என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் விற்பனை கடந்த ஆண்டை விட 4 மடங்கு அதிகரித்து இருக்கிறது.
சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் சீரிஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த ஆண்டை விட நான்கு மடங்கு அதிகரித்து இருக்கிறது. இது முந்தைய கேலக்ஸி இசட் சீரிஸ், ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த விற்பனையாகும்.
இந்த ஆண்டு கேலக்ஸி இசட் சீரிஸ் மாடல்களின் விற்பனை 80 லட்சம் யூனிட்களை கடக்கும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதுதவிர கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் பிளிப் 3 ஸ்மார்ட்போன்கள் முந்தைய ஆண்டை விட இருமடங்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

'மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தவர்களும் கேலக்ஸி இசட் சீரிஸ் மாடல்களை வாங்கியுள்ளனர். கேலக்ஸி நோட் 20 மாடலுடன் ஒப்பிடும் போது கேலக்ஸி ப்ளிப் 3 மாடலை வாங்குவோர் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகரித்து இருக்கிறது,' என சாம்சங் அறிவித்துள்ளது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆடியோ மற்றும் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான நாய்ஸ் இந்திய சந்தையில் நாய்ஸ் கலர்பிட் கேலிபர் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1.69 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 24x7 இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் உள்ளன.
இத்துடன் 3 ஆகிச்ஸ் அக்செல்லோமீட்டர், பாலிகார்போனேட் கேசிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்டிரெஸ் மற்றும் ஸ்லீப் டிராக்கிங், ஐ.பி. 68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, முழு சார்ஜ் செய்தால் 15 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

புதிய நாய்ஸ் கலர்பிட் கேலிபர் மாடல் பிளாக், கிரீன், ரெட் மற்றும் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ. 1999 ஆகும். நாய்ஸ் கலர்பிட் கேலிபர் ஸ்மார்ட்வாட்ச் உண்மை விலை ரூ. 3,999 ஆகும். இதன் விற்பனை ஜனவரி 6 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் சமீபத்தில் நீக்கிய ரூ. 601 விலை பிரீபெயிட் சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது.
வி நிறுவனம் ரூ. 601 பிரீபெயிட் சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது. எனினும், இம்முறை இதன் வேலிடிட்டி 28 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த சலுகை 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேலிடிட்டி மட்டும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 601 வி சலுகையின் பலன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சலுகையில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது.

வி ரூ. 601 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் வார இறுதி நாட்களில் டேட்டா ரோல்-ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை வி செயலியில் ரீசார்ஜ் செய்யும் போது ரூ. 100 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான டீசர் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இம்மாதம் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துவிட்டது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசர் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
இதில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஜனவரி 11 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பும் அம்பலமாகி இருக்கிறது.
அதன்படி புதிய மாடல் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள், வளைந்த ஸ்கிரீன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இதே விவரங்கள் அடங்கிய ரெண்டர்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா
- 50 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா
- 32 எம்.பி. செல்பி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 80 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்
கூகுள் நிறுவனம் 2021 ஆண்டிற்கான கடைசி டூடுளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளையும் கொண்டாடும் வகையிலும், நினைவூட்டும் வகையிலும் டூடுள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அதன்படி 2021 கடைசி நாளில், இந்த ஆண்டிற்கான கடைசி டூடுளை வெளியிட்டுள்ளது.
புதிய கூகுள் டூடுள் புத்தாண்டு பிறப்பை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டூடுளை கிளிக் செய்ததும், மற்றொரு வலைப்பக்கம் திறந்து பல வண்ணங்கள் நிறைந்த காகித துகள்கள் மேலிருந்து கீழே விழுகின்றன. இந்த வலைப்பக்கத்தில் புத்தாண்டு பிறப்பு பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர கூகுள் இந்த ஆண்டு முழுக்க வெளியிட்ட டூடுள்களும் மற்றொரு வலைப்பக்கத்தில் இடம்பெற்று இருக்கின்றன. https://www.google.com/doodles வலைப்பக்கம் சென்று கூகுள் இந்த ஆண்டு வெளியிட்ட டூடுள்களை ஒவ்வொன்றாக பார்க்க முடியும்.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், கேலக்ஸி எஸ்22 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல்களின் புதிய ரெண்டர்கள் தற்போது வெளியாகி உள்ளன.
புதிய ரெண்டர்களின் படி கேலக்ஸி எஸ்22 மாடலில் பன்ச் ஹோல் ரக ஃபிளாட் டிஸ்ப்ளே, மெட்டல் சேசிஸ், வலதுபுறத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன. இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள், சாம்சங் லோகோ இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன், பின்க் கோல்டு, பேண்டம் பிளாக் மற்றும் பேண்டம் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் பர்கண்டி, கிரீன், பேண்டம் பிளாக் மற்றும் பேண்டம் வைட் நிறங்களில் உருவாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் எஸ் பென், மெட்டல் பிரேம், நான்கு கேமரா சென்சார்கள், வலதுபுறம் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் கியூ.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் அமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்.பி. பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சிறுமிக்கு விடுத்த அபாயகரமான சேலன்ஜ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமேசான் நிறுவனத்தின் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட், சிறுமிக்கு விடுத்த சேலன்ஜ் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. 10-வயது சிறுமியிடம் அலெக்சா, மின் இணைப்புள்ள வயரில் நாணயத்தை கொண்டு தொட கூறி இருக்கிறது.
இதுபற்றிய சேலன்ஜ் ஒன்று டிக்டாக்கில் டிரெண்ட் ஆனதாகவும், இந்த டிரெண்ட் செய்தியாக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை கொண்டு அலெக்சா சிறுமியிடம் இவ்வாறு கூறி இருக்கலாம் என தெரிகிறது.

இந்த சம்பவதத்தை சிறுமியின் பெற்றோர் தங்களின் டுவிட்டர் டைம்லைனில் பதிவேற்றம் செய்தனர். பதிவுடன் அலெக்சா ஆக்டிவிட்டி ஹிஸ்ட்ரி ஸ்கிரீன்ஷாட்டையும் இணைத்துள்ளனர். ஸ்கிரீன்ஷாட் படி, சிறுமி முதலில் 'எனக்கு ஏதேனும் சவால் விடு,' என கேட்டிருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த அலெக்சா, 'நான் இணையத்தில் ஒன்றை கண்டறிந்தேன். வலைதளத்தின் படி சவால் மிகவும் எளிமையானது தான். பவர் பிளக்-இல் போன் சார்ஜரை சொருகி, அதன் மறுமுனையில் நாணயம் ஒன்றை வைக்கவும்,' என பதில் அளித்துள்ளது.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய அமேசான், 'இதுபற்றிய தகவல் கிடைத்ததும், அதனை சரிசெய்யும் முயற்சியை துவங்கிவிட்டோம்,' என தெரிவித்துள்ளது.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி புதிதாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலஸ் பென் வசதி கொண்டிருக்கிறது. சியோமி போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை கோரி அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இருவிதங்களில் மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் தோற்றம் சியோமி மிக்ஸ் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. காப்புரிமை விவரங்களின் படி சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா, எல்.இ.டி. பிளாஷ், வலதுபுறம் வால்யூம் பட்டன், பவர் கீ வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் உள்ளது. இந்த மாடல் மட்டுமின்றி கிளாம்ஷெல் போன்ற தோற்றத்தில் பிளிப் போன் ஒன்றையும் சியோமி உருவாக்கி வருகிறது. இதற்கான காப்புரிமை கோரியும் சியோமி விண்ணப்பித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா வழங்கப்படுகிறது.
இந்த பிளிப் போன் சீனாவின் தேசிய அறிவுசார் சொத்து கூட்டமைப்பில் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, கீழ்புறத்தில் சிம் ஸ்லாட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில், வலதுபுறம் பவர் மற்றும் வால்யூம் ராக்கர் உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனினை ரூ. 49,999 விலையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடலின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் வலைதள விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ரூ. 36,999 விலையில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமேசான் தளத்தில் புதிய ஒன்பிளஸ் 9 வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஒன்பிளஸ் 9 5ஜி 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போனினை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் எக்சேன்ஜ் சலுகையும் சேர்க்கும் போது ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனினை ரூ. 31,999 விலையில் வாங்கிட முடியும். அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 6.55 இன்ச் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
டெக்னோ பிராண்டு ஸ்பார்க் 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஹை ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ், 8 எம்.பி. செல்பி கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

புதிய டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ மாடல் கோமோடோ ஐலேண்ட், டர்கியூஸ் சியான், வின்சர் வைலட் மற்றும் இன்டர்ஸ்டெல்லார் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. + 64 ஜி.பி. விலை ரூ. 10,599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஜனவரி 4 ஆம் தேதி துவங்குகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் மற்றொரு யூனிட் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் வெடித்து தீப்பிடிக்கும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. இதனால் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் ஹார்டுவேர் தரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில், ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் மற்றொரு யூனிட் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதமும் ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் ஒன்று வெடித்து சிதறியது. தற்போது வெடித்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை பாதிக்கப்பட்ட நபர் டுவிட்டரில் பதிவிட்டார். புகைப்படங்களின் படி ஸ்மார்ட்போன் இருபுறங்களிலும் முழுமையாக சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் பற்றி பதில் அளித்த ரியல்மி, 'ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரை தொடர்பு கொண்டு, அருகாமையில் உள்ள ரியல்மி சர்வீஸ் மையம் செல்ல அறிவுறுத்தி இருக்கிறோம். இந்த சம்பவத்தை விரைந்து சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்,' என தெரிவித்தது.

ஸ்மார்ட்போன் வெடித்ததற்கான காரணம் பற்றி ரியல்மி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. முன்பு இதுபோன்று நடைபெற்ற சம்பவங்களின் போது, வெளிப்புற காரணிகளால் ஸ்மார்ட்போன் வெடித்தது என ரியல்மி பதில் அளித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்த பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகை திடீரென நீக்கப்பட்டது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சலுகை கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தின. ரிலையன்ஸ் ஜியோவும் தன் பங்கிற்கு பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தியது. பின், பயனர்களை மகிழ்விக்கும் நோக்கில் ரூ. 1 விலையில் சலுகையை அறிமுகம் செய்தது.
ரூ.1 ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் ஓரளவு சுமாரான பலன்களே வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சலுகை நீக்கப்பட்டது. ஜியோ ரூ. 1 பிரீபெயிட் சலுகையில் 100 எம்.பி. அதிவேக 4ஜி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது. பின் இதன் பலன்கள் 10 எம்.பி.-யாக குறைக்கப்பட்டது.

குறைந்த விலை காரணமாக இந்த சலுகை பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனினும், ரூ. 1 ஜியோ சலுகை தற்போது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஜியோ மொபைல் செயலியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.






