என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் நிறுவனம் தனது கேல்கஸி Z ப்ளிப் 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலின் லிமடெட் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் சத்தமின்றி கேலக்ஸி Z ப்ளிப் 3 போக்கிமான் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸட் மாத வாக்கில் கேலலக்ஸி Z ப்ளிப் 3 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 3 தாம் பிரவுன் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் பிஸ்போக் எடிஷனையும் அறிமுதம் செய்தது.
புதிய கேலக்ஸி Z ப்ளிப் 3 போக்கிமான் எடிஷன் சிவப்பு நிற பாக்ஸ் மற்றும் பல்வேறு பல்வேறு அக்சஸரீக்களுடன் வழங்கப்படுகிறது. இதில் போக்கிமான் பவுச், பிக்காச்சூ கிளயர் கவர் செட், போக்கிமான் கஸ்டம் பேக், போக்கிமான் கார்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களை அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களின் தீமுடன் அறிமுகம் செய்து இருக்கிறது. 2015 வாக்கில் கேலக்ஸி S6 எட்ஜ் ஐயன் மேன் எடிஷன், 2016 ஆம் ஆண்டு கேலக்ஸி S7 எட்ஜ் இன்-ஜஸ்டிஸ் எடிஷன் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படடன.
ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது போஸ்ட்பெயிட் சலுகை பலன்களில் சத்தமின்றி மாற்றி அமைத்து இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது அமேசான் பிரைம் சந்தா வேலிடிட்டியை ஒரு வருடத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு குறைத்து விட்டது. எனினும், இந்த நடவடிக்கை ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சலுகைகளில் வேலிடிட்டி தானாக குறைக்கப்பட்டு விட்டது.
தற்போது ஏர்டெல் போஸ்ட்பெயிட் இணைப்புகளில் அமேசான் பிரைம் சந்தா ரூ. 499, ரூ. 999, ரூ. 1, 199 மற்றும் ரூ. 1,599 போன்ற இணைப்புகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் இணைப்புகளுடனும் அமேசான் பிரைம் சந்தாவை வழங்கி வருகிறது. எனினும், இதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய அறிவிப்பின் படி ஏர்டெல் ரூ. 499, ரூ. 999, ரூ. 1,199 மற்றும் ரூ. 1,599 போன்ற போஸ்ட்பெயிட் பிளான்களுடன் ஆறு மாதங்களுக்கான அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இது ஏர்டெல் தேங்ஸ் பிளாட்டினம் ரிவார்ட்ஸ் பெயரில் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகைகளுடன் ஏர்டெல் நிறுவனம் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவை வழங்கி வந்தது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்தே அமலுக்கு வந்தது என ஏர்டெல் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயன்படுத்துவோர், இந்த சலுகைகளை பயன்படுத்தி வந்தால், ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா தொடர்ந்து வழங்கப்படும்.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்து இருக்கிறது.
விவோ நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y33s மற்றும் விவோ Y33T என இரண்டு Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களில் விவோ Y33s மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ Y33T ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வகையில், இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையும் இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது. விவோ Y33T ஸ்மார்ட்போனின் விலை ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 17 ஆயிரத்து 990 என மாறி உள்ளது. விவோ Y33s மாடல் விலையும் ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி இந்த ஸ்மாரட்போன் விலை ரூ. 17 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது.
விவோ Y33s மற்றும் விவோ Y33T ஸ்மார்ட்போன்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. இவை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஏற்கனவே பிரதிபலிக்கின்றன. இதுதவிர விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இரு மாடல்களும் புதிய விலையில் கிடைக்கும்.

விவோ Y33s அம்சங்கள்:
- 6.58 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர்
- 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
- 8GB LPDDR4x ரேம்
- 128GB (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 11.1
- 50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.8
- 2MP டெப்த் சென்சார்
- 2MP மேக்ரோ சென்சார், f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ Y33T அம்சங்கள்:
- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 8GB LPDDR4x ரேம்
- 128GB (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 11.1
- 50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.8
- 2MP டெப்த் சென்சார்
- 2MP மேக்ரோ சென்சார், f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/1.8
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆப்பிள் நிறுவனம் தனது பிரிபலமான ஐபோன் மாடல் விற்பனையை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐபோன் 14 சீரிஸ் வெளியீடு மட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11 சீரிஸ் மாடல்கள் விற்பனையை இந்த ஆண்டு நிறுத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 11 சீரிஸ் மாடல்கள் 2019 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.
மூன்று ஆண்டுகள் பழைய மாடல், ஐபோன் SE 3 மாடலுக்கு நேரடி போட்டியாளர் போன்ற காரணங்களுக்காக ஐபோன் 11 விற்பனை இந்த ஆண்டே நிறுத்தப்பட்டு விடும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ஐபோன் 11 மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 900 என துவங்குகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் SE 3 அல்லது ஐபோன் SE 2022 மாடலின் விலை ரூ. 43 ஆயிரத்து 900 என துவங்குகிறது.

விற்பனை நிறுத்தத்தை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் விலையை குறைக்கலாம் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ஐபோன் 12 சீரிஸ் விலை ரூ. 65 ஆயிரத்து 900 என துவங்குகிறது. ஐபோன் 12 விலையை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 45 ஆயிரத்து 672 ஆக குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை தற்போது 999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 170 என துவங்குகிறது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் 12 மாடலின் விலை தற்போதைய ஐபோன் 11 விலையில் கிடைக்கும். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட் ஐபோன் 13 சீரிஸ் விற்பனை அடுத்த சில ஆண்டுகளுக்கு தடையின்றி நடைபெறும்.
சியோமி பேட் 5 இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சியோமி பேட் 5 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த டேப்லெட் மாடலின் வெளியீட்டு தேதியையும் சியோமி அறிவித்து விட்டது. முன்னதாக ஃபிளாக்ஷிப் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதி நிகழ்விலேயே புதிய சியோமி பேட் 5 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. வெளியீட்டு தேதியை புது டீசர் மூலம் சியோமி அறிவித்து இருக்கிறது. தற்போதைய டீசரின் படி புதிய சியோமி பேட் 5 மாடலில் ஸ்டைலஸ், கீபோர்டு டாக் போன்ற அக்சஸரீக்களை இணைத்து பயன்படுத்துவதற்கான சப்போர்ட் வழங்கப்படும் என உறுதியாகி இருக்கிறது.

சியோமி பேட் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 11.2 இன்ச் 2560x1600 WQXGA 16:10 டிஸல்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10
- ஆக்டா கோர் கவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6GB LPDDR4X ரேம்
- 128GB / 256GB UFS 3.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 11
- 13MP பிரைமரி கேமரா
- 8MP செல்ஃபி கேமரா
- யு.எஸ்பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
- வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி
- 8,720mAh பேட்டரி
- 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
சீன சந்தையில் சியோமி நிறுவனம் சியோமி பேட் 5 மற்றும் சியோமி பேட் 5 ப்ரோ என இரு மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது. எனினும், சர்வதேச சந்தையில் சியோமி பேட் 5 மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையை போன்றே இந்தியாவிலும் சியோமி பேட் 5 மாடல் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்திய சந்தையில் புதிய சியோமி பேட் 5 அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் Mi வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இதன் விற்பனை நடைபெறும்.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் புது ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் பிரிவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இது பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போன் ரெட்மி 9 சீரிஸ், டெக்னோ ஸ்பார்க் 8 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர், 4GB ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் சோதனையில் 347 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 1127 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மாரட்போன் E6533 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் பியூரோ ஆஃப் இன்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (பி.ஐ.எஸ்.) வலைதளம் மற்றும் கூகுள் பிளே ஆதரவு கொண்ட சாதனங்கள் பட்டியலில் இடம்பெற்று இருந்தது.
முன்னதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இது டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே, யுனிசாக் T610 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 64GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 160 மணி நேரத்திற்கான பிளேபேக் டைம் கிடைக்கும்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு பிராண்டு ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி வருகிறது. இதுபற்றிய விவரங்கள் ஒன்பிளஸ் வலைதளத்திலேயே இடம்பெற்று இருந்ததாக டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார். நார்டு ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்களோ, அதன் அம்சங்களோ இடம்பெறவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மட்டும் தெரியவந்துள்ளது.
இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் நார்டு பிராண்டட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆகும். இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது உருவாகி இருக்கும் நார்டு பிராண்டட் ஸ்மார்ட்வாட்ச் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

தற்போதைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்வாட்ச் அந்நிறுவனத்தின் நார்டு சீரிஸ் சாதனங்கள் பட்டியலை குறைந்த விலை ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரியில் இருந்து ஸ்மார்ட்வாட்ச் வரை நீட்டித்து இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு பட்ஸ் மாடலை உருவாக்கி இருப்பதாகவும், இது ஏப்ரல் 28 ஆம் தேதி ஒன்பிளஸ் 10R மற்றும் ஒன்பிளஸ் நார்டு CE 2 லைட் 5ஜி மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் விலை ரூ. 5 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 8 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு வாட்ச் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்லீப் டிராக்கிங், ஸ்டெப் கவுண்ட்டர், ஸ்மார்ட்போன் நோட்டிபிகேஷன், மியூசிக் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M53 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 22 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய கேலக்ஸி M53 5ஜி ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி M52 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M53 5ஜி ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், 5000mAh பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி முந்தைய மாடலில் இருந்தபடியே வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸருக்கு மாற்றாக டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்படுகிறது.
புதிய சாம்சங் போன் ஆட்டோ டேட்டா ஸ்விட்சிங் வசதி கொண்டு, இந்த பிரிவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என சாம்சங் அறிவித்து இருக்கிறது. மேலும் 108MP பிரைமரி கேமரா கொண்டு அறிமுகமாகும் முதல் கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி M53 5ஜி மாடல் இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M53 5ஜி அம்சங்கள்:
- 6.7 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 6nm பிராசஸர்
- மாலி-G68 MC4 GPU
- 6GB / 8GB LPDDR4x ரேம்
- 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 4.1
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 108MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
- 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 2MP டெப்த் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 32MP செல்ஃபி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
- சாம்சங் பே
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி M53 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. இத்துடன் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய சாம்சங் கேலக்ஸி M53 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய GT Neo3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 29 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய தகவலை ரியல்மி இந்தியா சி.இ.ஒ. மாதவ் சேத் யூடியூபில் “AskMadhav” நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்தார்.
இத்துடன் 150W சார்ஜிங் கொண்ட GT Neo3 மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் GT Neo3 ஸ்மார்ட்போனின் 80W மற்றும் 150W என இரண்டு வேரியண்ட்களும் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகி விட்டது.

ரியல்மி GT Neo3 அம்சங்கள்:
- 6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோரா மீடியாடெக் டிமென்சிட்டி 8100 5nm பிராசஸர்
- மாலி-G510 MC6 GPU
- 6GB / 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 8GB / 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, OIS, f/1.88, LED ஃபிளாஷ்
- 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.25
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி, 80W சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
- 4500mAh பேட்டரி, 150W அல்ட்ரா டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்
வாட்ஸ்அப் செயலியில் உங்களின ப்ரோபைலுக்கு QR கோட் உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக இருந்து வருகிறது. இந்த செயலியில் உங்களின் ப்ரோபைலை இணைய முகவரி வடிவில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா 2.22.9.8 வெர்ஷனில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதே தகவலில் புதிதாக ஷேர் ப்ரோபைல் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு உங்களின் ப்ரோபைலை லிண்க் வடிவில் உருவாக்க முடியும்.
இந்த அம்சத்தை செயல்படுத்துவதற்கான பட்டன் செட்டிங்ஸ் டேபில், உங்களின் ப்ரோபைல் புகைப்படத்தின் அருகில் இடம்பெற்று இருக்கும். தற்போது வாட்ஸ்அப் செயலியில் உங்கள் ப்ரோபைலை QR கோட் வடிவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

- முதலில் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.
- அடுத்து திரையின் மேல் வலபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- இந்த மெனுவில் இருந்து செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- இனி QR கோட் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஐகான் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட் பெயருக்கு அருகில் இடம்பெற்று இருக்கும்.
- மேல்புறத்தில் உள்ள ஷேர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் QR கோட் உங்களின் கேலரியில் சேவ் ஆகி விடும்.
ஐபோனில் செய்வது எப்படி?
- ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.
- திரையின் கீழ்புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இனி வாட்ஸ்அப் அக்கவுண்ட் பெயருக்கு அருகில் உள்ள QR கோட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- மேல்புறத்தில் உள்ள ஷேர் ஐகானை கிளிக் செய்து QR கோடினை உங்களது கேலரியில் சேவ் செய்து கொள்ளலாம்.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புது ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மெல்ல ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கும் பணிகளை துவங்கி இருக்கிறது. இந்த வரிசையில், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த புது அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன் மாடலாக மோட்டோ G50 இருக்கிறது.
முன்னதாக இம்மாத துவக்கத்தில் மோட்டோ G200 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மோட்டோ G50 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G50 ஸ்மார்ட்போனிபல் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 12 அப்டேட் SIRF32.27-25 எனும் பில்டு நம்பர் கொண்டிருக்கிறது. இது பிரிட்டனில் விற்பனை செய்யப்பட்டு இருக்கும் XT2137-DS மாடலுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பிரிட்டனை தொடர்ந்து மற்ற நாடுகளில் விற்பனையாகி வரும் மோட்டோ G50 ஸ்மார்ட்போனிற்கும் இதே அப்டேட் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மோட்டோரோலா நிறுவனத்தின் சாஃப்ட்வேர் அப்டேட் பக்கத்தில் மோட்டோ G50 மாடலுக்கான ஆண்ட்ராய்டு 12 அப்டேட் இன்னும் வெளியாகவில்லை என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
எனினும், இந்த ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் பீட்டா வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் ஆண்ட்ராடய்டு 12 ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படலாம்.
டெலிகிராம் நிறுவனம் தனது செயலியில் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அப்டேட்டில் பல்வேறு புது அம்சங்களை வழங்கி இருக்கிறது.
குறுந்தகவல் செயலிகளில் புதுமை டெலிகிராம் நிறுவனம் தனது செயலியில் புது அப்டேட் வழங்கி வருகிறது. இந்த அப்டேட் செயலியின் நோட்டிபிகேஷன் டோன், கான்வெர்சேஷன் மியூட் செய்ய கஸ்டம் டைமிங், ஆட்டோ டெலிட் மெசேஜ், சிறப்பான ஃபார்வேர்டிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை வழங்கி இருக்கிறது.
கஸ்டம் நோட்டிபிகேஷன் சவுண்ட்:
தற்போது டெலிகிராம் செயலியில் உங்களின் மியூசிக் கலெக்ஷனில் இருந்தோ அல்லது வேறு ஏதேனும் சவுண்ட்களை அலெர்ட் டோனாக செட் செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்ய செயலியின் செட்டிங்ஸ் -- நோட்டிபிகேஷன்ஸ் -- சவுண்ட்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
இன்டிவிஜூவல் கான்வெர்சேஷன் அல்லது முழு குரூப்களை பெர்சனலைஸ் செய்ய புது டோன்கள் அல்லது சவுண்ட்களை செட் செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது குரூப்பில் இருந்து மெசேஜ் வருவதை, நோட்டிபிகேஷன் சவுண்ட் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.
கஸ்டம் மியூட் டியுரேஷன்ஸ்:
தற்போது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் நோட்டிபிகேஷன்களை வராமல் தடுக்க, அவற்றை பாஸ் செய்ய முடியும். சிறுது நேர உறக்கம் அல்லது வேறு ஏதேனும் பணி சூழலில் ஈடுபடும் போது நோட்டிபிகேஷன்களால் வரும் தொந்தரவுகளை இந்த அம்சம் மூலம் தவிர்க்க முடியும்.

ஆட்டோ டெலிட் மெனு:
ஆட்டோ டெலிட் அம்சத்தை ஏதேனும் ஒரு காண்டாக்டிற்கு ஆட் செய்ய முடியும். இந்த அம்சத்தை இரண்டு நாட்கள், மூன்று வாரங்கள், நான்கு மாதங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலக்கட்டம் வரை செட் செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்வதும் மிக எளிமையானது தான்.






