என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலுக்கான முன்பதிவை இந்திய சந்தையில் துவங்கி இருக்கிறது.


    சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலுக்கான இந்திய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு சாம்சங் இந்தியா ஸ்டோரில் நடைபெற்று வருகிறது.

    புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி ஸ்மார்ட் டேக் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை ரத்து செய்து 100 சதவீத தொகையை திரும்ப பெறலாம். 

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ.

    கேலக்ஸி எஸ்21 எப்.இ. இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், சர்வதேச சந்தையில் விற்பனை துவங்கும் ஜனவரி 11 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் இந்திய சநந்தையில் புதிய நெக்பேண்ட் இயர்போன் மாடலை குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் என்கோ எம்32 நெக்பேண்ட் இயர்போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் பிரபல என்கோ எம்31 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் புதிய இயர் விங் டிசைன், பாஸ்ட் சார்ஜிங், 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 20 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் டூயல் டிவைஸ், ஃபாஸ்ட் ஸ்விட்சிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒப்போ என்கோ எம்32

    ஒப்போ என்கோ எம்32 அம்சங்கள்

    - 10 எம்.எம். டைனமிக் டிரைவர்கள், தனித்துவம் மிக்க சவுண்ட் கேவிட்டி டிசைன்
    - ப்ளூடூத் 5.0, ஏ.ஏ.சி. கோட்
    - டூயல் டிவைஸ் பேரிங் மற்றும் ஃபாஸ்ட் ஸ்விட்சிங் 
    - ஹால் மேக்னெடிக் ஸ்விட்ச் 
    - 33 கிராம் எடை 
    - ஐ.பி. 55 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி
    - 220 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - யு.எஸ்.பி. டைப் சி போர்ட் 

    புதிய ஒப்போ என்கோ எம்32 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 10 ஆம் தேதி துவங்குகிறது. ஒப்போ என்கோ எம்32 விலை ரூ. 1799 ஆகும். ஜனவரி 10 முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறும் விற்பனையில் இந்த இயர்போனை அமேசான் மற்றும் ஒப்போ ஸ்டோர் தளங்களில் வாங்குவோருக்கு ரூ. 300 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இதன் விலை சில நாட்களுக்கு ரூ. 1,499 ஆக இருக்கும். 
    கூகுள் நிறுவனம் விரைவில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் டென்சார் பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவே இல்லை. பிக்சல் 3 வெளியீட்டை தொடர்ந்து பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் இந்திய வெளியீட்டை கூகுள் தவிர்த்து வருகிறது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த காலாண்டு இறுதிக்குள் கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் பிக்சல் 6ஏ என அழைக்கப்படலாம்.

     கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்

    அம்சங்களை பொருத்தவரை பிக்சல் 6ஏ மாடலில் 6.2 இன்ச் பிளாட் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டென்சார் சிப்செட், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது சென்சார், 8 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படலாம்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.


    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    புதிய மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     மோட்டோ ஜி71 5ஜி

    மோட்டோ ஜி71 5ஜி அம்சங்கள் 

    - 6.43 இன்ச் 1080x2400 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
    - அட்ரினோ 619எல் ஜி.பி.யு.
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 50 எம்.பி. பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. கேமரா
    - 2 எம்.பி. கேமரா 
    - 16 எம்பி. செல்பி கேமரா 
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ் 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - 5ஜி, டூயல் 4ஜி வவோல்ட்இ, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங்

    ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உலகளவில் புதிய உச்சத்தை தொட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரிலியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 2,23,75,950 கோடி வரை உயர்ந்தது. இத்தகைய மதிப்பை எட்டிய முதல் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. 

    ஆப்பிள் நிறுவனம் ஆட்டோமேடெட் கார் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற சந்தைகளில் களமிறங்க இருப்பதும், தொடர்ந்து தலைசிறந்த சாதனங்களை அறிமுகம் செய்யும் என்பதாலும் ஆப்பிள் பங்குகள் விலை கணிசமாக அதிகரித்தது.

     ஆப்பிள்

    2022 ஆண்டின் முதல் வர்த்தக நாளில் ஆப்பிள் நிறுவன பங்கு ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,640 ஆக துவங்கியது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு 3 டிரிலியன் டாலர்கள் வரை அதிகரித்தது. பங்குச்சந்தை நிறைவின் போது ஆப்பிள் நிறுவன பங்கு ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,570 என இருந்தது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் மற்ற நாடுகளில் எக்சைனோஸ் 2100 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 12, 5ஜி, 12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐ.பி.68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

     கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. அம்சங்கள்

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி ஒ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 2100 பிராசஸர் 
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யு.ஐ. 4
    - சிங்கில் / டூயல் சிம்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா
    - 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
    - 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா
    - 32 எம்.பி. செல்பி கேமரா 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் 
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மோஸ்
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் 

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. வைட், லாவெண்டர், கிராபைட் மற்றும் ஆலிவ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி.+128 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி.+256 ஜி.பி. விலை முறையே 699.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 52,215 என்றும் 8 ஜி.பி.+256 ஜி.பி. விலை 769.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 57,340 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் விலையை இந்தியாவில் திடீரென குறைத்து இருக்கிறது.


    தென் கொரியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் இந்தியாவில் தனது கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து சாம்சங் விரைவில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

    முன்னதாக பலமுறை வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இதுமட்டுமின்றி கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

     கேலக்ஸி ஏ12

    சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. + 128 ஜி.பி. என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இதன் பேஸ் மாடல் விலை ரூ. 13,999 இல் இருந்து ரூ. 12,999 என்றும் 6 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ. 16,499 இல் இருந்து ரூ. 15,499 என்றும் குறைக்கப்பட்டு உள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான விளம்பர வீடியோவை 911 எனும் தலைப்பில் வெளியிட்டு உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் 911 தலைப்பில் ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கான புதிய விளம்பர வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. விளம்பர வீடியோ ஆப்பிள் வாட்ச் அதன் பயனர்களின் உயிரை காப்பாற்றும் திறன் கொண்டுள்ளதை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    வீடியோவில் அமாண்டா, ஜேசன் மற்றும் ஜிம் என மூன்று பேர் ஆப்பிள் வாட்ச் மாடலில் இருந்து 911 அழைத்து உதவி கோர முடிகிறது. முதல் சம்பவத்தில் பெண் பயணித்து கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கி நீரில் மூழ்கும் போது ஆப்பிள் வாட்ச் உதவுகிறது. 

     ஆப்பிள் வாட்ச் 7

    மற்றொரு சம்பவத்தில் சூறாவளி காற்றில் சிக்கிய நபர் கடலுக்குள் தூக்கி வீசப்படுகிறார். அடுத்ததாக 21 அடி உயரத்தில் இருந்து விவசாயி கீழே விழுந்து காலை உடைத்து கொள்கிறார். வீடியோ நிறைவடையும் போது மூன்று பேரும் நிமிடங்களில் காப்பாற்றப்படுகின்றனர்.

    அதன்படி ஆப்பிள் வாட்ச் வாங்கினால், ஆபத்து காலத்தில் அது உங்களின் உயிரை காப்பாற்றும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஆப்பிள் வாட்ச் பலரின் உயிரை காப்பாற்றி இருக்கும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன.
    வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் சுமார் 17 லட்சம் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை அதிரடியாக நீக்கி இருக்கிறது.


    வாட்ஸ்அப் நிறுவனம் நவம்பர் 2021 மாதத்திற்கான மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் நவம்பர் 30, 2021 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 17 லட்சம் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டதாக வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது. முன்னதாக அக்டோபர் மாதத்தில் 20 லட்சம் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டன.

    தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 படி வாட்ஸ்அப் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்திய விதிகள் மற்றும் வாட்ஸ்அப் விதிகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

     வாட்ஸ்அப்

    அதன்படி 2021 நவம்பர் மாதத்தில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வந்த 17,59,000 பேரின் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டன. வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 602 குற்றச்சாட்டுகள் பதிவாகின. இதில் வாட்ஸ்அப் 36 அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று 357 அக்கவுண்ட்களை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டன. அவற்றில் 36 அக்கவுண்ட்கள் 'ஆக்‌ஷன்' செய்யப்பட்டன.

    அக்கவுண்ட் ஏற்கனவே நீக்கப்பட்டு இருத்தல் அல்லது ஏற்கனவே நீக்கப்பட்ட அக்கவுண்ட் ரீஸ்டோர் செய்யப்பட்டு இருத்தலை வாட்ஸ்அப் 'ஆக்‌ஷன்' என குறிப்பிடுகிறது. 
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரை வெளியிட்டு இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பிளஸ் 9 ஆர்.டி. ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. 



    ஒன்பிளஸ் 9ஆர்.டி. அம்சங்கள்

    - 6.62 இன்ச் 1080x2400 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888  பிராசஸர்
    - அட்ரினோ 660 ஜி.பி.யு.
    - 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 50 எம்.பி. பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா 
    - 2 எம்.பி. மேக்ரோ கேமரா
    - 16 எம்.பி. செல்பி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - வார்ப் சார்ஜ் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 மாடலுக்கான டீசரையும் ஒன்பிளஸ் வெளியிட்டுள்ளது. இதில் 40 டி.பி. வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன், மூன்று மைக்ரோபோன்கள், கால் நாய்ஸ் கேன்சலேஷன், ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஐபோன்களில் பேட்டரி சார்ஜ் அதிக நேரம் நீடிப்பதில்லை என்று கூறும் வாடிக்கையாளர்கள், பேட்டரி பிரச்சனையை சமாளிக்க சில வழிமுறைகள் உள்ளன.

    பெரும்பாலும் ஐபோன் என்றாலே பேட்டரி நீண்ட நேரம் நீடிக்காது என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

    கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 13 மாடல்களில் பேட்டரி திறன் முந்தைய மாடல்களை காட்டிலும் சற்று அதிகமாகவே கூட்டப்பட்டுள்ளது. ஆனாலும் வாடிக்கையாளர்கள் பேட்டரி சார்ஜ் அதிக நேரம் நீடிப்பதில்லை என்றே கூறுகின்றனர்.

    இந்த பிரச்சனையை சமாளிக்க தற்போது சில வழிமுறைகளை நாம் காண்போம்:

    ஐபோன்

    முதலில் செட்டிங்ஸ் சென்று > அதில் ஜெனரல் கிளிக் செய்து > பேக்ரவுண்ட் ஆப் ரெப்ரெஷ் > ஆஃப் செய்யவும் 

    Settings > General > Background App Refresh

    இரண்டாவதாக மீண்டும் செட்டிங்ஸ் சென்று > பேட்டரி ஹெல்த் > ஆப்டிமைஸ்டு பேட்டரி சார்ஜிங் டாக்கில் செய்யவும் 

    Settings > Battery > Battery Health > Toggle on Optimized Battery Charging

    மூன்றாவதாக மீண்டும் செட்டிங்ஸ் சென்று > அக்செசபிலிட்டி > மோஷன் > ஆட்டோ பிளே மெசேஜ் எபக்ட்ஸ் மற்றும் ஆட்டோ பிளே வீடியோ ப்ரிவியூஸ் டாக்கில் செய்யவும் 

    Settings > Accessibility > Motion > Toggle off Auto-Play Message Effects and Auto-Play Video Previews

    மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் செய்தால் உங்கள் ஐபோனின் பேட்டரி சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்கும். இந்த வழிமுறை புதிய மற்றும் பழைய என அனைத்து ஐபோன்களுக்கும் பொருந்தும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 2399 பிரீபெயிட் சலுகை வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பி.எஸ்.என்.எல். ரூ. 2399 பிரீபெயிட் சலுகையில் 60 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வழங்குகிறது. அதன்படி இந்த சலுகை வேலிடிட்டி குறுகிய காலக்கட்டத்திற்கு 425 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ரூ. 2399 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். டியூன்ஸ், இரோஸ் நௌ சந்தாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டி நீட்டிப்பு பற்றிய அறிவிப்பு தமிழகத்துக்கான பி.எஸ்.என்.எல். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. 

     கோப்புப்படம்

    இதுதவிர பி.எஸ்.என்.எல். ரூ. 1499 விலையிலும் பிரீபெயிட் சலுகையை வழங்கி வருகிறது. இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2 ஜி.பி. டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

    பி.எஸ்.என்.எல். ரூ. 1999 விலை பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 500 ஜி.பி. டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.  
    ×