என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், இதே நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்வதாக தகவல் வெளியிட்டு உள்ளது.
புதிய ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், 150W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் நிறைந்த விலை உயர்ந்த மாடல் ஆகும். ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.

புதிய நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன் விவரங்களை ஒன்பிளஸ் நிறுவனம் புது டீசரில் தற்போது வெளியிட்டு இருக்கிறது. டீசரின்படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தோற்றத்தில் இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் மாடல்களை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் என தெரிகிறது.
ஆனால், இந்த மாடல் பார்க்க சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 10R போன்றே இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
அதன்படி புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் பிளாஸ்டிக் பாடி மற்றும் பிளாஸ்டிக் ஃபிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த மாடலில் அலர்ட் ஸ்லைடர், ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன், மோட்டோ G52 இந்தியாவில் இந்த மாதமே அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 9 5ஜி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ G52 ஸ்மார்ட்போனினை ஏற்கனவே ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்து விட்டது.

மோட்டோ G52 சிறப்பம்சங்கள்:
- 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4GB/ 6GB ரேம்
- 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 50MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு / டெப்த் சென்சார்
- 2MP மேக்ரோ கேமரா
- 16MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
- 33W ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஓ.எஸ். அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
சாம்சங் நிறுவனம் தனது பழைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 12 சார்ந்த அப்டேட் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் கேலக்ஸி M62 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 4.1 அப்டேட் வழங்கப்பட்டது. தற்போது சாம்சங் கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சாம்-மொபைல்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 4.1 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், முதற்கட்டமாக இந்த அப்டேட் தாய்லாந்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் மற்ற சந்தைகளிலும் இந்த அப்டேட் வெளியிடப்படும் என தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி A32 4ஜி மாடலுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. தாய்லாந்தில் தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் அப்டேட் A326BXXU4BVC8 எனும் firmware வெர்ஷனை கொண்டிருக்கிறது. ஓ.எஸ். அப்டேட் உடன் இந்த ஸ்மார்ட்போனிற்கு மார்ச் மாதத்திற்கான செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது வழங்கப்பட்டு இருக்கும் செக்யூரிட்டி பேட்ச் சாம்சங் மற்றும் கூகுள் மென்பொருள்களில் கண்டறியப்பட்டு இருக்கும் சுமார் 50-க்கும் அதிக மென்பொருள் பிழைகளை சரி செய்துள்ளது. மேலும் சாதனத்தின் பெர்பார்மன்ஸ் அப்டேட், டிவைஸ் ஸ்டேபிலிட்டி உள்ளிட்டவை புது அப்டேட் மூலம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 8MP செல்ஃபி கேமரா, யுனிசாக் T610 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பின்புறம் மேஜிக் டிரையல்களின் பேட்டர்ன், 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 சிறப்பம்சங்கள்:
- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ IPS LCD ஸ்கிரீன்
- பாண்டா கிங் கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர்
- மாலி-G52 GPU
- 4GB LPDDR4x ரேம்
- 64GB (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் XOS 7.6
- 13MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
- 2MP டெப்த் கேமரா, f/2.4
- 8MP செல்ஃபி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், DTS ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போன் அரோரா கிரீன், போலார் பிளாக் மற்றும் சன்செட் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது. இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போன் விற்பனை ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்குகிறது. இதன் அறிமுக விலை ரூ. 8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஐபோன் மாடலின் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஐபோன் 15 மாடலில் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் இதவரை தனது சாதனங்கள் எதிலும் வழங்கியது இல்லை. எனினும், ஆப்பிளுக்கு போட்டியாளராக விளங்கி வரும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களிது ஸ்மார்ட்போன் மாடல்களில் ஏற்கனவே இதுபோன்ற அம்சத்தை வழங்கி இருக்கின்றன.
எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஆப்பிள் நிறுவனம் தென் கொரிய நிறுவனம் ஒன்றை தனது வினியகஸ்தராக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 மாடல்களில் இந்த பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஜாஹ்வா எலெக்டிரானிக்ஸ் எனும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் மற்றும் ஜாஹ்வா எலெக்டிரானிக்ஸ் நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தத்தின் படி ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு தேவையான பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ்களை ஜாஹ்வா எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க இருக்கிறது.
தென் கொரியாவை சேர்ந்த லென்ஸ் உற்பத்தியாளர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,188.9 கோடி முதலீட்டில் புது உற்பத்தி ஆலையை தென் கொரியாவின் குமி பகுதியில் கட்டமைக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர். இதே நிறுவனம் சாம்சங் நிறுவனத்திற்கு கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்களுக்கான OIS ஆக்டுயேட்டர்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன.
தற்போது புது ஆலை கட்டமைக்க இருப்பதை அடுத்து ஜாஹ்வா நிறுவனம் பெரும் முதலீடுகளை ஈட்டி இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. புது ஆலையில் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் வாத வாக்கில் துவங்க இருக்கிறது.
போக்கோ நிறுவனம் தனது புதிய கேமிங் போன் மாடலின் வெளியீடு பற்றி புதிய தகவலை வெளியிட்டு உள்ளது.
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ F4 GT ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கேமிங் போன் ஏப்ரல் 26 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என போக்கோ அறிவித்து உள்ளது.
இது ரெட்மி K50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என தெரிகிறது. இதே ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. எனினும், சர்வதேச சந்தையில் இந்த மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் அம்சங்களில் பெரும்பாலும் அதிக மாற்றங்கள் செய்யப்படாது.

போக்கோ F4 GT எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + 10-பிட் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
- அட்ரினோ next-gen GPU
- 8GB LPPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPPDDR5 ரேம், 128GB / 256GB (UFS 3.1) மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
- 64MP பிரைமரி கேமரா, f/1.65, LED ஃபிளாஷ்
- 8MP 119° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 2MP டெலிமேக்ரோ கேமரா, f/2.4
- 20MP செல்ஃபி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டால்பி அட்மோஸ்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 4700mAh பேட்டரி
- 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய போக்கோ F4 GT ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி அறிமுக நிகழ்வு மாலை 5.30 மணிக்கு துவங்க இருக்கிறது. போக்கோ F4 GT ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யப்படும் என தெரிகிறது. இந்த நிகழ்வில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி புதிய AIoT சாதனங்களும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
டாடா பிளே சேவையில் புதிதாக பின்ஜ் ஸ்டார்டர் பேக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா ஸ்கையில் இருந்து தற்போது டாடா பிளே என பெயர் மாற்றப்பட்டு இருக்கும் டி.டி.ஹெச். சேவை வழங்கும் நிறுவனம் புதிதாக பின்ஜ் ஸ்டார்டர் பேக் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. இது குறைந்த விலையில் OTT பலன்களை வழங்கும் சலுகை ஆகும்.
டாடா பிளே பின்ஜ் ஸ்டார்டர் பேக் இரோஸ் நௌ, ஷீமாரோமி, ஜீ5 மற்றும் ஹங்காமா என நான்கு OTT தளங்களுக்கான சந்தாவை வழங்குகிறது. இதனை ஆக்டிவேட் செய்ததும், பயனர்கள் OTT தரவுகளை தங்களின் சாதனங்களில் உள்ள செயலியில் பார்த்து ரசிக்க முடியும்.

மிகவும் குறைந்த விலை சலுகை என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் விலை ரூ. 49 ஆகும். இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். டாடா பிளே பின்ஜ் ஸ்டார்டர் பேக் தவிர ரூ. 149 மற்றும் ரூ. 299 விலைகளில் பேசிக் மற்றும் பிரீமியம் சலுகைகளை டாடா பிளே வழங்கி வருகிறது.
டாடா பிளே பின்ஜ் ஸ்டார்டர் பேக் சலுகையில் பயனர்கள் தரவுகளை தொலைகாட்சி மற்றும் இணையதளத்தில் ஸ்டிரீம் செய்ய முடியாது. குறிப்பிட்ட OTT தளங்களின் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க பயனர்கள் டாடா பிளே பின்ஜ் செயலியை சம்பந்தப்பட்ட சாதனங்களில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். முன்னதாக டாடா பிளே பின்ஜ் சலுகை டிரீம் டிடிஹெச் என அழைக்கப்பட்டு வந்தது.
மும்பை மெட்ரோ ஒன் நிறுவனம் இ டிக்கெட் சேவையை வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம் செய்து அசத்தி இருக்கிறது.
மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மும்பை நகரில் வெர்சோவா-அந்தேரி-கட்கோப்பர் வழியில் மெட்ரோ ரெயில் சேவையை இயக்கி வருகிறது. மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் இ டிக்கெட் ஆன் வாட்ஸ்அப் எனும் வசதியை அறிமுகம் செய்து உள்ளது.
மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS) சேவையில் வாட்ஸ்அப் செயலியில் இ டிக்கெட் வழங்கப்படுவது உலகிலேயே இது தான் முதல் முறை ஆகும். தற்போது டிக்கெட் கவுண்ட்டர்களில் கிடைக்கும் பேப்பர் கியூ.ஆர். டிக்கெட் சேவையின் நீட்சி ஆகும். இந்த சேவையில் இணைய பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து `Hi' என எழுதி 9670008889 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

இது மட்டும் இன்றி மும்பை மெட்ரோ ஆன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் காம்போ கார்டுகள், மொபைல் கியூ.ஆர். டிக்கெட்கள் மற்றும் லாயல்டி ப்ரோகிராம் என பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகம் செய்து வருவதாக தெரிவித்து உள்ளது.
முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனது பேமண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீட்டிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த எண்ணிக்கை 40 மில்லியன் என கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது இதனை 100 மில்லியனாக அதிகப்படுத்திக் கொள்ள தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் அனுமதி வழங்கி உள்ளது.
ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Z சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.
பல்வேறு டீசர்களை தொடர்ந்து ஐகூ நிறுவனம் தனது Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இந்த பிராசஸர் கொண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐகூ நிறுவனத்தின் இரண்டாவது Z சீரிஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும்.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் அதிவேகமான ஸ்மார்ட்போன் மாடலாக ஐகூ Z6 ப்ரோ 5ஜி மாடல் இருக்கும் என ஐகூ நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் LPDDR5 ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படலாம். இத்தடன் புதிய ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 66W ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜ் வசதி வழங்கப்பட இருக்கிறது.

முன்னதாக ஐகூ நிறுவனம் அறிமுகம் செய்த ஐகூ Z5 ஸ்மார்ட்போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருந்தது. தற்போதைய டீசரின் படி ஐகூ Z6 ப்ரோ 5ஜி மாடலில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும்.
இத்துடன் ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD பிளஸ் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், 5000mAh பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிவித்த ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ போட்டியின் வெற்றியாளர்கள் யார் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ (Shot on iPhone Macro) போட்டியை சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இந்த போட்டியில் கலந்து கொள்வோர் தங்களின் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் மேக்ரோ மோட் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமர்பிக்க வேண்டும்.
ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் அல்ட்ரா வைடு லென்ஸ் மூலம் மேக்ரோ புகைப்படங்களை எடுக்கும் வசதியை ஆப்பிள் நிறுவனம் வழங்கி இருக்கிறது. இந்த அம்சம் ஐபோன் 13 மினி, ஐபோன் 13 போன்ற மாடல்களில் வழங்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் சமர்பித்த புகைப்படங்களில் சிறப்பான புகைப்படங்களை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்து வெற்றியாளர்களை அறிவிக்கும். அந்த வகையில் தற்போது ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ போட்டியின் வெற்றியாளர்கள் விவரங்களை ஆப்பிள் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி இறுதி சுற்றுக்கு பத்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சீனா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். வெற்றியாளர்கள் எடுத்த புகைப்படங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்படும். இது மட்டும் இன்றி ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா அக்கவுண்ட், சில நகரங்களின் விளம்பர பதாகை உள்ளிட்டவைகளில் பதிவிடப்படும்.

சமீபத்திய ஷாட் ஆன் ஐபோன் மேக்ரோ வெற்றியாளர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். கோலாப்பூர் பகுதியில் வசிக்கும் பிரஜ்வால் சவுக்லே ஐபோன் 13 ப்ரோ மாடல் கொண்டு தான் எடுத்த புகைப்படத்தினை ஆர்ட் இன் நேச்சர் எனும் தலைப்பில் சமர்பித்தார். புகைப்படத்தில் இவர் சிலந்தி வலையில் தண்ணீர் துளிகளை மிக தெளிவாக படம்பிடித்து இருக்கிறார்.
இவரின் புகைப்படத்தை ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வுக்குழுவில் இடம்பெற்று இருந்தவர்களில் ஒருவரான ஆரெம் டூப்ளெசிஸ் வெகுவாக பாராட்டி இருக்கிறார். "எளிமை, கிராபிக் மற்றும் அழகிய புகைப்படத்திற்கு இது உண்மையான சான்று. சிலந்தி வலை போன்றே மிக தத்ரூபமாக தண்ணீர் துளிகள் காட்சியளிக்கின்றன. எளிமையாக கூற வேண்டுமெனில் இது அட்டகாசமாக உள்ளது," என தெரிவித்து இருக்கிறார்.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்தியாவை சேர்ந்த ஆடியோ சாதனங்கள் உற்பத்தியாளரான போட், புதிதாக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. போட் ஏர்டோப்ஸ் 500 ANC என அழைக்கப்படும் புது இயர்பட்ஸ்-இல் 35 டி.பி. விரையிலான ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆம்பியண்ட் மோட், போட் நிறுவனத்தின் பிரத்யேக பீஸ்ட் (Bionic Engine And Sonic Technology) தொழில்நுட்பம், லோ லேடென்சி ஆடியோ அனுபவம், உடனடி வேக் அன் பேர் தொழில்நுட்பம், ப்ளூடூத் 5.2 மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன.

போட் ஏர்டோப்ஸ் 500 ANC சிறப்பம்சங்கள்:
- ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம்
- ஆம்பியண்ட் மோட்
- 8mm டிரைவர்கள்
- ENx என்விரான்மெண்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
- இன்-இயர் டிடெக்ஷன்
- லோ லேடன்சி பிளேபேக் வழங்கும் பீஸ்ட் மோட்
- IWP டெக் (எளிதில் இயர்பட்களை பவர் ஆன் செய்ய உதவும்)
- IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டண்ட்
- டச் கண்ட்ரோல்
- 150mAh பேட்டரி, ASAP சார்ஜிங்
- ஐந்து நிமிட சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பிளேடைம் கிடைக்கும்
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய போட் ஏர்டோப்ஸ் 500 ANC மாடல் எலைட் புளூ, டிரான்குயில் வைட் மற்றும் ரிச் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. விற்பனை அமேசான் தளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
2020-ம் ஆண்டு வாட்ஸ் ஆப் பே இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட போது வெறும் 2 கோடி பயனர்களுக்கு மட்டுமே சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப் பணம் பரிவர்த்தனை சேவைகளையும் வழங்கி வருகிறது.
இந்தியாவில் முன்னணி யூபிஐ சேவைகளில் ஒன்றாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இருப்பினும் குறைந்த அளவிலான பயனர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த வாட்ஸ்ஆப்பை 10 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் என்.பி.சி.ஐ அமைப்பு விரிவு செய்துள்ளது.
ஏற்கனவே 4 கோடி பயனர்களுக்கு மட்டுமே வாட்ஸ்ஆப் பே செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது, தற்போது கூடுதலாக 6 கோடி பயனர்களுக்கு விரிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு வாட்ஸ் ஆப் பே இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட போது வெறும் 2 கோடி பயனர்களுக்கு மட்டுமே சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 4 கோடியாக-ஆக உயர்ந்த நிலையில் தற்போது 10 கோடியாக அதிகரித்துள்ளது. விரைவில் 50 கோடியாக மாற்றும் அளவிற்கு வாட்ஸ்ஆப் சேவையை விரிவுப்படுத்துவோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.






