஸ்டபிள் உயிரிழந்தார். மற்றொரு காவலர் காயமடைந்துள்ளார்.

    நேற்று இரவு 11 மணியளவில், மாநில காவல்துறையின் இரு பிரிவுகளான டிஆர்ஜி மற்றும் பஸ்தர் ஃபைட்டர் ஆகியவற்றின் கூட்டுக் குழு, பர்சூர் காவல் நிலைய எல்லையில் மாவோயிஸ்ட்டுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டேவாடா-நாராயண்பூர் மாவட்ட எல்லையை ஒட்டிய ஹந்தவாடா மற்றும் ஹிட்டாவாடா கிராமங்களில் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ரோந்து பணியின் போது, ஜோக்ராஜ் மற்றும் பர்சுராம் அலாமி ஆகிய இரண்டு டிஆர்ஜி கான்ஸ்டபிள்கள் தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் தோட்டாக்கள் பாய்ந்து காயம் அடைந்தனர்.

    இதில், ஜோக்ராஜ்கிற்கு அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தார். அலாமிமை மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

    • சத்தீஸ்கரின் கான்கெர் பகுதியில் பாதுகாப்பு படை என்கவுண்டர் நடத்தியது.
    • இதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இன்று மதியம் 1.30 மணியளவில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, நக்சல்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் நக்சல்கள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு அவர்களும் பதிலடி கொடுத்தனர்.

    இந்த என்கவுனட்ரில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், சத்தீஸ்கரில் 29 நக்சல்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நடவடிக்கையை தங்கள் வீரத்தால் வெற்றிகரமாக செய்த அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் இன்று என்கவுண்டர் நடத்தினர்.
    • இதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, நக்சல்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் நக்சல்கள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு அவர்களும் பதிலடி கொடுத்தனர்.

    சிறிது நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
    • உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் கும்ஹாரி பகுதியில் பேருந்து கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்து குறித்து துர்க் மாவட்ட ஆட்சியர் ரிச்சா பிரகாஷ் சவுத்ரி கூறுகையில், " துர்க்கில், தொழிலாளர்களுடன் சென்றுக் கொண்டிருந்த பேருந்து நேற்று இரவு 8.30 மணியளவில் கும்ஹாரி அருகே ஒரு பள்ளத்தில் விழுந்தது. இதில், 12 நபர்கள் இறந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    காயமடைந்தவர்களில் 12 பேர் பரிந்துரைக்கப்பட்டு எய்ம்ஸ் (ராய்ப்பூர்) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மீதமுள்ள இருவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது சீரான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கிறோம்.

    விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சத்தீஸ்கர் மாநிலம் துர்கில் ஏற்பட்ட பேருந்து விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
    • பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் அம்மாநிலத்தில் அவ்வாறு எந்த ஊழலும் நடைபெறவில்லை என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    இது தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சத்தீஸ்கரில் எவ்வித மதுபான ஊழலும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. இதே கருத்தைதான் காங்கிரசும் முன்வைத்தது. இல்லாத ஒரு ஊழலை இருப்பதாக தெரிவித்து, யார் கொடுத்த அழுத்தத்தால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது?

    அமலாக்கத்துறையை பாஜக அரசு தவறாக பயன் படுத்தியிருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பே உறுதிப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து பாஜக பொய்களை மட்டுமே பரப்புகிறது என்பது தெளிவாகியுள்ளது பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்
    • குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்

    சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்.

    இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார். குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.

    இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

    ×