ரூ. 12000 வரை சேமிப்பு.. ஐபோன் 15 வாங்கும் ஏர்டெல் யூசர்ஸ்க்கு ஜாக்பாட்

ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி.ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும்.
ரூ. 12000 வரை சேமிப்பு.. ஐபோன் 15 வாங்கும் ஏர்டெல் யூசர்ஸ்க்கு ஜாக்பாட்
Published on

ஆப்பிள் ஐபோன் 15 வாங்க நினைக்கும் ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள்? அப்படியெனில் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். ஐபோன் 15 வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் வங்கி சார்ந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

புதிய ஐபோன் 15 வாங்கிய 60 நாட்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் ஆக்டிவேட் செய்தால் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 10-ம் தேதி துவங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர் ஐபோனினை அமேசான் வலைதளத்தில் இருந்து வாங்கி இருந்தால், இந்த சலுகை நீட்டிக்கப்படும்.

அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆக்டிவேட் செய்ததும், ஏதேனும் ஒரு போஸ்ட்பெயிட் திட்டத்தில் ரிசார்ஜ் செய்ய வேண்டும். பிறகு ரூ. 200 மதிப்புள்ள பத்து கூப்பன்கள் பயனர்களுக்கு வழங்கப்படும். இதற்கான தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும். இந்த சலுகை ஏர்டெல் கார்ப்பரேட் சிம் கார்டுகளுக்கு பொருந்தாதது.

ஆனால், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் 60 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்யும் போது பயனர் மேற்கொள்ளும் ரிசார்ஜ் ஒன்றுக்கு ஒரு கூப்பன் வரை பயன்படுத்த முடியும். இதுதவிர பயனர்கள் விதிகளை பின்பற்றும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான கேஷ்பேக்-ஐ அமேசானிடம் இருந்து பெற முடியும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com