search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கரில் பிக்-அப் வாகனம் கவிழ்ந்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு
    X

    சத்தீஸ்கரில் பிக்-அப் வாகனம் கவிழ்ந்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு

    • பைகா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 25-30 பேர் கொண்ட குழு பயணம்.
    • பஹ்பானி பகுதிக்கு அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    சத்தீஸ்கர் மாநிலம், கவர்தா பகுதியில் பிக்-அப் வாகனம் (ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனம்) ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்தவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பைகா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 25-30 பேர் கொண்ட குழு, பாரம்பரிய டெண்டு இலைகளை சேகரித்துவிட்டு பிக்கப் டிரக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தது.

    அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பஹ்பானி பகுதிக்கு அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில், காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைவரும் கூயில் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுகிறது.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில துணை முதல்வர் விஜய் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கவர்தாவில் தொழிலாளர்கள் பயணித்த பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

    இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    மேலும், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×