என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இந்த போனின் இந்திய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
    iQoo Neo 6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது.

    இதில் 6.62 இன்ச் ஃபுல் ஹெச்டி+, ஆமோலெட் டிஸ்பிளே, 20:9 ரேட்சியோ, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் octa core snapdragon 8 Gen 1 Soc பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த போனில் 64 மேகாபிக்சல் ISOCELL Plus GW1P பிரைமரி சென்சார், f/1.89 லென்ஸ், OIS உடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஷூட்டர், 2 மெகாபிக்ஸல் மோனோ குரோம் லென்ஸ் ஆகியவையும் தரப்பட்டுள்ளது.

    மேலும் இதில் 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா f/2.0 லென்ஸுடன் தரப்பட்டுள்ளது.

    இந்த போனின் 8ஜிபி+128ஜிபி மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.33,500-ஆகவும், 8ஜிபி+256ஜிபி மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.35,900-ஆகவும் 12ஜிபி+256ஜிபி வேரியண்டின் விலை ரூ.39,400-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த போனின் இந்திய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
    அமேசான், குரோமா, விஜய் சேல்ஸ் ஆகிய இணையதளங்களில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகிய போன்களுக்கு இந்தியாவில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி இந்தியாவில் ஐபோன் 13 விலை ரூ.79,900-ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விற்பனையில் இந்த போனின் விலை கிட்டத்தட்ட ரூ.6000 குறைக்கப்பட்டு ரூ.73,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    அமேசான், குரோமா, விஜய் சேல்ஸ் ஆகிய இணையதளங்களில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத்தவிர ஹெச்.டி.எஃப்.சி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக் அல்லது உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபோன் 13 மினி ஸ்மார்ட்போன் ரூ.69,900 விலையில் தொடங்குகிறது. இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.64,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் குரோமாவில் இந்த போனை வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக்கும் (HDFC கார்ட்) அமேசானில் எஸ்பிஐ கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கேமராவை பொறுத்தவரை இதில் 13 மெகாபிக்ஸல் மெயின் கேமரா, 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, 8 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
    விவோ நிறுவனத்தின் Y15s ஸ்மார்ட்போன் இரண்டு மாதங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனுக்கு தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போன் 3ஜிபி ரேம்+ 3ஜிபி மெமரி என்ற ஒரே வேரியண்டில் வருகிறது. இந்த போன் ரூ.10,990க்கு விற்பனையாகி வந்த நிலையில் ரூ.500 விலைகுறைப்பு செய்யப்பட்டு ரூ.10,490-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    இதில் 6.51-inch water-drop notch display,HD+ resolution of 720×1600 pixel, 60Hz சப்போர்ட் செய்யும் IPS LCD ஸ்கிரீன் ஆகியவை தரப்பட்டுள்ளது.

    இந்த போன் MediaTek Helio P35 SoC பிராசஸரில் இயங்குகிறது.

    கேமராவை பொறுத்தவரை இதில் 13 மெகாபிக்ஸல் மெயின் கேமரா, 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, 8 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

    இந்த போனில் 5000 mAh பேட்டரி, 10W சார்ஜிங் தொழில்நுட்பமும் தரப்பட்டுள்ளது. 
    இந்தியா, மலேசியா உள்ள நாடுகளில் உள்ள குழந்தைகள் ஆன்லைன் பயமுறுத்தல்களை சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
    உலக அளவில் 10-ல் 6 குழந்தைகள் சைபர் தாக்குதலுக்கு ஆளாவதாக சர்ப்ஷார்க் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள குழந்தைகள் 8 முதல் 12 வயதுடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் தாக்குதல் கடந்த 2020ம் ஆண்டு 144 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா ஊரடங்கு காரணமாக குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது தான் என கூறப்படுகிறது.

    2-ல் ஒரு குழந்தைகள் சைபர் வன்முறைக்கு ஆளாகிறார்கள், மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பிஷ்ஷிங் அல்லது ஹாக்கிங்கிற்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1.2 கோடி குழந்தைகள் கடந்த மூன்று வருடங்களில் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    குழந்தைகளுக்கு இணையம் குறித்த கல்வி அறிவை தரவேண்டிய கட்டாயத்தில் சமூகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிக வருமானம் வரும் நாடுகளை விட ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள குழந்தைகள் ஆன்லைனில் வரும் பாதிப்புகளை சமாளிக்கக்கூடியதாக இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

    குழந்தைகள் மீதான சைபர் தாக்குதல் மூலம் ரூ.5.03 கோடி அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா, மலேசியா உள்ள நாடுகளில் உள்ள குழந்தைகள் ஆன்லைன் பயமுறுத்தல்களை சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் உள்ள தானியங்கி சுத்தம் செய்யும் அம்சம் ஏசியை அணைத்தவுடன் 30 நொடிகள் இயங்கி ஏசியை தானாகவே சுத்தம் செய்யும்.
    ரியல்மி நிறுவனம் புதிய டெக்லைஃப் கன்வெர்ட்டிபிள் ஏசியை அறிமுகம் செய்துள்ளது. 

    இந்த ஏசியில் இன்வெர்டர் கம்ப்ரஸர் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இதின் கம்ப்ரெசரை வேகமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துகொள்ளும். இதன்மூலம் சரியான அளவில் குளிர்ச்சியை வழ்க்ஷங்கும்.

    ஒரு அறையில் எத்தனை பேர் இருக்கிறோமோ அதற்கு ஏற்றாற்போல குளிர்ச்சியை மாற்றும் அம்சம் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ஏசியில் ட்ரை, எக்கோ மற்றும் 3 ஸ்லீப் மோட்கள் இடம்பெற்றுள்ளன. இது 55 டிகிரி வெப்பத்திலும் குளிர்ச்சியை தரவல்லது.

    இதில் உள்ள தானியங்கி சுத்தம் செய்யும் அம்சம் ஏசியை அணைத்தவுடன் 30 நொடிகள் இயங்கி ஏசியை தானாகவே சுத்தம் செய்யும். மேலும் ஏசியில் உருவாகும் நீரை ஆவியாக்கி ஏசியின் உள்ளே ஈரப்பதம், தூசு ஆகியவை தங்காமல் பாதுகாக்கும். இதில் ஃப்ளூ ஃபின் தொழில்நுட்பமும் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் நீர்த்துளி, உப்பு, ஆசிட்டில் இருந்து காயிலை பாதுகாக்கிறது.

    மின்சாரத்தை சேமிக்கும் அம்சமும் இந்த ஏசியில் இடம்பெற்றுள்ளது.

    இந்த ஏசியின் 1 டன் மாடல் விலை ரூ.27,790-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1.5 டன் மாடல் விலை ரூ.30,999-ஆகவும், 5 ஸ்டார் 1.5 டன் மாடல் விலை ரூ.33,490-ஆகவும் நிர்ணயம் செய்யப்ப்பட்டுள்ளது. இந்த ஏசியை ஃபிளிப்கார்ட் மூலம் வாங்கலாம்.
    இந்த ஹெட்செட் கடந்த 2015-ம் ஆண்டு முதலே உருவாக்கப்பட்டு வருகிறது.
    மெய்நிகர் தொழில்நுட்பம் (Virtual Reality), மிகைப்படுத்தப்பட்ட மெய்மை (Augumented Reality) ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் ஆப்பிளின் மிக்ஸுடு ரியாலிட்டி ஹெட்செட் அடுத்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என ஆப்பிள் அறிவித்திருந்த நிலையில் தற்போது அறிமுகம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக 10 லட்சம் முதல் 15 லட்சம் அளவிலான இந்த ஹெட்செட்களை ஆப்பிள் வெளியிடுவதற்கு ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சிப் ஆப்பிள் நிறுவனத்தினாலேயே தயாரிக்கப்படவுள்ளது.

    இதில் 10 சென்சார்கள் இடம்பெறும் என்றும், இதன் விலை இந்திய மதிப்பில் ரு.1.52 லட்சமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெட்செட் கடந்த 2015-ம் ஆண்டு முதலே உருவாக்கப்பட்டு வருகிறது.

    அறிமுக விலையாக இந்த போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டு 8ஜிபி/128ஜிபி வேரியண்ட் ரூ.44,999க்கும், 12ஜிபி/256ஜிபி வேரியண்ட் ரூ.52,999க்கும் கிடைக்கும்.
    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி ஜிடி2 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த போனில் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட், Bio-polymer-ல் தயாரிக்கப்பட்ட பேக் பேனல், 120Hz ரெஃப்ரெஷ் ரெட்டுடன் 2கே ரெஷலியூஷன் கொண்ட டிஸ்பிளே, LTPO2 AMOLED பேனல், 1Hz ரெஃப்ரெஷ் ரேட் வரை  செல்லக்கூடிஉய டிஸ்பிளே ஆகியவை தரப்பட்டுள்ளன.

    கேமராவை பொறுத்தவரை இதில் IMX766 சோனி சென்சாருடன் கூடிய 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 150 டிகிரி ஃபீல்ட் ஆஃப் விஷன் கொண்ட 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 40X மைக்ரோ லென்ஸ் அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. 

    5000mAh பேட்டரி, 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ள இந்த போனின் 8ஜிபி/128ஜிபி வேரியண்டின் விலை ரூ.49,999 ஆகும். 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.57,999-ஆகும்.

    அறிமுக விலையாக  இந்த போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டு 8ஜிபி/128ஜிபி வேரியண்ட் ரூ.44,999க்கும், 12ஜிபி/256ஜிபி வேரியண்ட் ரூ.52,999க்கும் கிடைக்கும்.
    இதில் நீரில் இருந்து பாதுகாப்பு தரும் அம்சம், டால்பி அட்மாஸ் சப்போர்ட் செய்யும் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி52 ஐரோப்பிய மார்க்கெட்டில் வெளியாகியுள்ளது.

    இந்த போனில் 6.6 இன்ச் OLED டிஸ்பிளே, 1080X2400 பிக்ஸல், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோவுடன் வருகிறது. 

    இந்த போன் Qualcomm Snapdragon 680 சிப்செட்டில் இயங்கும் என கூறப்படுகிறது. இதில் தரப்பட்டுள்ள MyUX மூலம் நமது பிடித்த லுக்கில் செட்டிங்ஸை வைத்துகொள்ளலாம்.

    இந்த கேமராவில் 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா இடம்பெறுகிறது.

    மேலும் இதில் 5000mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. இதில் நீரில் இருந்து பாதுகாப்பு தரும் அம்சம், டால்பி அட்மாஸ் சப்போர்ட் செய்யும் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    இந்த போன் 4ஜிபி+128 ஜிபி வேரியண்ட் மற்றும் 6ஜிபி+128 ஜிபி வேரியண்டில் வெளியாகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.20,600-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த போனின் இந்திய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
    தற்போது பீட்டா வெர்ஷன் 2.22.9.8 வாட்ஸ்ஆப்பில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இந்த செயலியில் வீடியோ கால், ஆடியோ கால், வாய்ஸ் மெசேஜ் என ஏகப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    வாட்ஸ்ஆப்பில் வாட்ஸ்ஆப் பிசினஸ் என்ற செயலியும் தனியாக இருக்கிறது. வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த செயலி பல அம்சங்களை வழங்குகிறது. இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் தற்போது புதிய அம்சமும் இடம்பெறுகிறது.

    இதன்படி வாட்ஸ்ஆப் ப்சினஸ் பயனர்கள் தங்களுடைய ஷார்ட் லிங்கை வாடிக்கையாளர்களின் செயலியில் பகிர முடியும். இதன்மூலம் ஒருவரது வணிகம் குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

    இதற்கு முன் க்யூஆர் கோட் மட்டுமே ஷேர் செய்யும் வகையில் இருந்த நிலையில் அதற்கு பதில் ஷேர் ஐகான் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருவருடைய போன் நம்பர் இல்லாமலேயே அவரது பிஸ்னஸ் அக்கவுண்டை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பீட்டா வெர்ஷன் 2.22.9.8 வாட்ஸ்ஆப்பில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த இயர்போனின் விலை ரூ.3999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக விலையாக ரூ.3499-க்கு இந்த இயர்போன் கிடைக்கும்.
    ரியல்மி நிறுவனத்தின் பட்ஸ் ஏர் 3 TWS இயர்போன்ஸ் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதில் 10 mm டைனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் இந்த இயர்போனில் TUV-Rhienland சான்றிதழ் வழங்கிய நாய்ஸ் கேன்சலேஷன் வசதி தரப்பட்டுள்ளது. இது 2 மைக்ரோஃபோன்கள் மற்றும் டிரான்ஸ்பரன்ஸி மோடுடன் 42dB வரை இரைச்சலை குறைக்கக்கூடியது.

    மேலும் ரியல்மி பட்ஸ் ஏர் 3 88ms குறைந்த லேட்டன்ஸியை கேம் மோடுடன் வழங்குகிறது. இது முந்தைய ஜெனரேஷனை விட 35 சதவீதம் குறைந்த லேட்டன்ஸி ஆகும்.

    இந்த இயர்போனில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி v5.2 வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 சாதனங்களை இந்த இயர்போனில் இணைக்கமுடியும். இதில் கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது.

    இந்த இயர்போன் IPX5 ரேட்டர்ட் வியர்வை மற்றும் தண்ணீர் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட்டுள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் டோட்டல் பிளேபேக் வழங்கப்படும். 10 நிமிட சார்ஜில் 100 நிமிடம் பிளேபேக் டைம்மை பெற முடியும்.

    இந்த இயர்போனின் விலை ரூ.3999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக விலையாக ரூ.3499-க்கு இந்த இயர்போன் கிடைக்கும்.

    ஜியோமி 12 ப்ரோ கடந்த மார்ச் மாதம் உலகம் அளவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது.
    ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 27-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போனில் Qualcomm Snapdragon 8 Gen 1 chipset இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் LTPO AMOLED டிஸ்பிளே, 2கே டிஸ்பிளே ரெஷலியூஷன், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W ஒயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் ஒயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை இதில் இடம் பெறும் என கூறப்படுகிறது.

    கேமராவை பொறுத்தவரை இதில் 50 மெகாபிக்ஸல்களுடன் வைட் ஆங்கிள் கேமரா, அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, டெலிபோட்டோ லென்ஸ் இடம்பெறும் என கூறப்படுகிறது.

    ஜியோமி 12 ப்ரோ கடந்த மார்ச் மாதம் உலகம் அளவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது.
    இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்றும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
    ரியல்மி நிறுவனத்தின் புக் ப்ரைம் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த லேப்டாப்பில் 2கே Full Vision டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது 11th Gen Intel Core i5-11320H பிராசஸர், Intel Iris Xe Graphics, டூயல் ஃபேன் லிக்விட் கூலிங் சிஸ்டம் ஆகியவை தரப்பட்டுள்ளன.

    மேலும் இதில் பேக் லிட் கீபோர்ட் டச் பேட்டுடன் வழங்கப்படுகிறது. டிடிஎஸ் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், WiFi 6, Thunderbolt fort 4 உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்றும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த லேப்டாப்பின் 16ஜிபி+521 ஜிபி மாடல் ரூ.64,999-க்கு கிடைக்கிறது. வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த லேப்டாப் அறிமுக விலையாக ரூ.57,999க்கு விற்பனையாகவுள்ளது. மேலும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×