என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    யூடியூப் டிவி, யூடியூப் மியூசிக், யூடியூப் ஸ்டூடியோ உள்ளிட்ட பல அம்சங்கள் சரியாக இயங்கவில்லை என கூறப்படுகிறது.
    உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக யூடியூப் இருக்கிறது. யூடியூப்பில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன.

    இந்நிலையில் யூடியூப் தளம் நேற்று இரவு சில மணி நேரம் முடங்கியதாக பல பயனர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக யூடியூப்பில் உள்ள சைட்பார் மற்றும் லைப்ரேரி அம்சங்கள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    அதேபோல யூடியூப் டிவி, யூடியூப் மியூசிக், யூடியூப் ஸ்டூடியோவும் சரியாக இயங்கவில்லை.

    இந்த பிரச்சனை குறித்து யூடியூப் நிறுவனமும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், நேற்று ஏற்பட்ட முடக்கத்தில் பலரால் யூடியூப்பில் லாகின் செய்ய முடியவில்லை, செட்டிங்ஸ் சரியாக வேலை செய்யவில்லை, வீடியோக்கள் கூட சரியாக பார்க்க முடியவில்லை என பலர் புகார் அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 10,000 பயனர்கள் யூடியூப் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

    யூடியூப்பில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுவிட்டது. சில பிரச்சனைகளை சரி செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கூறியுள்ளது.
    இந்த போன் காஸ்மிக் பிளாக், ஐஸ்பெர்க் ப்ளூ, மிண்ட் கிரீன் ஆகிய நிறங்களில் வெளியாகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி22 இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. 

    இதில் 1.8GHz ஆக்டோ கோர்  MediaTek Helio G37 பிராசஸர், 6.53 இன்ச் 90Hz டிஸ்பிளே ஆகியவை இடம்பெற்றுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை இதில், கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் குவாட் பிக்ஸல் தொழில்நுட்பத்துடன் இடம்பெற்றுள்ளது. இத்துடன் 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ விஷன் சென்சார் ஆகியவையும் இடம்பெறுகிறது.

    4ஜிபி+64ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.10,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த போன் காஸ்மிக் பிளாக், ஐஸ்பெர்க் ப்ளூ, மிண்ட் கிரீன் ஆகிய நிறங்களில் வெளியாகிறது.

    இந்த போன்களுக்கு 12 மாத வாரண்டியும், போன் பிடிக்கவில்லை என்றால் 7 நாட்களில் திரும்பித்தரும் திட்டத்தையும் ஃபிளிப்கார்ட் வைத்துள்ளது.
    ஃபிளிப்கார்ட் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட போன்களை விற்கும் தனி சேவையை வழங்கி வருகிறது.

    இதில் ஆப்பிள், கூகுள், சாம்சங், ரியல்மி, ரெட்மி ஆகிய போன்களை வாடிக்கையாளர்கள் நல்ல விலைக்கு விற்கவும், வாங்கவும் முடியும்.

    ஃபிளிப்கார்டில் விற்கப்படும் இந்த போன்கள் குறைந்த அளவே முந்தைய வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், முழுதாக பாதிப்பில்லாமல் இயக்கூடியதாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழைய ஃபிளாக்‌ஷிப் போன்கள் முதல் மிட்ரேஞ்ச் சாதனங்கள் வரை இதில் விற்கப்படுகின்றன.

    பயன்படுத்தப்பட்ட போன்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கும் ஃபிளிப்கார்ட் 47 தர ஆய்வை நிபுணர்களால் செய்யப்பட்டு பிறகே விற்பனைக்கு வைக்கிறது.

    பயன்படுத்தப்பட்ட போன்களில் தரத்தை வைத்து அந்த போன் 5 வகையாக பிரிக்கப்படுகிறது. இந்த போன்களுக்கு வாடிக்கையாளர்கள் 12 மாத வாரண்டியும் பெறமுடியும். இந்த போன்களை 7 நாட்களில் திரும்பித்தரும் திட்டத்தையும் ஃபிளிப்கார்ட் வைத்துள்ளது.

    இந்த பயன்படுத்தப்பட்ட போன்களுக்கு தற்போது தள்ளுபடி, சலுகைகளை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஐபோன் எஸ்இ போன் 32 ஜிபி வேரியண்டை ரூ.8,449-க்கு வாங்க முடியும், ஐபோன் 6எஸ் ஸ்மார்ட்போனை ரூ.11,999 (32ஜிபி) ஐபோன் 6 பிளஸ் ரூ.13,499, ஐபோன் 7 ரூ.14,499க்கும் வாங்க முடியும். 64ஜிபி ஐபோன் எக்ஸ் மாடலை ரூ.30,999க்கு பெற முடியும்.

    அதேபோல பிக்ஸல் 3 எக்ஸ் எல் ஸ்மார்ட்போன் (128 ஜிபி) ரூ.15,999க்கு கிடைக்கும். 64ஜிபியின் விலை ரூ.13,899க்கும், பிக்ஸல் 3ஏ எக்ஸ் எல் ரூ.14,275க்கும் கிடைக்கும்.

    சாம்சங் போனை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்20 (128 ஜிபி) ரூ.37,999க்கும், சாம்சங் கேலக்ஸி எஃப்62 ரூ.16,990க்கும், சாம்சங் கேலக்ஸி எஃப்12 கேப் ரூ.9997க்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த அம்சத்திற்கு மைக்ரோசாஃப்ட் பீக் என பெயரிட்டுள்ளது. மேக் ஓஎஸ்ஸில் உள்ள குயிக் லுக் போலவே இந்த அம்சம் செயல்படும் என கூறப்படுகிறது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மேக் ஓஎஸ்ஸில் இருப்பது போன்ற பிரிவீவ் அம்சத்தை விண்டோஸ் 11-ல் கொண்டு வரவுள்ளது.

    இதன்படி ஒரு ஃபைலை ஓபன் செய்து பார்க்காமலேயே நாம் அதன் பிரிவீவ்வை பார்க்க முடியும். இந்த அம்சத்திற்கு பீக் என பெயரிடப்பட்டுள்ளது.

    இதன்படி நாம் எந்த ஃபைலை பார்க்க விரும்பினாலும் Shift+Spacebar ஆகியவற்றை அழுத்தினால் போதும். அதன் பிரிவீவ் காட்டப்படும். இதில் சாதாரண ஃபைல்களை போல மீடியா ஃபைல்களையும் பிளே செய்யலாம் என கூறப்படுகிறது.

    மேக் ஓஎஸ்ஸில் உள்ள குயிக் லுக் அம்சத்தில் நாம் பிரீவிவ் செய்யும் ஃபைல்களை எடிட் செய்யவும் முடியும். ஜூம் செய்யவும் முடியும். இந்த அம்சங்கள் மைக்ரோசாஃப்ட் பிரீவ்வில் இப்போதைக்கு இடம்பெறாது என கூறப்படுகிறது.

    இந்த அம்சம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
    இந்த போனை ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடியும் உண்டு.
    ரியல்மி நிறுவனம் ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

    இந்த போனில் 6.4 இன்ச் சூப்பர் ஆமோலெட் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் 360Hz டச் சாம்பிளிங் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவை தரப்பட்டுள்ளன.

    மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 680 பிராசஸர், Aderno 610 GPU இடம்பெற்றுள்ளன.

    கேமராவை பொறுத்தவரை 108 மெகாபிக்ஸல் சாம்சங் ISOCELL HM6 பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் கேமரா, 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த போனில் 5000 mAh பேட்டரி, 33W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் இடம்பெறுகிறது.

    இதன் 6ஜிபி+128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.17,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுகம் விலையாக ரூ.15,999-க்கும் இந்த போன் கிடைக்கும். அதேபோன்று 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகம் விலையாக ரூ.16,999-க்கு இந்த போன் கிடைக்கும்.

    இதைத்தவிர இந்த போனை ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடியும் உண்டு.
    ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் என அனைத்து வகையான தளங்களிலும் இந்த இரட்டை தம்ஸ்அப் பட்டன் வழங்கப்படவுள்ளது.
    நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பயனர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக இருக்கிறது. நெட்ஃபிலிக்ஸில் கேம்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கின்றன.

    இந்நிலையில் நெட்ஃபிலிக்ஸ் தற்போது ‘Two Thumbs up' என்ற அம்சத்தை கொண்டு வருகிறது. பயனர்களுக்கு பரிந்துரைக்கப்படும் பகுதியை மேம்படுத்தப்படுத்துவதற்காக இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போத் நெட்ஃபிலிக்ஸில் தம்ஸ் அப், தம்ஸ் டவுன் என்ற இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. இதில் தம்ஸ் அப் எனக்கு பிடித்துள்ளது என கூறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தம்ஸ் டவுன் எனக்கு பிடிக்கவில்லை என கூறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தம்ஸ் அப் பட்டன், இந்த வீடியோ எனக்கு மிக விருப்பமானதாக இருக்கிறது என கூறுவதற்காக வைக்கப்பட்டுள்ளத்ஹு.

    இப்போது ஒரு நிகழ்ச்சி அல்லது திரைப்படத்திற்கு இரண்டு தம்ஸ் அப் பட்டனை ஒருவர் தருகிறார் என்றால், அவருக்கு அதே வகையான நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் அல்லது அதே இயக்குநர் இயக்கிய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் என அனைத்து வகையான தளங்களிலும் இந்த இரட்டை தம்ஸ்அப் பட்டன் வழங்கப்படவுள்ளது.

    நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ‘Two Thumbs Up' என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நெட்ஃபிலிக்ஸ் நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தை பார்த்த பயனர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த வீடியோக்களுக்கு பக்கத்தில் இருக்கும் Two Thumbs Up கிளிக் செய்து தனது விருப்பதை தெரிவிக்கலாம்.

    இதன்மூலம் அந்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை போலவே இருக்கும் மற்ற திரைப்படங்களை அல்லது அந்த திரைப்பட இயக்குநரின் மற்ற படைப்புகளை நெட்ஃபிலிக்ஸ் பரிந்துரை செய்யும் என கூறப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 9, 10,11 மற்றும் சமீபத்தில் வெளியான ஆண்ராய்டு 12-ல் இயங்கும் சாதனங்கள் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளன.
    சாம்சங் கேலக்ஸி ஆண்ட்ராய்டு சாதனங்கள் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 9, 10,11 மற்றும் சமீபத்தில் வெளியான ஆண்ராய்டு 12-ல் இயங்கும் சாதனங்கள் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளன.

    இதன்மூலம் சாம்சங்போன் எந்த 3ம் நபர் செயலிகளுக்கும் கட்டளையிடுவதற்கு அனுமதி வழங்குவதாக கூறப்படுகிறது.

    அதாவது ஒரு மூன்றாவது நபர் செயலி பயனர்களின் அனுமதி இல்லாமலேயே ஃபேக்டரி ரீசெட், அழைப்புகள் உள்ளிட்ட செயல்களை செய்வதற்கு சாம்சங் ஸ்மார்ட்போன் அனுமதி அளிக்கிறது.

    இதன்மூலம் ஒரு ஹேக்கர் செயலியை உருவாக்கியிருந்தால் அவரால் சாம்சங் ஸ்மார்ட்போனை எளிதாக கட்டுப்படுத்த முடியும். நமது தகவல்களை டெலிட் செய்யமுடியும் என கூறப்படுகிறது.

    சாம்சங் எஸ் 21 அல்ட்ரா 5ஜி: ஆண்ட்ராய்டு 12
    சாம்சங் எஸ் 21 அல்ட்ரா 5ஜி: ஆண்ட்ராய்டு 11
    சாம்சங் எஸ்10+: ஆண்ட்ராய்டு 10, 
    சாம்சங் ஏ10இ: ஆண்டராய்டு 9 ஆகிய போன்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
    கடந்த இரண்டு வருடத்தில் நடந்தது போலவே இந்த வருட நிகழ்ச்சியும் ஆன்லைனில் நடைபெறவுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டுக்கான WWDC நிகழ்ச்சியை ஜூன் 6-ம் தேதி அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களில் நடந்தது போலவே ஆன்லைனில் நடைபெறவுள்ளது. 

    இந்த நிகழ்ச்சியில் ஐஓஎஸ் 16 மற்றும் வாட்ச் ஓஎஸ்9 பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேசமயம் இந்த ஆண்டு ஆப்பிள் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை கொண்ட புதிய சாதனத்தையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆப்பிள் ஐஓஎஸ் 16 மற்றும் வாட்ச் ஓஎஸ்9 அப்டேட்டில் நோட்டிஃபிகேஷன், புதிய ஆரோக்கியத்தை அளவிடும் அம்சங்கள் ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது. 

    அதேபோல மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகுமெண்டட் ரியாலிட்டி மற்றும் விர்ட்சுவல் ரியாலிட்டி ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் மென்பொருட்களும் இதில் இடம்பெறவுள்ளன. 

    இதனால் ஹெட்செட் மூலமே நாம் மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அம்சம் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடுதலாக ஆப்பிள் புதிய மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ மாடல்கள், அப்டேட் செய்யப்பட்ட மேக் மினி, 24 இன்ச் ஐமேக் ஆகியவற்றையும் இந்த வருடம் வெளியிடலாம் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    இந்த சீரிஸில் இடம்பெறும் இரண்டு போன்களிலும் ஸ்னேப்டிராகன் பிராசஸர் இடம்பெறும் என கூறப்படுகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் எஃப்21 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

    இந்த சீரிஸில் ஒப்போ எஃப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி என இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளிவரவுள்ளது.

    இந்த இரண்டு போனிலும் 6.43 இன்ச் ஃபுல் ஹெச்டி+ ஆமோலெட் டிஸ்பிளே இடம்பெறும் என கூறப்படுகிறது. ஒப்போஎஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனில் Snapdragon 680 Soc பிராசஸர், ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னேப்டிராகன் 695 Soc பிராசஸர் இடம்பெறும் என கூறப்படுகிறது.

    கேமராவை பொறுத்தவரை இந்த இரு போன்களிலும் 64 மெகாபிக்ஸல் ட்ரிப்பிள் கேமரா செட்அப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 12 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா, 2 மெகாபிக்சல் போட்ரெய்ட் கேமரா மற்றும் 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகிவை இடம்ப்றும் என கூறப்படுகிறது. இந்த இரு போன்களிலும் 4500mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இடம்பெறவுள்ளது.

    ஒப்போ ப்ரோ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஒரே மாடலான 8ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.24,640-ஆகவும், ஒப்போ எஃப்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.26,000-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் வெளியிட்டு நிகழ்ச்சியை ஒப்போ யூடியூப் சேனலில் மாலை 6 மணிக்கு காணலாம்.
    இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது இதன் விலை ரூ.79,900-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன்களை சென்னை ஃபாக்ஸான் தொழிற்சாலையில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

    அழகான டிசைன், அதிநவீன கேமரா அமைப்பு, ஏ15 பயோனிக் சிப் ஆகிய அம்சங்கள் கொண்ட ஐபோன் 13-னை இந்திய உள்ளூர் வாடிக்கையாளர்களுக்காக சென்னையில் உற்பத்தி செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 12 ஆகியவற்றை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்தது. ஐபோன் எஸ்இ மற்றும் ஐபோன் 12-ஐ இந்தியாவில் உள்ள விஸ்ட்ரான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஃபாக்ஸ்கானில் ஐபோன் 13 உற்பத்தி தொடங்கவுள்ளது. அதேசமயம் ஐபோன் 13 ப்ரோ மாடலை ஆப்பிள் சென்னையில் உற்பத்தி செய்யப்படப்போவதில்லை.

    இந்த உள்ளூர் உற்பத்தி மூலம் சுங்க வரி தவிர்க்கப்படுவதால் ஐபோன் 13 சீரிஸின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது இதன் விலை ரூ.79,900-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனில் ஸ்னேப்டிராகன் பிராசஸர் வழங்கப்பட்ட நிலையில், இந்த புதிய போனில் மீடியாடெக் வழங்கப்படவுள்ளது.
    ரியல்மி நிறுவனத்தின் ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஸ்மார்ட்போனில்  6.7-inch FHD+ OLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்படுகிறது. அதேபோல இதில் MediaTek Dimensity 8100 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனில் ஸ்னேப்டிராகன் பிராசஸர் வழங்கப்பட்ட நிலையில், இந்த புதிய போனில் மீடியாடெக் வழங்கப்படவுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை 50MP சோனி IMX766 ஷூட்டர் OIS, 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்ஸல் டெலிமேக்ரோ ஷூட்டர் ஆகியவை வழங்கப்படவுள்ளன. மேலும் இந்த கேமராவின் முன்பக்கம் 32 மெகாபிக்ஸல் செல்ஃபி சென்சார் வழங்கப்படவுள்ளது.

    பேட்டரியை பொறுத்தவரை 5000mAh பேட்டரி 150W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் வழங்கப்படவுள்ளது. 

    இந்த போனிற்கான டீசர் தற்போது ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
    இந்த ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ், அமேசான், ஜியோ டிஜிட்டல், ரிலையன்ஸ் டிஜிட்டல் , க்ரோமா ஆகிய தளங்களில் கிடைக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் டிவி 43 Y1S ப்ரோ ஸ்மார்ட்டிவி இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

    இந்த டிவியில் 4கே UHD ரெஷலியூஷன், கோடிக்கணக்கான நிறங்கள், ஒவ்வொரு பிரேமிலும் துல்லியமான காட்சிகளை வழங்கும் 10 bit கலர் டெஃப்த் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதிலுள்ள அதிநவீன காமா இன்ஜின் அம்சம், பயனர்களுக்கு ரியல் டைம் இமேஜ் குவாலிட்டியை வழங்குகிறது. மேலும் இந்த டிவி HDR10, HDR10+ மற்றும் HLG ஃபார்மட்டுகளை வழங்குகிறது.

    கேம் விளையாடுபவர்களுக்காக இந்த டிவியில் Auto Low latency mode தரப்பட்டுள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் பட்ஸ் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச்சை இந்த டிவியுடன் இணைக்கலாம்.

    இதில் உள்ள ஸ்மார்ட் ஸ்லீப் கண்ட்ரோல் அம்சம், நாம் தூங்கிவிட்டால் தானாக டிவி அணைந்துவிடும்படி செய்கிறது.

    இந்த டிவியில் சினிமா ஒலியை கேட்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குவதற்காக டால்பி ஆடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 24W அவுட்புட் தரும் 2 ஃபுல்ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த டிவியின் விலை இந்தியாவில் ரூ.29,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ், அமேசான், ஜியோ டிஜிட்டல், ரிலையன்ஸ் டிஜிட்டல் , க்ரோமா ஆகிய தளங்களில் கிடைக்கிறது.
    ×