search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPhone 15"

    • ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி.
    • ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும்.

    ஆப்பிள் ஐபோன் 15 வாங்க நினைக்கும் ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள்? அப்படியெனில் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். ஐபோன் 15 வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் வங்கி சார்ந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    புதிய ஐபோன் 15 வாங்கிய 60 நாட்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் ஆக்டிவேட் செய்தால் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 10-ம் தேதி துவங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர் ஐபோனினை அமேசான் வலைதளத்தில் இருந்து வாங்கி இருந்தால், இந்த சலுகை நீட்டிக்கப்படும்.

    அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆக்டிவேட் செய்ததும், ஏதேனும் ஒரு போஸ்ட்பெயிட் திட்டத்தில் ரிசார்ஜ் செய்ய வேண்டும். பிறகு ரூ. 200 மதிப்புள்ள பத்து கூப்பன்கள் பயனர்களுக்கு வழங்கப்படும். இதற்கான தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும். இந்த சலுகை ஏர்டெல் கார்ப்பரேட் சிம் கார்டுகளுக்கு பொருந்தாதது.

    ஆனால், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் 60 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்யும் போது பயனர் மேற்கொள்ளும் ரிசார்ஜ் ஒன்றுக்கு ஒரு கூப்பன் வரை பயன்படுத்த முடியும். இதுதவிர பயனர்கள் விதிகளை பின்பற்றும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான கேஷ்பேக்-ஐ அமேசானிடம் இருந்து பெற முடியும். 

    • பயனர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு தீபாவளி விற்பனையின் கீழ் ஐபோன் 14, ஐபோன் 15, மேக்புக் ஏர் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன், ஐபேட், மேக்புக் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகைகள் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    தீபாவளி சலுகையின் கீழ் பயனர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் பி.கே.சி. மற்றும் ஆப்பிள் சகெட் ரிடெயில் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

     

    ஆப்பிள் தீபாவளி சலுகைகள்:

    ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு கொண்டு தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் சாதனங்களை வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கிகளில், மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    அக்டோபர் 15-ம் தேதி துவங்கி நவம்பர் 14-ம் தேதி வரை ஆப்பிள் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது. ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஏர்பாட்ஸ் ப்ரோ (2nd Gen) உள்ளிட்ட சாதனங்களுக்கு மட்டும் நவம்பர் 7-ம் தேதி வரை மட்டுமே தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

    ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு ரூ. 6 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 15 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன் 15 மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 4 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் விலையை குறைத்தது. அதன்படி இந்த மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஐபோன் 13 மற்றும் ஐபோன் SE மாடல்களுக்கு முறையே ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ. 2 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 13 விலை ரூ. 56 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    மேக்புக்:

    மேக்புக் ஏர் (M2) மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இது 13-இன்ச் மற்றும் 15-இன்ச் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. 13-இன்ச் மேக்புக் ஏர் (M2) மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    மேக்புக் ஏர் (M1) மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால், இதன் விலை ரூ. 99 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதே போன்று மேக் ஸ்டூடியோ மாடலுக்கு ரூ. 10 ஆயரமும், 24-இன்ச் ஐமேக் மற்றும் மேக் மினி மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஐபேட்:

    11-இன்ச் ஐபேட் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே போன்று 10th Gen மற்றும் 9th Gen ஐபேட் மாடல்களுக்கு முறையே ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபேட் மினி மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 37 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஆப்பிள் வாட்ச் SE மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஹோம்பாட் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அறிமுகம்.
    • புதிய ஆப்பிள் சாதனங்கள் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிப்பு.

    ஆப்பிள் நிறுவனம் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. புதிய ஆப்பிள் சாதனங்களில் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலில் ஆப்பிள் எஸ்9 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள டபுள் டாப் அம்சம் கொண்டு அழைப்புகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலின் பல்வேறு அம்சங்களை டபுள் டேப் மூலம் இயக்கிவிட முடியும். புதிய சீரிஸ் 9 மாடலை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.

     

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இந்திய விலை:

    புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அலுமினியம் மாடலின் இந்திய விலை ரூ. 41 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெர்ஷனின் இந்திய விலை ரூ. 70 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இந்திய முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்க இருக்கிறது. விற்பனை செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விற்பனையும் செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது.

     

    ஐபோன் 15 சீரிஸ் இந்திய விலை:

    ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 900 என்று துவங்குகின்றன. இந்த விலை இரு மாடல்களின் 128 ஜி.பி. மெமரி கொண்ட வெர்ஷனுக்கானது ஆகும்.

    ஐபோன் 15 (256 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 (512 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 15 பிளஸ் (256 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 பிளஸ் (512 ஜி.பி. மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் இந்திய விலை:

    ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இந்த விலை இவற்றின் 128 ஜி.பி. மாடலுக்கானது ஆகும்.

    ஐபோன் 15 ப்ரோ (256 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ (512 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ (1 டி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (256 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (512 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1 டி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. இவற்றின் விற்பனை செப்டம்பர் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.

    • ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது.
    • ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் 48MP பிரைமரி கேமரா சென்சார் உள்ளது.

    ஆப்பிள் "வொண்டர்லஸ்ட்" (Wonderlust) நிகழ்வில் இந்த ஆண்டிற்கான ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் முறையே 6.1 மற்றும் 6.7 இன்ச் டைனமிக் ஐலேண்ட் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபோன் 15 சீரிசில் மேம்பட்ட புதிய கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 48MP பிரைமரி கேமரா, குவாட் பிக்சல் சென்சார், 12MP டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கேமரா சென்சார்கள் நெக்ஸ்ட் ஜெனரேஷன் போர்டிரெயிட் ரக புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. இத்துடன் ட்ரூ டெப்த் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     

    ஐபோன் 15 மாடலில் ஆப்பிள் சிலிகான் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் புகைப்படங்களை எடுக்க பிரத்யேக நியூரல் என்ஜின் உள்ளது. இத்துடன் 5-கோர் ஜி.பி.யு., 6-கோர் சி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 15 மாடல் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு அல்ட்ரா வைடு-பேண்ட் சிப்செட் உள்ளது. இத்துடன் 5ஜி, அழைப்புகளின் போது உங்களின் குரல் தெளிவாக கேட்க செய்யும் மெஷின் லெர்னிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன் 15 மாடல்களுடன் செயற்கைக்கோள் சார்ந்த கனெக்டிவிட்டி அம்சம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன் 15 மாடலின் விலை 799 டாலர்கள் என்றும் ஐபோன் 15 பிளஸ் மாடலின் விலை 899 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ×