search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஏர்டெல்
    X
    ஏர்டெல்

    போஸ்ட்பெயிட் சலுகை பலன்களை சத்தமின்றி மாற்றிய ஏர்டெல்

    ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது போஸ்ட்பெயிட் சலுகை பலன்களில் சத்தமின்றி மாற்றி அமைத்து இருக்கிறது.

    ஏர்டெல் நிறுவனம் தனது அமேசான் பிரைம் சந்தா வேலிடிட்டியை ஒரு வருடத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு குறைத்து விட்டது. எனினும், இந்த நடவடிக்கை ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சலுகைகளில் வேலிடிட்டி தானாக குறைக்கப்பட்டு விட்டது. 

    தற்போது ஏர்டெல் போஸ்ட்பெயிட் இணைப்புகளில் அமேசான் பிரைம் சந்தா ரூ. 499, ரூ. 999, ரூ. 1, 199 மற்றும் ரூ. 1,599 போன்ற இணைப்புகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் இணைப்புகளுடனும் அமேசான் பிரைம் சந்தாவை வழங்கி வருகிறது. எனினும், இதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

     அமேசான் பிரைம்

    புதிய அறிவிப்பின் படி ஏர்டெல் ரூ. 499, ரூ. 999, ரூ. 1,199 மற்றும் ரூ. 1,599 போன்ற போஸ்ட்பெயிட் பிளான்களுடன் ஆறு மாதங்களுக்கான அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இது ஏர்டெல் தேங்ஸ் பிளாட்டினம் ரிவார்ட்ஸ் பெயரில் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகைகளுடன் ஏர்டெல் நிறுவனம் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவை வழங்கி வந்தது. 

    இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்தே அமலுக்கு வந்தது என ஏர்டெல் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயன்படுத்துவோர், இந்த சலுகைகளை பயன்படுத்தி வந்தால், ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா தொடர்ந்து வழங்கப்படும். 

    Next Story
    ×