search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்ட ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகம்
    X

    யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்ட ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகம்

    • ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது.
    • ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் 48MP பிரைமரி கேமரா சென்சார் உள்ளது.

    ஆப்பிள் "வொண்டர்லஸ்ட்" (Wonderlust) நிகழ்வில் இந்த ஆண்டிற்கான ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் முறையே 6.1 மற்றும் 6.7 இன்ச் டைனமிக் ஐலேண்ட் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபோன் 15 சீரிசில் மேம்பட்ட புதிய கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 48MP பிரைமரி கேமரா, குவாட் பிக்சல் சென்சார், 12MP டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கேமரா சென்சார்கள் நெக்ஸ்ட் ஜெனரேஷன் போர்டிரெயிட் ரக புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. இத்துடன் ட்ரூ டெப்த் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    ஐபோன் 15 மாடலில் ஆப்பிள் சிலிகான் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் புகைப்படங்களை எடுக்க பிரத்யேக நியூரல் என்ஜின் உள்ளது. இத்துடன் 5-கோர் ஜி.பி.யு., 6-கோர் சி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 15 மாடல் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு அல்ட்ரா வைடு-பேண்ட் சிப்செட் உள்ளது. இத்துடன் 5ஜி, அழைப்புகளின் போது உங்களின் குரல் தெளிவாக கேட்க செய்யும் மெஷின் லெர்னிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன் 15 மாடல்களுடன் செயற்கைக்கோள் சார்ந்த கனெக்டிவிட்டி அம்சம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன் 15 மாடலின் விலை 799 டாலர்கள் என்றும் ஐபோன் 15 பிளஸ் மாடலின் விலை 899 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×